சிம்டாங்காரன்: அத்தியாயம்-43

 

43 

அடுத்தவரையும் வாழவைக்கக்கூடியதுதான்

  காதல்...

அடுத்தவர் வாழ்க்கையை அழித்தால் அது

காதல் அல்ல...

🌹🌹🌹🌹🌹🌹

"நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சதும், என்னோட ஜாதகத்தை, உறவினர்களிடமும், கல்யாண புரோக்கரிடமும் கொடுத்து, சந்தோஷமாக எனக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார் என் அப்பா!

 

கல்யாண புரோக்கர் கொடுத்த என் ஜாதகத்திற்கு பொருந்திய மாப்பிள்ளைகளின் புகைப்படத்தை என்னிடம் காட்டினார் என் அப்பா. அதில் மேகனின் புகைப்படமும் இருந்தது. எனக்கு ஆச்சரியமாகிவிட்டது.

 

   'அவன் கோமாவிலிருந்து வெளியேறி பிழைத்து விட்டானா? அது உண்மைனா, உன்னைத் தேடிவராம, எதுக்கு வேறு பெண் பார்க்கிறான்?' என்று பல சந்தேகங்கள்.

 

   நான் என் அப்பாவிடம் கூறவும், அவர் கல்யாண புரோக்கரை அழைத்து விபரம் கேட்டார். கல்யாண புரோக்கருக்கு, மேகனைப் பற்றிய முழுவிபரம் தெரியவில்லை. மேகனுடைய தாத்தா, நான்கு பெண்களை மட்டும் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறினார். எங்கப்பா கல்யாண புரோக்கருக்கு மூன்று மடங்கு கமிஷன் தருவதாகக் கூறி, மேகனுக்கு என்னை திருமணம் முடிச்சு விடச் சொன்னார். புரோக்கர் ரொம்ப சந்தோஷமாக ஒத்துக்கொண்டார்.

 

மேகன் பார்க்கப் போகும் மற்ற மூன்று பெண்கள் யாரென்று பார்த்தேன்... அதிலும் உன் பெயர் இல்லை. அவன் உன்னை மறந்துட்டானா? அல்லது உன்னாலதான் கோமா வரை போயிட்டு வந்ததை நினைச்சு பயந்து, வேற பெண் பார்க்கிறானு எனக்குப் புரியல.

 

எதுவயிருந்தாலும் பரவாயில்ல சமாளிச்சுக்கிடலாம்னு   மேகனை நான் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு முடிவுடுத்தேன். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்துச்சு.

 

ஒன்னு, உன் கண் முன்னாடியே, யாருக்காக அழகுவை கல்யாணம் பண்ணிக்காம, பெரிய காதல் தேவதைன்னு நினைச்சுக்கிட்டு காத்திருக்கியோ, அவனை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அதைவிட பெரிய தண்டனை உனக்கு இருக்காது...

 

இரண்டாவது, உன் அண்ணன் மாதச் சம்பளக்காரன். அவனை கட்டிக்கிறதை விட, இந்த ஊரிலயிருக்கும் பெருந்தனக்காரவங்கள்ல ஒருத்தரோட பேரனைக் கட்டிக்கிட்டா காலத்துக்கும் நான் ராணி மாதிரி வாழலாம்.

 


 

இதை எங்கப்பாவிடம் நான் சொன்னதும் எங்கப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம்...

 

புரோக்கரை கூப்பிட்டு, மேகன் என்னை முதலாவதாகப் பெண் பார்க்க ஏற்பாடு செய்யச் சொன்னார். அந்த புரோக்கர், மேகனுக்கு வரன் ஏற்பாடு செய்த புரோக்கரை அழைத்து வந்து என் அப்பாவிடம் அறிமுகப்படுத்த, மேகன் வீட்டு புரோக்கரிடம் அப்பா, மேகனுக்கு என்னை முதலில் காட்டும் ஐடியாவை கூறினார். அதுக்கு அந்த அறிவுகெட்டவன்,

 

நாலு பொண்ணப் பாக்கனும்னு வர்றாங்க.. முதல்ல யாரப் பார்த்தாலும், அந்தப் பெண்ணைப் பிடிச்சேயிருந்தாலும், எதுக்கும் அடுத்த பெண்ணையும் பார்த்துட்டு முடிவெடுக்கலாம்னு தான் யாராயிருந்தாலும் நினைப்பாங்க. எதுக்கு ரிஸ்க் எடுக்கனும்?

