44
தூர நின்ற நிலவெனக்கு
தூது சென்றதால்
கண்ணில் தெரியும் மேகன்(ம்)
கையில் வந்ததே...
🌹🌹🌹🌹🌹🌹
மிருத்திகாவை, செண்பகம் வீட்டில் விட்டுவிட்டு, சிபிக்காக காத்திருந்தான் மேகன்.
சிபி,
பாலசௌந்தரியை, விக்னேஷ் வீட்டில் விட்டுவிட்டு,
அடுத்தநாள் கல்யாண வேலைகளை ஆரம்பித்தால்தான் ஞாயிற்றுக்கிழமை கல்யாணம் வைத்துக்
கொள்ளலாம் என்று விக்னேஷிடம் கூறி விட்டு, செண்பகம் வீட்டை நோக்கிச்
சென்றான்.
சிபி வந்ததும் மேகன் புறப்பட, மிருத்திகாவும் கிளம்பினாள்.
"நீ ஏன் எங்க கூட வர்ற?" என்று
மேகன் கேட்டான்.
"என்னை சிபி அண்ணா வீட்ல தங்க வைக்கிறதாத்தானே சொன்னீங்க?" என்று கேட்டாள்
மிருத்திகா.
"ஓ! அதுவா. உங்கம்மா இருந்ததால பொய் சொன்னேன். மறுபடியும் எந்த வில்லங்கமும்
பண்ண மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? அதான் அப்படிச் சொன்னேன். நீ இங்கேயே
இரு." என்று கூறி விட்டு சிபியுடன் கிளம்ப,
சிபி, செண்பகத்தைப் பார்த்து, "நீயும் தயாராக இரு. ஞாயிற்றுக்கிழமை மேகனோட என் கல்யாணம் நடக்கனும்." என்று கூறவும் வீட்டினர்
அனைவருக்குமே அதிர்ந்தனர்.
"என்னப்பா உளறுற மேகனை நீ கல்யாணம் பண்ணிக்கப்
போறியா? புத்தி தடுமாறிபோச்சா?" என்று செண்பகத்தின் அம்மா சிரித்தபடி கேட்ட,
"டேய்! நீ ஏன்டா சம்பந்தமில்லாமல் என் கல்யாணத்துல வில்லங்கம் பண்ற? மிருத்திகாவைப்
பாரு. உன்னை, அண்ணான்னு கூப்பிட்டாலும் தர்மஅடி கொடுக்குறதுல மட்டும் வஞ்சகமே
இல்லாம குடுப்பா... நீ அடி வாங்க தயாராயிட்ட. ஆனா என்னால அடி வாங்க
முடியாது." என்றான் மேகன்.
"என்னைப் பேச விடுறீங்களா?" என்று சிபி கேட்டான்.
"நீ பேசுனதுனாலதானே அதிர்ச்சில இருக்கோம்." என்று மேகன் கலாய்க்க,
"கல்யாணம் எனக்கும், மேகனுக்கும் இல்லை. ஒரே மேடையில மிருத்திகாவுக்கும்,
செண்பகத்துக்கும் தான் கல்யாணம்." என்று சிபி மீண்டும் உளற,
"கதிர் தானடா இப்படிப் பேசுவான். நீ இப்படிப் பேசுற?" என்று மேகன்
கேட்டான்.
"ஒரே மேடையில..."
"மறுபடியும் ஆரம்பத்தில இருந்தா? டேய்!"
ஒன்றும் பேசாமல் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டான் சிபி.
"என்ன? வீட்டுக்கு வரலயா?" என்று மேகன் கேட்டான்.
"வர்ர்றேன்." என்றவன், மிருத்திகாவைப் பார்த்து,
"மிருத்திகா நீயாவது இந்த அண்ணனுக்கு உதவும்மா." என்று கூறினான்.
"சொல்லுண்ணா! " என்றாள் மிருத்திகா மேகனையும் பார்த்தவாறு.
"உனக்குக் கல்யாணம் நடக்கப்போற ஞாயிற்றுக்கிழமை
அன்னைக்கே, நானும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்." என்றான் கூலாக.
