சிம்டாங்காரன்: அத்தியாயம்-32

 

32

வா என்றழைப்பதும்,

வரவேண்டுமென்று தவிப்பதும்,

வந்தெதிரில் நிற்க, கவிழ்வதும்,

என் கண்கள்மட்டுமல்ல...

என் காதலும்தான்...

🌹🌹🌹🌹🌹🌹 

கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு, 'யாரா இருக்கும்? ஒருவேளை மேகனோ?!! சேச்சே! எங்கம்மா கண்ணிலிருந்து தப்பி வரமுடியுமா?!! செண்பகம் திரும்பி வந்துட்டாளா?' என்று நினைத்தவாறு கதவைத் திறந்தவள் மேகனைப் பார்த்து,

 



 

"எப்படி வந்தீங்க?.... எங்க அம்மா எப்படி ... செண்பகம் இல்லை... என்...ன?" என்று உளறிக் கொட்டினாள் மிருத்திகா.

 

"நீ கூப்பிட்டா வராம இருப்பேனாடி. .. உங்க அம்மாவெல்லாம் ஒரு ஆளா?"

 

மிருத்திகா, ' ஆஹா தேவையில்லாம வாயைக் கொடுத்துட்டேனோ? இந்த அம்மாவை நம்பி...' என்று நினைத்தவளை மேகன் விழுங்குவதைப் போலப் பார்க்க,

 

'ஐய்யோ! என்ன இவன் இப்படி பார்க்கிறான்?...' என்று நினைத்தவளுக்கு முதன்முறையாக உதறல் எடுத்தது.

 


மிருத்திகாவின் பயம் அவள் கண்களில் தெரிய, மேலும் குஷியான மேகன், அவளையே குறுகுறு வென்று பார்த்தவாறு அவளை நெருங்க... மிருத்திகா பின்னோக்கி நடந்தவாறு. ..

 

"சும்மா! விளையாட்டுக்கு சொன்னேன். அம்மாவை மீறி உங்களால வர முடியாதுன்னு சும்மா... சும்மா தான் மேகன்.. ஸாரி!" என்று கெஞ்ச,

 

'என்னடி வில்லனைப் பார்த்த மாதிரி பின்னாலயே போற? நீதானே உங்கம்மா சொன்ன ஐடியா என்னன்னு நேரில் வந்து சொல்லச் சொன்ன? உன்னைப் பார்த்த பின்னால தான், உங்க அம்மா சொன்ன ஐடியாவை முயற்சி பண்ணிப் பாக்கலாம்னு தோணுது... வா!" என்று ஒரு மாதிரி அழைக்கவும்..

 

"வேணாம் மேகன்... இது தப்பு! நாம நல்லபிள்ளையாவே இருப்போமே? இத்தனை வருஷம் காத்திருந்தோம் இன்னும் கொஞ்ச நாள் தானே. .. நான்தான் உங்களை உசுப்பேத்தி விட்டுட்டேன்னு தோணுது... ஸாரி ப்ளீஸ்..." என்றவள், அவன் மேலும் முன்னேறி வரவே,

"ரோஸ்மில்க் கலந்து தரவா?" என்று மேகனின் மனநிலையை மாற்றப் பார்த்தாள்.

"எதாவது பேசுங்க மேகன்... இங்க பாருங்க வில்லனா இருந்தா இப்படி பேசிக்கிட்டிருக்க மாட்டேன் ஆமா?... "

 

'என்ன இவ இப்படி பயப்படுறா? இதுகூட நல்லாருக்கே!' என்று நினைத்தவாறு அவளைப் பிடித்து அணைக்க முயல,

 

"விளையாட்டு போதும் மேகன்." என்றபடி அவனை உதறி நகர்ந்தாள்.