 

இந்த நாலு பொண்ணுங்கள்ல உங்க பொண்ணுதான் அழகு, வசதியில் பெரிசு.

 

முதலில் நாலு பொண்ணுல சுமாரான பொண்ண காட்டுறேன். ஒருவேளை அந்த பொண்ணப் புடிச்சுப் போனாலும் இதவிட நல்ல சம்மந்தம்னு சொல்லி உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுறேன்... போதுமா?  என்று கேட்டார்.

 

  மேலும் மேகன் வீட்டினர் ஏதோ நான்கு பெயர்களைக்கூறி அந்தப் பெயர் உள்ள பெண்களின் ஜாதகத்தை மட்டுமே வாங்கி பொருத்தம் பார்த்ததாகவும் கூறினார். உனக்கு இன்னேரம் மேகன் சொல்லியிருப்பானே? விடுபட்ட நாலாவது பெண், அகிலா என்ற அகிலாண்டேஸ்வரி நான்தான்.

 

எங்களுக்கும் அவன் சொன்ன வெங்காய ஐடியா புடிச்சு சரின்னு சொன்னோம்.

 

மேகனுக்கு என்னைப் பிடிக்க வேண்டுமே என்ற டென்ஷனிலும், மற்ற மூன்று பெண்களை பிடிக்கவிடாம செய்யனுமேன்ற பதட்டத்துலயும். ஹாஸ்டல்ல இருக்கும் உன்னை அவனோ. அவனை நீயோ பார்க்க வாய்பில்லை. அப்படியே பார்த்தாலும் நீதான் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு எல்லோரிடமும் சொல்லி வச்சுருந்தியே அந்த காரணத்தாலும், ஏதோ வகையில் உன்னை பிடிக்காம கழட்டிவிட்டதால தான வேற பொண்ணு பாக்குறான்ற மெத்தனத்துல உன்னைக் கவனிக்காம விட்டுட்டேன்.

 

எப்ப? எப்படி? நீயும் அவனும் பாத்துக்கிட்டீங்கன்னு இந்த நிமிஷம் வரை எனக்குப் புரியல.

 

மேகன் மற்ற மூன்று பொண்ண பார்த்துட்டு யாரையும் பிடிக்கலைன்னு சொன்ன சந்தோஷத்தில் இருந்தபோதுதான். புரோக்கர் வந்து, இனி யாரையும் பெண் பார்க்க வேண்டாம்னு மேகன் வீட்ல சொன்னதாகவும், மேகன் வீட்ல திடீர்னு ஏதோ பூஜை செய்யப்போறதா தெரிஞ்சவங்களுக்கு மட்டும் அழைப்பு வச்சிருக்காங்கன்னும் சொன்னார். எங்களுக்கு சந்தேகம் வந்தது. யாரோ ஒரு பொண்ணை முடிவு பண்ணிட்டாங்களோன்னு. அது யாருன்னு தெரிஞ்சுகிட்டு வரத்தான் நான் அந்த பூஜைக்கு மேகன் வீட்டு புரோக்கர் மனைவியோட வந்தேன். நீ அங்க இருப்பேன்னு நான் நினைக்கவேயில்லை. நீ எங்கே என்னைப் பார்த்தாய்? என்னவோ அந்த வீட்டு மருமக மாதிரில அலட்டிக்கிட்டிருந்த.  எனக்கு அவ்வளவு கோபம் வந்துச்சு. . ஆனா அப்போதும், புரோக்கரும் என் அப்பாவும், மேகனை, என்னைப் பெண் பார்க்க வர வைக்கிறேன் என்றார்கள். ஆனால் நீங்க ரெண்டு பேரும்  எப்படி சேர்ந்தீங்கன்னு தெரியல ஆனா உங்களைப் பிரிச்சுடனும்னு முடிவு பண்ணி, உங்க அம்மாவுக்கு ஃபோன் பண்ணி மறுபடியும் நல்லா வெறியேத்தி அனுப்பினேன்.

