40
வழிமீது
விழிவைத்தல்ல
உயிர்வைத்துக்
காத்திருக்கிறேன்...
🌹🌹🌹🌹🌹🌹
மிருத்திகாவின் அப்பா ஆட்டோவில்
ஏறியவுடன். ஆட்டோ செண்பகம் வீட்டை நோக்கிப் பறந்தது. சிபி மேகனுக்கு ஃபோன் செய்து,
"மிருத்திகாவின் அப்பாவை கூட்டிட்டு
வந்துவிட்டோம்." என்று கூறினான்.
மேகன், கதிர்க்கு ஃபோன் செய்து,
"என்ன கதிர்? மாமாவை அனுப்பியதும்
ஃபோன் பண்ண சொன்னேன்..." என்று கேட்டதும், கதிர்,
"நீங்க சொன்ன ஐடியாவை சரியாதான்
செய்தேன் கடைசியில் சின்ன குழப்பம்... நீங்களே நித்யா கிட்ட சொல்லிடுங்க
மேகன்." என்றான் கதிர்.
"நித்யா நல்ல பொண்ணு சொன்னா
புரிஞ்சுகுகுவாங்க... எதுவாயிருந்தாலும், நீயே சாவகாசமா புரிய வை. இப்போ, தீபா
அக்காவையும், நித்யாவையும், ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேற்று. .. நான் மறுபடியும்
ஃபோன் பண்ணும் வரை அத்தைக்கு சந்தேகம் வராதபடி பார்த்துக்க. நாங்க மிருத்திகா
இருக்குற வீட்டை நெருங்கிவிட்டோம். அப்புறம் பேசுறேன்..." என்று கூறி ஃபோனை
வைத்து விட்டான்.
மாடி அறை சன்னலோரம் அமர்ந்து, தெருவையே
பார்த்துக் கொண்டிருந்தாள் மிருத்திகா. பார்க்கத்தான் அமைதியாக இருந்தாள். அவள்
மனம் வெள்ளத்தில் சிக்கிய பாய்மரக்கப்பல் போல், அலைக்கழிக்கப்பட்டுக்
கொண்டிருந்தது.
'தீபிகா என்னைப் பார்த்த விஷயத்தை
மேகனிடம் சொல்லவில்லையா? ஏன் இன்னும் மேகன் வரவில்லை? நான் இங்கிருந்து எப்படித்
தப்பிக்க போகிறேன்? மனசுல மேகன் இருக்கும் போது , அப்பாவுக்காகன்னாலும் என்னால
எப்படி வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க முடியும்?' என்று ஒரு நிமிடத்தில் ஓராயிரம்
கேள்விகள்... ஆனால் ஒவ்வொரு கேள்விக்கும் பயமும் அழுகையுமே பதிலாய் கிடைத்தது...
இங்கு வந்தது முதல் இந்த சன்னல் தான் மிருத்திகாவின் இருப்பிடமானது. .. தனக்குத்
தெரிந்த யாராவது கண்ணில் பட மாட்டார்களா? தன்னைக் காப்பாற்ற மேகன்
வந்துவிடவேண்டுமே! என்று கண்களில் கண்ணீருடன் தவமிருந்தாள்.
அவன்மேல் எவ்வளவு நம்பிக்கை நம்
மிருத்திகாவிற்கு...
சிறிது நேரத்தில், அந்தத் தெருவழியாக
வருபவர்கள் எல்லாம் மேகனாக தெரிய ஆரம்பித்தது... கண்களைக் கசக்கி விட்டுப்
பார்த்தாள்... அப்பொழுதும் இரண்டு மூன்று மேகன்கள் தெருவைக் கடந்து செல்ல,
ப்ளீஸ்! மேகன் எனக்குப் பைத்தியம்
பிடிப்பதற்குள் வந்துவிடுங்கள்... என்று மனதால் மேகனிடம் பேசியவளுக்கு தலை
வலிப்பதுபோல் தோன்ற, சன்னலை விட்டு இறங்கியவள்,
மேகன் வந்த காரைப் பார்த்து விட்டாள்!