 

"இன்னும் விளையாட ஆரம்பிக்கவே இல்லையேடி" என்று கூறி மீண்டும் அவளை இழுத்து அணைக்க,

அவள் தன்வசம் இழப்பதை உணர்ந்த மேகன், மிருதுவாக அவள் காதுகளில்,

 

"நமக்குத்தான் கல்யாணம் ஆகப்போகுதுல. . பின்ன ஏன் பயப்படுற?" என்றதும்,

சுயஉணர்வு பெற்று, சட்டென்று அவனைத் தள்ளி விட்டு ஒடியவள், முற்றத்திலிருந்த தண்ணீரில் கால் வைத்து, வழுக்கி விழ, ஒடிப் போய் பிடிக்க முயன்ற மேகனும் வழுக்கி, அவளுடன் சேர்ந்து விழ, அவளுக்கு அடிபட்டுவிடக்கூடாதென்று அவளைத் தன்மேல் சாய்ந்தபடி விழுந்தான் மேகன். கீழே விழுந்த பயத்தில் கண்களை இருக்க முடிக்கொண்டு, மேகனின் நெஞ்சிலேயே சாய்ந்தாள். அவள் பயம் புரிந்த மேகன், அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். அவன் அணைப்பு இதத்தை தர, இவனுக்காகத்தானே இத்தனை வருடம் காத்திருந்தேன்... பிறகு ஏன் விலகி ஓடுறேன்? ' என்று நினைத்தாள்.

 

தன் நெஞ்சில் சாய்ந்தவள் எழ முயற்சிக்காமல் அப்படியே இருக்கவும், 'என்மேல ஆசையிருக்கிறது ஆனா பயப்படுறா' என்று நினைத்துச் சிரித்தவன்,

 

"நான் ஏமாத்திடுவேன்னு பயப்படுறியா ரித்தி" என்று கிசுகிசுப்பாக மிருத்திகாவின் காதோரம் கேட்க,

 

அவன் நெஞ்சில் படுத்தவாறே நிமிர்ந்து பார்த்தவள்,

 

 

"இழக்கிறது என்னையே இருந்தாலும் சம்மதிப்பேன்... ஏமாத்துறது நீங்களா இருந்தா"

 

"என்னடி சினிமா டயலாக் லாம் பேசுற?"

 

"உங்களுக்கு இது டயலாக்காக தெரியலாம்... ஆனா எனக்கு அது, என் உயிரிலிருந்து வந்த சத்தியமான வார்த்தைகள்... "

 

"சத்தியமான வார்த்தைகளா?!"

 

"பின்னே? எவ்வளவு ஃபீல் பண்ணி பேசுறேன்... சினிமா டயலாக் னு சொன்னா?"

 

'ஃபீல் பண்ணி சொன்னதா?'

என்று நினைத்தவன், அவள் சொன்ன வார்த்தைகளை மீண்டும் நினைத்துப் பாத்தவனுக்கு, அவளுடைய காதலின் ஆழம் புரிய, மேகனுக்கு கண்களில் மின்னல் வெட்டியது... மிருத்திகாவின் நெற்றியில் முத்தமிட்டவன், அவளும் அவனுடைய அண்மையை விரும்புவது புரிந்து அவள் கன்னங்களில் முத்தமிட, மிருத்திகா கிறங்கி மேகனை இறுகப் பற்றினாள். ..

 

சிறிது நேரத்திற்குப் பின் மிருத்திகாவின் அறையிலிருந்து வெளியேறிய மேகன், மிருத்திகாவை திரும்பிப் பார்க்காமலேயே,

 

"ஸாரி ரித்தி! ஏதோ வேகத்தில்... ஸாரி!" என்று கூறியவன் மிருத்திகாவின் பதிலைக்கூட எதிர்பாராமல் வேகமாக வாசலுக்குச் சென்றான்.