 

  ஆனா உங்கம்மாவையே மேகன் மிரட்டிட்டான்.  அப்பத்தான் நான் வேற திட்டம் போட்டேன். உன்னை அழகுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுன்னு. ஆனா இந்த முறை அழகு வேற சொன்னான். நீ மேகன்கூட ரெண்டு தடவ ஓடினவ.. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம்பூரா எப்ப ஓடுவான்னா காவல் காக்க முடியும்னான். அவன், உன்னைக் கல்யாணம் பண்ண ஆசைபட்டிருந்தா கூட நான் யோசிச்சிருப்பேன்.. அழகுவைக் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருந்துடுவியோன்னு. அழகுவே உன்னைக் கல்யாணம் பண்ணிக்க  யோசிக்கவும்தான் எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. நான் அவன்கிட்ட சொன்னேன் அவளைக் கட்டிக்கிட்டு குடும்பம் நடந்தவா சொன்னேன்? அவ காலை ஒடச்சு வீட்ல போடு. அவ கண்முன்னாடியே வேற பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கன்னேன்.  அவன் ஒத்துக்கிறவும்,  மறுபடியும் உன்னைப் பின்தொடர்ந்தேன்.

 

   இன்னைக்கு உன் குடும்பம் மேகன் வீட்டுக்கு கல்யாணம் பேச போனதும், உன்னை இங்கே கொண்டு வந்துடுறதுன்னு திட்டம் போட்டேன். உங்க வீட்ல எல்லோரும் போனதைப் பார்த்துட்டு அழகுக்கு ஃபோன் செஞ்சேன். அழகு டாக்ஸி பிடிச்சுக்கிட்டு வர்றதுக்குள்ள மேகன் உன் வீட்டுக்கு வந்துட்டான். அவன் வெளிறுவதற்கு காத்திருந்த நேரத்துல, நான்  உங்கம்மாவுக்கு ஃபோன் பண்ணி, மேகன் வீட்டிலிருந்து, விக்னேஷ் வீட்டுக்கு வராம கதிர் வீட்டுக்கு போகச்சொன்னேன். நான் ஃபோன் பண்ணிச் சொன்ன பிறகே விக்னேஷ் வீட்டுக்கு கிளம்பச் சொன்னேன். ஆனா மேகன் உன் முன் வாசலிலேயே நின்று, கதிர்க்கு ஃபோன் பண்ணியது எல்லாத்தையும் கேட்டுட்டு தான், இனி தாமதம் பண்ண முடியாதுன்னு பின் வாசல் வழியா உன்னைக் கூட்டிட்டு வந்தோம்" னு சொன்னா.

 

   என்று ஈஸ்வரி கூறிய அனைத்தையும் மிருத்திகா கூறி முடித்தாள். அதோடு ஈஸ்வரி பேசிய அனைத்தையும் ரஞ்சனியின் அம்மா மோபைல் ஃபோனில் ரெக்கார்ட் பண்ணியிருப்பதாகவும் மிருத்திகா சொல்ல,

 

    "இது போதும் அவர்களை அரஸ்ட் செய்ய." என்று கூறிய போலீஸ் ஆபிசர் சரவணவேல், போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபோன் செய்து, ரஞ்சனியின் அம்மா மொபைல் ஃபோனை வாங்கி வைத்துக் கொள்ளச் சொல்லி விட்டு,

 

எல்லோரிடமும்  சரவணவேல் ஐ.பி.எஸ்   "நானும் புறப்படுகிறேன். மிருத்திகா பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டார். நம்ம ரைட்டர் மீராஜோ எழுதும் அடுத்த கதையான "நினைத்தால் போதும் வருவேன்! கதாநாயகன் என்னைத் தேடுவார்கள்." என்று  புன்னகையுடன் கூறி, மேகனிடம் கை குலுக்கி, மிருத்திகாவிடம் தலையசைத்து விடை பெற்றார்.

             

                ஸ்ரீமேகன்

மிருத்திகா

                                                                                       சரவணவெல் ஐ.பி.எஸ்

 

   சிறிது நேரத்தில் மேகனும் மிருத்திகாவும் செண்பகம் வீட்டிற்கு வந்தனர். அங்கேயிருந்த மிருத்திகாவின் அப்பா தன் மகளைக் கண்டதும் கண்கலங்கி விட்டார். 'தன்னுடைய பெண் வாழ்க்கையை அழிக்க,  தன்னையே உபயோகப் படுத்தி விட்டார்களே' என்று பரிதவித்துப் போனவர்,மகளைக் கண்டதும்,

 

  "நானே உனக்கு எமனாக ஆவேன் னு நெனச்சு பார்க்கலடா. .." என்று கூறி மகளின் நெற்றியில் முத்தமிட்டார். ஒருவழியாக இருவரும் சமநிலைக்கு வந்ததும்,

 

  "செண்பா எங்கே ப்பா?" என்று கேட்டாள்.