"டேய்! எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சாதாரணமா சொல்ற? முதல்ல பொண்ணு யாரு?
அடுத்து உன்னோட அப்பாம்மாவுக்குச் சொல்லிட்டியா?" என்று மேகன் கேட்டான்.
"அப்பாவும் அம்மாவும் நாளைக்கே இங்கே வந்துடுவாங்க."
'செண்பகத்தைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்
போறேன்னு சொல்லப்போறானோ?' என்று தோன்றினாலும்,
"பொண்ணு யாருன்னு சொல்லலையே டா? " என்று மேகன் கேட்டான்.
"வந்து தப்பா எடுத்துக்காதடா... மிருத்திகாவைக் காணாம தேடிக்கிட்டு இருக்கும்
போது நான் சுயநலமா இருந்ததா நினைக்காதடா. செண்பாவுக்கு உடம்பு சரியில்லைனு
அவளுக்குத் துணையா ஆஸ்பத்திரிக்குப் போனேன்ல, அப்ப மனசுல தோணுச்சுடா கடைசிவரை ஏன்
அவளுக்குத் துணையா இருக்கக்கூடாதுன்னு. எங்க வீட்ல சொன்னேன். முதல்ல
யோசிச்சாங்க. நான் திடமா இருக்கிறதால ஒத்துக்கிட்டாங்க." என்று கூறிவிட்டு
அனைவரின் முகத்தையும் பார்த்தான் சிபி.
"அவளுக்குக் கல்யாணம்...." என்று மிருத்திகா ஆரம்பிக்கவுமே,
"போதும் மா நீங்க விட்ட புருடா." என்று சிரித்தான் சிபி.
"புருடா வா?"
"ம்ம்? புளுகு மூட்டைனு அர்த்தம்."
"என்ன சொல்றீங்க ண்ணா? "
"அம்மா 'பாசமலரே'! நீயும் உன் தோழியும் உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு
ஊரை ஏமாத்திக்கிட்டிருந்தது எனக்குத் தெரிஞ்சுடுச்சு." என்று சிபி கூறவும்,
சிபியிடம் மேகன்தான் உண்மையைச் சொல்லியிருப்பானோ? என்று நினைத்த மிருத்திகா,
"ராஸ்கல்! நீங்க தானே எல்லாத்துக்கும் காரணம்?" என்று மேகன் மேல்
பாய்ந்தாள்.
"அடிப்பாவி! உன்னையை கரெக்ட் பண்றதுக்குள்ளயே என் டப்பா டான்ஸ் ஆடிடுச்சு. இதுல
இவங்க சேர்ந்ததுக்கு நான் எப்படி டி காரணம் ஆவேன்." என்று மேகன் பதற,
"புத்தி போகுது பாரு... செண்பா
பத்தின உண்மையை நீங்கதானே சிபியண்ணா கிட்ட சொன்னது?" என்று மிருத்திகாக்
கேட்டதும், மேகன் பதில் சொல்லும் முன், சிபி மேகனிடம்,
"அப்போ உனக்கு முன்னாடியே செண்பாவுக்கு கல்யாணம் ஆகாத விஷயம் தெரியுமாடா?"
எகிற
"ப்ச்! தெரியும்டா... ஆனா சொல்றதுக்கு சமயம் வரல."
"என்ன சமயம் டா உனக்கு வரனும்?"
"இப்ப நீ வீட்டுக்கு கிளம்புறியா இல்லையா?"
"வர்றேன்... வந்து தொலைக்கிறேன்."
"அச்சச்சோ! வந்து தொலைக்கிறேன்லாம் சொல்லக்கூடாதுங்க. " என்று செண்பகம்
வேகமாக சிபியிடம் கூறவும்,
"என்னது? சொல்லக்கூடாது "ங்க" வா?