 

'மிருத்திகாவால் கதவை பூட்ட வரமுடியுமா?' என்று யோசித்தவன், 'இப்படியே இவளை விட்டுச் செல்வது தவறு' என்று எண்ணி, வீட்டினுள் செல்ல முற்பட்டான். 'அவள் முகத்தில் எப்படி முழிப்பேன்?' என்று மீண்டும் வெளியே வந்து கதவை சாத்தி விட்டு, கதிர்க்கு ஃபோன் செய்தான். ‘அவனிடம் எப்படி நடந்ததைச் சொல்வது? புரிந்து கொள்வானா? ஆனால் அவனைத்தவிர, அவன் வீட்டினர் வேறு யாரிடமும் சொல்ல முடியாது... அவன் திட்டினாலும் பரவாயில்லை... மிருத்திகாவை இந்நிலையில் தனியே விடுவது சரியில்லை... ' என்று முடிவுக்கு வந்தவனாய் கதிர்க்கு ஃபோன் பண்ணினான்.

 

கதிர் "ஹலோ!" என்றதும்,

 

மேகனுக்கு வார்த்தை வரவில்லை... நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டது. மேகனின் மனம் தன்னையேத் திட்டியது...

 

மொபைல் ஃபோன் ஸ்கிரீன்னில் மேகன் நம்பரைப் பார்த்து விட்டு கதிர்,

 

"ஹலோ! மேகா! என்ன பேசாம இருக்கீங்க?" என்று கேட்டதும்,

 


"கதிர் எங்க இருக்க?" என்று குரல் உடைந்து கேட்டான்.

 

'ஏன் இவன் குரல் இப்படி நடுங்குது?' என்று யோசித்த கதிர்,

 

"மேகா என்னாச்சு? நாங்க எல்லாரும் என் வீட்டில்தானிருக்கோம். ஏதாவது பிரச்சினையா?"

 

"கதிர் கொஞ்சம் விக்னேஷ் மச்சான் வீட்டுக்கு சீக்கிரம் வாங்களேன்."

 

"வாங்களேன்?!! அப்படின்னா நீங்க அங்கேயா இருக்கீங்க?"

 

"ஆமாம்!" என்றான் மெல்லிய குரலில்.

 

மேகனின் குரலும், அவன் செயலும், இன்று மிருத்திகா பேசிய பேச்சும் கதிருக்கு ஞாபகத்திற்கு வர,

 

"செண்பா எங்கே?" என்று கேட்டான்.

 

கதிர் என்ன நினைப்பான்... குற்ற உணர்வு குறுகுறுக்க,

 

"நான் இங்கே வரும்போதே செண்பா இல்லை!" என்றான் மேகன்.

 

"மீரா?"

 

"அவ அறையில் படுத்திருக்கா. .. அவளால... கதவை தாழ்ப்பாள் போட முடியலை. .. கொஞ்சம் சீக்கிரம் வாங்க!"

 

என்ன நடந்திருக்கும் என்று யூகித்த கதிர்,

 

"உங்கள்ட்ட நான் இத எதிர்பாக்கல மேகன்! என்னால உங்களைத் திட்டக்கூட முடியல... எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன்... ஆமா! மீரா எப்படி இருக்கா? அவளை இந்த நிலையில் என்னால எப்படி? கல்யாணத்துக்கு தடை வந்துடுமோன்னு, எங்கம்மா சொன்னதையே செய்வீங்களா மேகன்?"

 

"ப்ளீஸ்! கொஞ்சம் பொறுங்க. .. நான் தப்புதான் பண்ணிட்டேன்.. ஆனா.."

 

"போதும் மேகன்... உங்களை ரொம்ப நம்பினேன்.. தப்பா எடுத்துக்காதீங்க.. இப்ப உங்ககிட்ட பேசினா வார்த்தைகள் சிதறிடும்னு பயப்படுறேன்... வச்சுடுறேன்."

 

மேகனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது..

 

மிருத்திகா வீட்டின் எதிரில் நிறுத்தியிருந்த தன் பைக்கை எடுத்து, கதிருக்காகக் காத்திருந்தான்.