 

  "உன்னைக் காப்பாத்தி கூட்டி வந்தாச்சுன்னு மாப்பிள்ளை ஃபோன் பண்ணியதும் சிபியுடன் வெளியே போயிருக்காம்மா. " என்றார்.

 

  மேகனும், மிருத்திகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

  "என்னை பார்க்கிறீர்களே என்ன? அவங்க எங்க போயிருக்காங்க?" என்று மேகனிடம் கேட்டாள் மிருத்திகா.

 

  'வம்பிழுக்க ஆரம்பிச்சுட்டா! ' என்று நினைத்தவன்,

 

  "என்னவோ நான் அனுப்பி வச்சமாதிரி எங்கிட்ட கேட்கிற?" என்று கேட்டான்.

 

  அவன் இரட்டை அர்த்தத்தில் பேசுவது புரிந்து, 'ஆரம்பிச்சுட்டான்.' என்று நினைத்தவாறு, தன் அப்பா அறியாமல்  மேகனைப் பார்த்து கண்ணடித்தாள்.

 

  "மாமா! உங்க மக என்னைத் தனியே கூப்பிடுறா." என்று கூறியதுதான் தாமதம் அருகில் இருந்த பஞ்சால் செய்த பொம்மையை மேகன் மேல் தூக்கி எறிந்தாள்.

 

  அந்த பொம்மை சரியாக   வீட்டுக்குள் வந்த கதிரின் மீது விழுந்தது.

 

  "வந்ததுமே ஆரம்பிச்சுட்டீங்களா?" என்றபடி உள்ளே வந்தான். அவனுடன் வந்த தீபாவும், நித்யாவும் ஓடிவந்து மிருத்திகாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடந்த விபரங்களைக் கேட்டனர்.

 

   போலீஸ் ஸ்டேஷனில் அழகு, அவனுடைய அப்பா, ஈஸ்வரி, அவளுடைய அப்பா.  ரஞ்சனியின் பெற்றோர் அனைவரின் முன்னிலையில் ரஞ்சனியின் அம்மாவுடைய மொபைல் ஃபோனில் மிருத்திகா ரெக்கார்ட் செய்து வைத்திருந்த ஈஸ்வரி, மிருத்திகாவிடம் பேசியவற்றைக் கேட்டனர்.

 

  அதை தன்னுடைய மொபைல் ஃபோனுக்கும் , மேகன் ஃபோனுக்கும் அனுப்பிவிட்டு, பெண்காவலரை அழைத்து நாலுபேரையும் லாக்கப்புக்குள் அடைக்கச் சொல்லிவிட்டு,  அதோடு மற்ற இரு போலீஸ்காரர்களை அழைத்து, பாலசௌந்தரி மற்றும் நர்ஸ், வார்டுபாய் ஆகியோரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரச் சொல்லிவிட்டு, லீகல் ஃபார்மாலிட்டி வேலைகளை ஆரம்பித்தார்.

 

  பாலசௌந்தரி, நர்ஸ், வார்டுபாய் மூவரும் வரவும், சிபியும், மேகனும் மிருத்திகாவை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.

 

   மிருத்திகாவைப் பார்த்ததும் வழக்கம்போல கத்த ஆரம்பித்த பாலசௌந்தரியை மிரட்டி ஈஸ்வரி பேசிய ரெக்கார்டைப் போட்டுக்க காட்டி,

 

  "ஏம்மா! இவங்களை நம்பி, பெத்த பொண்ணுக்கே இவ்வளவு பெரிய அநியாயம் பண்ணியிருக்க. ஆனா உன்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்திருக்கோம்னு சொன்னதும் உன்னைக் காப்பாத்த உங்க பொண்ணு தான் வந்திருக்காங்க. இப்ப நீ என்ன செய்யப்போற? இனி  என் குடும்பத்துலயிருக்கும் யாருக்கும் பிரச்சனை பண்ண மாட்டேன்னு எழுதிக் கொடுத்துட்டு வெளியே போறியா இல்லை. இவனுங்களோட உள்ளே போறியா?" என்று கேட்டதும், வேகமாக ஈஸ்வரியிடம் வந்த பாலசௌந்தரி,

 