செண்பா நீயா இது?" என்று அனைவரும் ஆச்சரியத்தில் வாயைத் திறக்க,
"பின்ன? கல்யாணம் பண்ணிக்க போறவரை வாடா போடா ன்னா சொல்றது?" என்று
செண்பகம் வேகமாக ஆரம்பித்து வெட்கத்துடன் முடிக்கவும்,
"செண்பா! வெட்கமெல்லாம் கூட வருமா உனக்கு?" என்று மிருத்திகா சிரிக்க..
"அதானே மிருத்திகாவோட தோழியா இருந்து கிட்டு உனக்கு வெட்கமெல்லாம் கூட
வருதே!!" என்று மேகன் கலாய்க்க,
கண்களைச் சுருக்கி மேகனைப் பார்த்த
மிருத்திகா,
"படவா தனியா மாட்டு ஒன்ன வச்சுக்கிறேன்." என்று பற்களுக்கிடையே
வார்த்தைகளை மென்று துப்பினாள். அதைக்கேட்டு மேகனின் கண்களில் குறும்பு மின்ன,
"வச்சுக்கிறியா? அப்ப கல்யாணம்?" என்று ஹஸ்கி வாய்சில் கேட்க,
"ம்ம்ம்? அது... உங்க தாத்தாவை பண்ணிக்கிறேன்." என்று தலை ஆட்டி
மிருத்திகா பேசிய விதத்தில் சிரித்துவிட்டான் மேகன்.
"உங்க தாத்தாவைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றேன் சிரிக்கிற?" என்று
மிருத்திகா செல்லமாக கோபப்பட,
"பரவாயில்ல விடு! அதான் என்னை வச்சுக்கிறேன்னு சொல்லிட்டியே?" மீண்டும்
யாருக்கும் கேட்காத குரலில் ரகசியம் மேகன் பேச, வந்த கோபத்தில் அருகில் ஜாடியில் இருந்த தண்ணீர் மொத்தத்தையும் மேகன் மேல்
ஊற்றிவிட்டாள் மிருத்திகா. ஊற்றிய பிறகே தான் என்ன செய்கிறோம் என்று
மிருத்திகாவிற்கு உரைக்க,
"அச்சோ! சாரி! சாரி! சாரி!" என்று வேகமாக சாரி கேட்டபடியே மேகனை தன்
சேலை முந்தானையில் துவட்டி விட்டாள்.
"நாங்கல்லாம் இருக்கோம்!" என்று சிபி, செண்பாவும் கலாய்க்க,
செண்பகத்தின் அம்மா வெட்கப்பட்டு அறைக்குள் ஓடிவிட்டார்.
"இவங்க ஏன் ஓடுறாங்க? "என்று மேகன் திரு திரு வென விழித்தபடி கேட்க,
"பின்னே? எங்க முன்னாடி நீங்க ரொமான்ஸ் பண்ணினா?" என்று சிபி சிரிக்க,
"ரொமான்ஸா?"
"முதல்ல உங்களைக் கண்ணாடியில் பாருங்க... அப்புறம் எங்கிட்ட பேசுங்க."
என்றாள் செண்பா மேகனிடமும் மிருத்திகா விடமும்.
சட்டென்று மேகனிடமிருந்து தள்ளி நின்று மேகனைப் பார்த்தாள் மிருத்திகா. தலை,
முகம், சட்டையெல்லாம் நனைந்து போயிருக்க மேகனைப் பார்க்கும் பொழுது
மிருத்திகாவிற்கு ஒரு மாதிரி ஆனது. அவள் மனநிலை புரிந்த மேகன் மிருத்திகாவை
நெருங்க,
"டேய்!" என்று மேகனை பின்னாலிருந்து பிடித்தான் சிபி.
"ப்ச் விடுடா." என்று மேகன் சிபியின் கையைத் தட்டிவிட,
"அடப்பாவி பச்சை பிள்ளைகள் முன்னாடி என்னடா பண்ற?" என்று சிபி
கேட்டதும், "களுக்" என்று சிரித்துவிட்டாள் மிருத்திகா.
"கெடுத்துட்டியேடா.... அடேய்!.... கரடி!! பச்சை புள்ளையா? யாரு? நீயா டா?
