- அக்கி ரொட்டி
- (அரிசி ரொட்டி)
- அரிசி மாவு _ 1கப்
- பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது -1
- துருவிய கேரட் - 1
- தேங்காய் - ஒரு மூடி
- பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -2
- கருவேப்பிலை - இரண்டு குத்து
- கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
- சீரகம் - ஒரு ஸ்பூன்
- இஞ்சி துருவல் - 1ஸ்பூன்
- பெருங்காயத்தூள் - சிறிதளவு
- உப்பு - தேவையானஅளவு
- எண்ணெய் - தேவையானஅளவு
செய்முறை:-
1. ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு மற்றும் பொடியாக அரிந்த வெங்காயம், துருவிய கேரட் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்
2. அரிசி மாவு கலவையுடன் பொடியாக அரிந்த இஞ்சி, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகள், பொடியாக அரிந்த பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
3. பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து ரொட்டி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
4. நன்கு பிசைந்த மாவில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
5. தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஆரஞ்சுப் பழ அளவு மாவு எடுத்து உருட்டி சூடான தவாவில் போட்டு, தண்ணீர் (அ) எண்ணெயை கையில் தடவி, அப்படியே ரொட்டி போல் தட்டவும். அல்லது ஒரு வாழை இலையில் அல்லது பால் கவரில் மெல்லிய ரொட்டிகளாக தட்டி, ஆங்காங்கே விரல்களால் ஓட்டையிட்டு தோசைக்கல்லில் போடவும்.
6.ஒருபுறம் சிவந்த பின் மறுபுறம் திருப்பி போட்டு எண்ணெய் விட்டு சிவக்கவிட்டு எடுக்கவும். அருமையான சுவையான கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டி தயார்.
இதற்குத் தொட்டுக் கொள்ள புதினா/கொத்தமல்லி சட்னி சுவையாக இருக்கும்.
0 Comments