  "இதெல்லாம் நீ பேசினதா?" என்று கேட்டதுதான் தாமதம்,    

 

  "ஒரு தடவையாவது இந்த மாதிரி உன் பொண்ணுகிட்ட கேட்டிருக்கியாமா நீ? அவட்ட போயி கேக்கிற? லாக்அப்க்குள்ள போனதும் அந்த குடும்பமே என்ன சொல்லுச்சு தெரியுமா? நீதான் ஆரம்பத்திலிருந்தே  திட்டம் போட்டுக் குடுத்தியாம்.  இவங்க எல்லாரும் உனக்குப் பயந்துதான் இந்த மாதிரியெல்லாம் பண்ணினாங்களாம். மிருத்திகாவை  பயமுறுத்துறதுக்காகத்தான் ஈஸ்வரி இப்படி பேசினாளாம்.  என்னம்மா?,அவங்க சொன்னபடி எழுதி, உன்மேல வழக்கு பதிவு செய்யவா?” என்று கேட்டதும், ஆடிப்போய் அப்படியே அருகில் கிடந்த பெஞ்சில் அமர்ந்துவிட்டார் பாலசௌந்தரி.

 

உடனே "சும்மா நடிக்குது சார் இந்த பொம்பளை. விடாதீங்க அடிச்சுக் கேளுங்க." என்று கத்தினாள் ஈஸ்வரி.

 

 "அடிப்பாவி!" என்று வாய் விட்டு அரற்றிய பாலசௌந்தரி,

 

  "கேட்கக்கூடாதவங்க பேச்சைக் கேட்டு என் குடும்பத்தை நானே அழிச்சுட்டேன். ஆயிரமிருந்தாலும் அவங்கள்லாம் அடுத்தவங்க.. ஆனா நான்?  எனக்கு மன்னிப்பே கிடையாது சார். என்னையும் உள்ள போடுங்க." என்றதும், பெண் காவலரைக் கண்காட்ட, பாலசௌந்தரியை லாக்அப்க்குள் அழைத்து செல்லவும்,

 

  "வேண்டாம் மேகன் நான் கம்ளைண்ட் கொடுக்கல. எங்கம்மாவை விடச்சொல்லுங்க." என்று கெஞ்சினாள் மிருத்திகா.

 

  மிருத்திகா புகார் கொடுக்க மறுத்ததாலும், வழக்கிலிருந்து  பாலசௌந்தரியை மட்டும் விடமுடியாததாலும் அனைவரையும் எச்சரித்து, அனைவரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு வெளியே விட்டனர் போலீஸ்.

 

  ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும் பாலசௌந்தரி, மிருத்திகாவை நெருங்க, இடையே வந்த மேகன்,

 

  "உங்க மகள் உங்களை மன்னிச்சிருக்கலாம். என்னால் முடியாது. இவளுக்காக மட்டுமில்ல,  உங்க வீட்ல இருக்கும் மத்த நல்லவங்க மனசும் கஷ்டப்படக்கூடாதுன்னுதான் கம்ப்ளைன்ட்ட வாபஸ் வாங்கினேன். மத்தபடி எங்களுக்கும், உங்களுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. இன்னும் இரண்டு நாளில் அதாவது நீங்க குறிச்சுவச்ச தேதில எங்க கல்யாணம் நடக்கும். அதுவரை இவ என் நண்பன் வீட்ல இருப்பா. தயவுசெய்து இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் என் வீட்டுக்கு வராதிங்க." என்று கூறி விட்டு சிபியிடம்,

 

  "இவங்கள விக்னேஷ் வீட்ல விட்டுடு." என்று கூறி விட்டு மிருத்திகாவை இழுத்துக் கொண்டு, அவன் காரில் ஏறி செண்பகம் வீட்டிற்குச் சென்றான்.

 

  சிபி, பாலசௌந்தரியை விக்னேஷ் வீட்டில் விடுவதற்காக தனது வண்டியைக்கிளப்பி சென்றுவிட்டான்.

 

   அழகு, அவனுடைய அப்பா, ஈஸ்வரி, அவளுடைய அப்பா, ரஞ்சனியின் பெற்றோர் அனைவரும் அழகு வின் நண்பன் டாக்ஸியை வரவழைத்து ஏறி தெருமுனை திரும்ப, எதிரில் வந்த மணல் லாரியில் மோதியது டாக்ஸி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்!

❤❤❤❤❤❤

Post a Comment

0 Comments