அதுசரி, நீங்க ஏன்டா எங்களையே பார்க்கிறீங்க?
அவளே எப்பவாவதுதான் லவ் லுக் விடுவா. . ம்ம்ம்..." என்று பொருமி... உருமி..
மிருத்திகாவைப் பார்த்தபடியே சிபியுடன் சென்றான்.
மேகனும், சிபியும் தெருவின் முனை திரும்பும்வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, வீட்டினுள் வந்தனர் செண்பகமும், மிருத்திகாவும்.
"வா! நாம சாப்பிடுவோம்." என்று கூறி, மிருத்திகாவை
அழைத்துச் சென்றாள் செண்பகம்.
"அது இருக்கட்டும். சிபிக்கு. எப்படி தெரிந்தது? உனக்கு கல்யாணம் ஆகலன்னு."
என்று மிருத்திகா கேட்டதும், 'மறந்துட்டாள்னு நினைச்சனே' என்று நினைத்தவாறு
மிருத்திகாவைப் பார்த்தாள் செண்பகம்.
அதேவேளையில் மேகனின் காரை சிபி ஓட்ட, அருகில்
மேகன் அமைதியாக அமர்ந்திருந்தான்.
"என்னடா யோசனையெல்லாம் பலமா இருக்கு... " என்று மேகனைப் பார்த்து
கேட்டான் சிபி.
"எவ்வளவு பெரிய பிரச்சினையிலிருந்து தப்பிச்சிருக்கோம்னு நினைக்கும் போது
மனசு ரொம்ப கலங்குதுடா. ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாரு... மிருத்திகா மட்டும்
தைரியமா, புத்திசாலித்தனமா செயல்படலைனா நமக்கு ரொம்ப கஷ்டமாயிருந்திருக்கும்.
" என்று மேகன் நடந்த நிகழ்வுகளின் பாதிப்பில் கூற,
"ஆமாடா! செண்பாவும் அதைத்தான் சொன்னா... மிருத்திகா பிரச்சனை வரும் போது
பயப்படவோ, டென்ஷனோ ஆக மாட்டா. தைரியமா இருந்து
தப்பிக்கும் வழியைத்தான் யோசித்தபடியே இருப்பா... நான் அப்படியில்லை சிபி,
அழுதுடுவேன் யாராவது வந்து காப்பாத்த மாட்டாங்களான்னு கடவுளை வேண்டுவேன். .னு
சொல்றா. நானும் அந்த நிமிஷம் அரண்டுட்டேன். மிருத்திகா
தைரியமான பொண்ணு டா. " என்றவன், மேகனிடம்,
"நீயெல்லாம் ஒரு ஃபிரண்ட் டா டா? இவ்வளவு நேரமா என் பக்கதுதுலதான் இருக்க...
செண்பாவும் நீயும் எப்படி சேர்ந்தீங்கன்னு ஒரு வார்த்தை கேட்டியாடா?" என்று
சிபி அலுத்த குரலில் கூற,
"ஹேய்! ஆமாண்டா எப்படி? "என்று உற்சாகமானான் மேகன்.
"அன்னைக்கு ஆஸ்பத்திரிக்கு போனோம். டென்ஷன் தான் காரணம் உடம்பு வீக்கா
இருக்கு. வேற ஒன்னுமில்ல என்று டாக்டர் சொல்லியும் சிபி என்னை ஹாஸ்பிடலில் அட்மிட்
பண்ணச் சொல்லிட்டார். என்னை எப்படி கவனிச்சுக்கிட்டார் தெரியுமா? எனக்கு முடியலைன்னதும்
அவர் கண்கள்ல வேதனையப் பார்த்தேன். அப்பத்தான் நீ அடிக்கடி சொன்னது ஞாபகத்துக்கு
வந்துச்சு. கல்யாணம்கிறது ஒருநாளில் முடியிற விஷயமில்ல. கடைசிவரை வர்ற ஒரே உறவு.