சந்தோஷமும், சந்தேகமும் சேர்ந்து கண்களை
இருட்ட, தலையைக் குலுக்கி உற்றுப் பார்த்தாள். மேகன் கார்தான்... வந்துட்டான்... என்னைக்
காப்பாத்த வந்துட்டான்... என் உயிர் வலியை போக்க வந்துட்டான்... என்று சந்தோஷமும்
அழுகையுமாக, சட்டென்று அறை வாசலை நோக்கி ஓடியவளுக்கு, கண்கள் இருட்ட அப்படியே
மடங்கிச் சரிந்தாள்.... அதுவரை உணர்ச்சிகளை இறுக்கிப் பிடித்திருந்தவள், பிடிமானம்
இழந்து உணர்வற்று விழுந்தாள்...
இங்கே!
மேகன், வீட்டுக்கு ஏற்கனவே வந்த
கான்ஸ்டபிள், மேகனின் போலீஸ் நண்பன், சரவணவேல் ஐ.பி.எஸ். நால்வரும் தட தட வென்று
அந்த வீட்டிற்குள் சென்றனர்... எட்டிப் பார்த்த ரஞ்சனியின் அம்மா, போலீசைப்
பார்த்து மிரண்டு பின்வாங்க,
"வீட்டில் இருக்கும் ஃபோன்
எல்லாத்தையும் கொடுங்கள்... என்று கூறி அனைத்து ஃபோனையும் வாங்கிக் கொண்டார்
கான்ஸ்டபிள்.
"ரித்தி! ரித்திஈஈ! மேகன்
வந்துட்டேன்." என்று கத்தியும் மிருத்திகாவிடமிருந்து பதில் வராமல் போகவே,
'மிருத்திகாவை வேறஇடத்துக்கு மாத்திட்டார்களா?' என்று தோன்ற, அவனுக்கு உயிரே போவது
போல தோன்றியது...
கீழ் வீட்டின் அறைகளுக்குள்
மிருத்திகாவைத் தேடிச் சென்றவர்கள், மிருத்திகா இல்லாமல் வர,
"கடவுளே மறுபடியும் அவளைத் தொலைத்து
விட்டேனா?" என்று அரற்றியவாறு மாடிப்படிகளில் ஏறினான்.
"ரித்தி....ரித்தீஈஈ. .."
எங்கோ தூரத்தில் மேகனின் குரல்
கேட்டது... மெல்ல எழுந்து கண்களை கசக்கியவளுக்கு
"ரித்தி... அப்பாவைக்
காப்பாத்தியாச்சு... வா!" என்ற மேகன் குரல் கேட்டதும்,
'வந்துவிட்டான்!' என்று ஓடிவந்தாள்
மிருத்திகா...
அவள் எதிரில், கலைந்த தலையும் நெற்றி
பொட்டில் நரம்புகள் புடைத்து, சிவந்த கண்களில் கண்ணீருடன் நின்ற மேகனைப்
பார்த்தவள் ஓடிவந்து அத்தனைபேர் இருப்பதையும் மறந்து மேகனை இறுகக் கட்டிக் கொண்டாள்.
அவளால் பேசமுடியவில்லை... கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக... அவள் தேம்புவது
தெரிந்து மேகனுக்கும் கண்களில் கண்ணீர் முட்ட,
"ஏன் இவ்வளவு அழுகை உனக்கு? என்
மேல் நம்பிக்கை இல்லையா? என்னால உன்னை கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனச்சியா? நான்
வந்து உன்னை காப்பாத்திடுவேன்னு நம்பிக்கை இருந்தா, இப்படித் தேம்பி தேம்பி அழுவியா?"
என்று கேட்டான்.
