பெண் தெய்வம்
1.தெய்வ தேடல்
இது பெண் தெய்வங்களுக்கான என் தேடல்...
இது ஏதோ ஆன்மிக கதை என்று மட்டும் நினைக்க வேண்டாம் ஃபிரண்ட்ஸ்! நம்மைப் போல் பிறந்து வளர்ந்த சாதாரண பெண், எப்படி பலரும் வணங்கும் தெய்வமானாள்?!!
நிறைய பெண்கள் ஏதோ வகையில் கொடுமைப் படுத்தப் பட்டு இறக்கிறார்கள்... ஆனால் ஒரு சிலர் மட்டும் தெய்வமானது எப்படி? என்ற என் தேடலை சொல்கிறேன்...
ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு குடும்பத்திலும் கூட பெண் தெய்வ வழிபாடு நடந்து வருகிறது.
ஒரு பெண் அல்லது ஆண் ஒரு சிலரால் கொடுமைப் படுத்தப்பட்டோ. .. அல்லது ஊருக்கு நல்லது செய்ததால் இறந்தோ, ஊருக்கு நல்லது என்று பலிகொடுத்தோ, திருமணம் முடியும் முன்னரோ, பிரசவ காலங்களில் இறந்தோ போனால்... என்று பல்வேறு காரணங்களால் இறக்கும் ஒரு சில பெண்களை மட்டும் தெய்மாக வழிபடுகின்றனர் ஏன்?
ஒரு பெண் இந்த உலகில் தோன்றி மணம் முடிக்காமல் கன்னியாக மறைந்தால் அவளை வழிபடும் பண்பாடு நம் கிராமங்களில் தொடர்ந்து வருகிறது.
தமிழர் குடும்பங்களில் நோயாலோ, விபத்தாலோ மடிந்து விட்ட கன்னியரை தெய்வமாகக் கருதி வணங்குகின்றனர்.
நாட்டுப்புற மக்களால் வழிபடப்பெறும் இத்தெய்வங்கள் நாட்டுப்புறத் தெய்வங்களாகும்.
இத்தெய்வங்கள் மக்களுள் மக்களாக வாழ்ந்து, தானாகவோ, ஊர் நன்மைக்காகவோ அல்லது குறிப்பிட்ட சிலரால் வன்கொலை செய்யப்பட்டோ உயிரிழந்தவர்கள். அதிலும் குறிப்பாக பெரும்பாலான பெண் தெய்வங்கள் கொல்லப்பட்டு இறந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
நம்மைப் போல கை-கால் உள்ள மனிதர்கள்- கொல்லப்பட்டதால்- இரக்கத்தின் பேரிலும், பயம் அல்லது பக்தியின் காரணமாகவும் கும்பிடப் பட்டவர்கள் என்பது இவர்களைப் பற்றிய கதைகளின் மூலமாக நமக்குத் தெரியவருகிறது.
ஊரில் ஏற்படும் நோய்க்கும், மழை பெய்யாமைக்கும் இத்தெய்வங்களே காரணம் என்று நம்பினர். எனவே அவற்றுக்கு வழிபாடுகள் செய்து மக்கள் தெய்வங்களாக வணங்கினர்.
இப்பெண் தெய்வங்கள், ஊர்த் தெய்வங்கள், பொதுத் தெய்வங்கள், இனத்தெய்வங்கள், குலதெய்வங்கள், வீட்டுத் தெய்வங்கள், பத்தினித் தெய்வங்கள், காவல் தெய்வங்கள், எல்லைத் தெய்வங்கள் எனப் பலநிலைகளில் வணங்கப்படுகின்றன.
பெருந்தெய்வங்களைப் போல தினசரி பூசைகளோ, படையல்களோ இத்தெய்வங்களுக்குச் செய்வதில்லை ஆனால் குறிப்பிட்ட காலங்களில் விழா எடுத்து வழிபடுகிறார்கள்...
அந்தப் பெண் தெய்வங்களும் வேண்டுவோருக்கு அருள் புரிவது, நம்பியவர்களின் பிரச்சனை யைத் தீர்ப்பது.... கேட்ட வரங்களைத் தருவது... போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுவதைக் காண்கிறேன்.
இவ்வளவு சக்தி, இறந்த பின் வெளிப்படுகிறது என்றால் வாழும் போதும் அந்த சக்தி இருந்திருக்கும்... உணராமல் இருந்திருக்கலாம்.
இன்று, பல இன்னல்களை சந்திக்கும் பெண்களுக்கும் அந்த சக்தி இருக்கலாம்.... ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து இன்னல் இழைக்கப்பட்டு அதிலிருந்து அவள் வெளிவருகிறாள் என்றால் நிச்சயம் உங்களிடம் சக்தி இருக்கும். உணர முயற்சி செய்து நீங்களும் தப்பித்து, பலரை யும் காப்பாற்றினால்...
இதில் வரும் எதுவும் சொந்த கற்பனை அல்ல...
இந்த மனித தெய்வங்களைப் பற்றிதான் எழுதப்போகிறேன்...
உங்களுக்கும் பிடித்திருந்தால் மட்டும் தொடருகிறேன்...
---------*********---------
1) கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன்.
3) பேச்சியம்மன்
0 Comments