நமக்கு வலிக்குதுன்னா அந்த வலி அவர் கண்களில் தெரியனும். நமக்கு ஒரு சந்தோஷம்னா
அந்த சந்தோஷத்தை அவரிடமிருந்து நாம் தெரிஞ்சுக்கனும். நம்மைப் பார்க்கும் போது
அவர் கண்கள்ல நமக்கான காதல் தெரியனும். னு நீ அடிக்கடி சொல்வ. ..அப்பல்லாம் நான்
நினைப்பேன் இதெல்லாம் கதையிலும், கனவுகளிலும் தான் நடக்கும்னு. ஆனா எனக்கான காதலை
சிபி கண்கள்ல பார்த்தேன். அப்பவே முடிவு பண்ணிட்டேன் அவர்தான் என் கணவர்னு."
என்று கண்களில் கனவு மிதக்க, முகமெங்கும் வெட்கம் படற கூறினாள் செண்பகம்.
"வாவ்! வாவ்! என்ன ஒரு அழகான காதல்! திருக்குறள் மாதிரி அற்புதமா இரண்டே
வரிகளில் உங்களோட காதலை புரிய வச்சுட்ட. ஆமா!..
யார் முதல்ல காதல சொன்னது?" என்று மிருத்திகா செண்பகத்திடம் கேட்டாள்.
"நான் தான்டா காதலச் சொன்னேன். இவதான் என் மனைவின்னு தோணிடுச்சு பிறகு ஏன் காலத்தக் கடத்தனும்? அதான் ஆஸ்பத்திரியில் வச்சே என் காதலை
சொல்லிட்டேன்." என்று சிபி சிறு வெட்கத்துடன் கூறினான்.
"செண்பாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு அவ சொல்லியிருந்தாளே சிபி! பின்ன எப்படிச்
சொன்ன?" என்று மேகன் கேட்டதும்,
"அவள எனக்குப் புடிச்சதுமே அவளைப் பத்தி முழுசா தெரிஞ்சக்கனும்னு நினைச்சேன்.
எங்கோ மனசில ஒரு ஓரத்துல ஒரு நம்பிக்கை இருந்த்ச்சு மேகா! செண்பாவுக்குக் கல்யாணம்
ஆயிருக்காதுன்னு... உடனே நான் அவ அம்மாகிட்ட,
"மிருத்திகாவுக்கு கல்யாணம் ஆகப்போகுது. அப்புறம் செண்பாவுக்கு தனிமையா
இருக்கும். அவளுக்கும் ஒரு நல்லது நடந்துட்டா நல்லாயிருக்கும்ல?” என்று பொதுவாக
கேட்டேன். அவங்கம்மா எனக்கு விஷயம் தெரிஞ்சுதான் கேட்கிறேன்னு நினைச்சு, அவங்களோட
ஆதங்கத்தை சொல்ல ஆரம்பிச்சாங்க,
'இவளுக்கு ஒரு கல்யாணத்தை முடிச்சுட்டா நான் நிம்மதியா இருப்பேன். என்ன செய்ய
ஊரெல்லாம் கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்லி வச்சுட்டா. .. எனக்கு என்ன பண்றதுன்னே
தெரியல.”என்றார். போதாதா? நேரா செண்பாட்ட போயி, என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?
கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டுட்டேன்."
"அப்புறம்"
"திடீர்னு வந்து கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டா எப்படி இருக்கும்? அன்னைக்குன்னு பாத்து விளையாட்டுக்குக் கூட கோபம்
வரமாட்டேன்ருச்சு. சிரிச்சுட்டேன்." என்றாள் செண்பகம் மிருத்திகாவிடம்.
"அப்புறம்?"
"அப்புறம் என்ன? கதையா சொல்லிக் கிட்டிருக்கேன்?" என்று சிபி மேகனிடமும்.
செண்பகம், மிருத்திகாவிடமும் கூறி சிரித்தனர்.
திட்டமிட்டபடி இரண்டு கல்யாணமும் நடந்ததா?
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்
❤❤ ❤ ❤ ❤ ❤
0 Comments