"ஒவ்வொரு நிமிஷமும் நீங்க வந்து
என்னைக் கூட்டிட்டுப் போயிடுவீங்கன்னு நம்பினேன்... சில நேரம் ரொம்ப பயமாயிடும்.
ஏன்னா, ரஞ்சனியின் வீட்டினரை நான் பார்த்ததே இல்லை.... எங்க அண்ணன், அண்ணிக்கும்
இவங்களைத் தெரியாது... அப்புறம் எப்படி என்னைத் தேடி வருவீங்கன்னு பயந்து ,
'கடவுளே! அவருக்கு நான் இருக்கும் இடத்தை காட்டு! அவர் வந்து என்னை கூட்டிட்டு
போயிடனும். .. அவரோட நான் சந்தோஷமா வாழனும்னு' கண்ணில் படும் தெய்வங்களிடமெல்லாம்
வேண்டுவேன். கடவுள் உங்களைக் கூட்டிட்டு வந்துடுவார்னு நம்பிக்கை பிறக்கும்...
மறுபடியும், எப்படி வருவீங்கன்னு நினைச்சதும், பயம் வந்துடும்... 'நான் உங்க மேல
வச்சிருக்கிற காதல் உண்மையானது... அந்தக் காதலே நம்மை சேர்த்து வச்சுடும்னு
நம்புவேன்...
அன்னைக்கு இரவு இங்க வந்த ஈஸ்வரி , நீங்க!
அவ வீட்டிலேயும், அழகு வீட்டிலேயும், தேடிப் பார்த்துட்டு போயிட்டீங்கன்னு
சொன்னா... அன்னைக்கு ராத்திரி பூரா தூங்கல... பயத்துல அழுகுறது. ..அப்புறம்
நம்பிக்கை வந்து சமாதானம் ஆகுறதுன்னு ...
அடுத்தநாள் காலை, ஈஸ்வரி வந்து,
உங்களுக்கும், என் அண்ணன்களுக்கும், அழகு மேல சந்தேகம் இல்லை... வேற இடத்தில்
தேடுறாங்க... அதனால வர்ற ஞாயித்துக்கிழமை கல்யாணம் வச்சுக்கலாம்னு சொன்னா.
இதைக்கேட்டு, எனக்கு எப்படி இருந்திருக்கும்? உயிரே போய் விட்டது." என்று
சொல்லிக் கொண்டு வந்தவளுக்கு, அடுத்து பேசமுடியவில்லை... அவளின் கண்களில்,
அந்நாளில் அவள் பட்ட துயரம் அப்பட்டமாய்த் தெரிய,
"சரி! விடு! நான் தான்
வந்துட்டேன்ல. .. ரிலாக்ஸ். ..ரிலாக்ஸ் " என்று சொல்லும்போதே மேகனுக்கும்
கண்கள் கலங்க, மிருத்திகா மேலும் பேசினாள்
"அப்பதான் ரஞ்சனி என்னிடம் நெருங்கிப்
பழகினா... நான் இருக்கும் இடத்தையும் உங்களுக்குத் தெரியப்படுத்தனும்,
அதேநேரத்தில் எங்கப்பாவை காப்பாத்தினாதான் நான் தப்பிக்க முடியும்... இதுக்கு ஒரே
வழி தீபிகா!! அதனால ரஞ்சனிகிட்ட தீபிகாவை யும் அவ தோழிகளையும் கூட்டிட்டு வா! ,
உங்க வீட்ல நான்தான் கூட்டிவரச் சொன்னேன்னு சொல்லாதன்னு சொன்னேன்.... தீபிகாவை
பார்க்கும் வரை என் உயிர் என் கையில் இல்லை..."
அதற்குமேல் வார்த்தை வராமல், அழகையாக
வெடிக்க, மீண்டும் அவள் கால்கள் துவள,
"வா! முதலில் இங்கிருந்து
கிளம்புவோம்..." என்று கூறி மிருத்திகாவைக் கிட்ட தட்ட தூக்கிக் கொண்டு மேகன்
வெளியேற,
மற்றவர்கள், வீட்டிலிருந்த ரஞ்சனியின்
அம்மாவையும் அழைத்துக் கொண்டு வெளியேறினர்.
ரஞ்சனியின் அம்மா தயங்க,
"நீங்களா வந்துட்டா உங்களுக்கு
நல்லது. .. இல்லை... போலீஸ் வண்டியை வரச்சொன்னா தெருவே வேடிக்கை பார்க்கும்...
பரவாயில்லையா?" என்று போலீஸ் ஆபிசர் கூறியதும், ரஞ்சனியின் அம்மா,
"இதுக்கும் எனக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை சார்! ஈஸ்வரியோட பெரியப்பா பையனும், இந்த பொண்ணும் விரும்புறது,
இந்தப் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு பிடிக்கலை.. அதான் யாருக்கும் தெரியாம நாங்க
கல்யாணம் பண்ண போறோம். கல்யாணம் முடியுற வரை உங்க வீட்ல இருக்கட்டும்... இது வேற யாருக்கும்
தெரியக்கூடாதுன்னு ஈஸ்வரி கெஞ்சிக் கேட்டாள்... அதான் எங்க வீட்டுக்காரர் சம்மதிச்சார்.
.. போலீஸ் வரும்னு எங்களுக்குத் தெரியாதுங்க... அப்படியே இருந்தாலும் அந்த பொண்ணு
மேஜர் தானே சார்! அவ இஷ்டத்துக்கு மாறா எங்க வீட்டுல வச்சிருக்கல... அவள எங்க
வீட்டுப் பொண்ணு மாதிரிதான் பார்த்துக்கிட்டோம். .. அந்த பொண்ணு கிட்டயே
கேளுங்க.... அவ விரும்பப்பட்டுத் தான் இங்கே இருந்தா... அவங்க அண்ணன்களுக்கு
பயந்துதான் அவ வீட்டைவிட்டு வெளிய போகல... நாங்க எந்த வகையிலும் அந்தப் பொண்ணை
தடுக்கல. .. கல்யாணம் ஆகுற வரைக்கும் பெத்தவங்களுக்குப் பயந்து, அடைக்கலம் தேடி
வந்த பொண்ணுக்கு அடைக்கலம் கொடுத்தோம்... இதில் எங்க தப்பு என்ன சார்?" என்று
ரஞ்சனியின் அம்மா அழுதபடி கேட்டார்.
"இங்கே பாருங்க! உங்களை போலீஸ்
காவலில் எடுக்கிறோம்... அங்க வந்து உங்க நியாயத்தைச் சொல்லுங்க." என்றார்
போலீஸ்.
"ஃபோனை குடுங்க. என் வீட்டுக்காரருக்கும்,
ஈஸ்வரிக்கும் ஃபோன் போட்டு வரச் சொல்றேன். நீங்களே அவங்க கிட்ட கேளுங்க.."
"அதெல்லாம் எங்களுக்கும் தெரியும்!
நீங்க வாங்க முதல்ல." என்று கூறி ரஞ்சனியின் அம்மாவை நடத்திச் சென்றார்.
ரஞ்சனியின் அம்மாவை போலீஸ்காரர் அழைத்து
வருவதைப் பார்த்த மிருத்திகா,
"இவங்களுக்கு உண்மை எதுவும்
தெரியாது சார்... " என்றாள்.
"தெரியுதும்மா! ஆனா இவங்களை நாம
ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போனாதான். தப்பு செஞ்சவங்களைப் பிடிக்க முடியும்...
இல்லைனா தப்பிச்சுடுவாங்க..." என்று போலீஸ் ஆபிசர் கூறவும், ரஞ்சனியின் அம்மாவைப்
பாவமாக பார்த்து விட்டு,
"பயப்படாம அவங்களோட போங்க...
ஈஸ்வரியையும் அழகுவையும் பிடிச்சதும், உங்களை விட்டுடுவாங்க." என்று கூறி
விட்டு, மிருத்திகா மேகனுடன் நடக்க...
"ஏம்மா! நீயெல்லாம் எதுக்கு
காதலிக்கிற? உனக்குப் பாவம் பாத்ததுக்கு எங்களையும், உன்மேல உயிரையே வச்சிருக்கிறவனையும்
அம்போன்னு விட்டுட்டு, உங்க வீட்டு ஆளுகளோட போறியே?" என்று ரஞ்சனியின் அம்மா
மிருத்திகாவைத் திட்ட,
சட்டென்று ரஞ்சனியின் அம்மா முன் வந்து
நின்ற மேகன்,
"இவளும் நானும் தான் காதலிக்கிறோம்.
.. எங்கள் இருவருக்கும் கல்யாணத்துக்கு நாள் குறிக்க, பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்
போதுதான், யாருக்கும் தெரியாம இவளை, உங்க அழகு கூட்டிட்டு வந்துட்டான்.. "
என்று மேகன் பேசிக்கொண்டிருக்கும் போதே
"ஈஸ்வரியும் தான் மேகன்!"
என்றாள் மிருத்திகா.
மேகனைப் பார்த்து, "நீங்க
புறப்படுங்க. நாங்க சொல்லிக்கிறோம்." என்று கூறி வழியனுப்பினார் போலீஸ்காரர்.
ஒன்றும் புரியாமல் விழித்த ரஞ்சனியின்
அம்மாவை வண்டியில் ஏற்றி, நடந்த விஷயங்களை சுருக்கமாகக் கூறினார் போலீஸ்காரர்.
மேகன், மிருத்திகா, சரவணவேல் ஐ.பி.எஸ்
மூவரும் சரவணவேல் ஐ.பி.எஸ் வீட்டிற்கு சென்றனர்.
"ஏன்டி உனக்கு என்னைவிட உங்கப்பா
பெருசா போயிட்டாரு இல்லை?"
"எங்கப்பாவுக்கு, ஏதோ ஒரு பெயர்
சொன்னாங்க. அந்த ஊசி போட்டா கை, கால் செயலிழந்து போயிடும்னு சொன்னாங்க.., எனக்குப்
பயமா இருக்காதா?"
"நீ பயந்துட்ட சரி! நான் உன்னைக்
கண்டுபிடிக்கத் தாமதமாயிருந்தா என்ன செஞ்சிருப்ப? உங்கப்பாவுக்கு பிரச்சனை
இருக்குன்னே தீபிகா சொன்ன பிறகுதான எங்களுக்குத் தெரிஞ்சுச்சு. .. அழகு, ஈஸ்வரி
வீட்டுக்குப் போயி தேடினோம்... அழகு ஊர்ல, ஆட்டோ வைச்சு தெருத்தெருவா
கத்தினோம்...நீ எங்க இருக்கேன்னே தெரியல... "
"எனக்கும் அது தெரிஞ்சதாலதான்,
தீபிகாவை வரவழைச்சேன். .. நீங்க எப்படியும் என்னை அங்கிருந்து கூட்டிட்டு வந்துடுவீங்கன்னு
நம்பினேன். "
"புரியுது..." என்றவன், அவள்
அந்தநாட்களின் நினைவில் கலங்கி இருப்பது பொறுக்க முடியாமல், அருகில் வந்து
மென்மையாக அணைத்தபடி அமர்ந்தான்.
அவளும் ஒன்றும் பேசாமல் மேலும் அவனுடன்
ஒண்டிக்கொள்ள,
நாம் அடுத்த அத்தியாயத்திற்குச் செல்வோம்
❤❤❤❤❤❤
1 Comments
எப்படியோ problem solved thaaiklilavi ku embuthu thillu
ReplyDelete