தெரு முனையில் கதிரும், நித்யாவும் வண்டியில் வருவது தெரியவும், அவர்கள் முகத்தில் விழிக்க சங்கடப்பட்டு, மேகன் தனது பைக்கை கிளப்பி, அவர்களுக்கு எதிர் திசையில் வேகமாக ஓட்ட, திடீரென குறுக்கே வந்த கால் டாக்சியில் மோதப் போனான். கண்ணிமைக்கும் நொடியில் டாக்சியில் உரசிவிடாமல் வண்டியை திருப்பி லாவகமாக நிறுத்திவிட்டு டாக்ஸிகாரனைப் பார்க்க, அவன் டாக்ஸியின் வேகத்தை அதிகப்படுத்தி மேகனின் கண்ணிலிருந்து மறைந்தான்... கடைசி நிமிடத்தில் வண்டியிலிருந்து யாரோ ஒருவன் எட்டிப் பார்க்க, தூரத்தில் டாக்ஸி சென்றதால், எட்டிப்பார்த்தவனின் முகம் சரியாகத் தெரியவில்லையென்றாலும் அவன் முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிந்தது... அதோடு அவனை எங்கேயோ பார்த்திருப்பது போல் மேகனுக்குத் தோன்ற, ஏதோ ஓர் உள்ளுணர்வு அந்த டாக்ஸியை பின் தொடர்ந்து போகச் சொன்னது. மேகனும் தன் பைக்கைத் திருப்பி டாக்ஸி போன வழியில் வேகமாக ஓட்டினான். அந்த சந்து ஒரு மெயின்ரோட்டிற்குச் முடிய, அங்கு வந்து பார்த்தான், கண்ணுக்கெட்டும் தூரம் வரை எந்த டாக்ஸியும் கண்ணில் படவில்லை...

‘ப்ச்சு வந்த வழியில் திரும்பிப் போவோம்’ என்று யோசித்து மேகன் வணடியைத்திருப்ப? இதை எதிர்பாராத இருசக்கரவாகனத்தில் வந்த ஒருவன் சடன்ப்ரேக் போடாமல் நேரேபோய் ரோட்டோரத்திலிருந்த கம்பத்தில் முட்டிக் கீழே விழுந்தான். மேகன் சட்டென்று தந்து வண்டியை நிறுத்திவிட்டு, விழுந்தவனைத் தூக்கிவிட, மேகனின் மொபைல் ஃபோன் கீழே விழுந்து விட்டது. கம்பத்தில் மோதியவனுடைய வண்டியை தூக்கி அவனிடம் கொடுத்து,

 

"பார்த்து ஓட்டு!" என்று கூறி விட்டு, கீழே கிடந்த தன் மொபைலை எடுத்துப் பார்த்தான் மேகன். ஃபோன் ஸ்விட்ச்ஆஃப் ஆகியிருந்தது.

 

"சுத்தம்!" என்று கூறி விட்டு தனது பைக்கை எடுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கிப் பறந்தான்.

 

வீட்டில் யாரிடமும் எதுவும் பேசாமல் மாடிக்கு வந்தவனிடம் சிபி,

 

"கதிர் ஃபோன் பண்ணினான்... நீ ஃபோனை ஸ்விட்ச்ஆஃப் பண்ணிட்டியா? " என்று கேட்டான்.

 

சிபியை நிமிர்ந்து பாராமல், 'என் அம்மாவிடம் சொல்லி ஒரு டீ மட்டும் போட்டுத்தரச் சொல்லுடா" என்றான்.

 

"என்னாச்சு மேகா? உன் முகம் சரியில்லையே?" என்று கேட்டான்.

 

"முதல்ல ஃபோன் பண்ணி டீ கொண்டு வரச்சொல்லுடா" என்றவன் கண்கள் கலங்க,

 

"என்னாச்சு மேகா?" என்று தவிப்புடன் மேகனின் அருகில் வந்து சிபி கேட்க,

 

நடந்த விசயங்களை சொன்னவன், "சும்மா விளையாட்டா தான் ஆரம்பிச்சேன் இப்படி ஆயிடுச்சு... கதிர் கிட்ட எப்படிப் பேசுவேன்?"என்று கண்ணிலிருந்து வரும் நீரைக்கூடத் துடைக்காமல் பேசிக் கொண்டிருந்தான்.

 

வேலைக்காரப் பெண், இருவருக்கும் டீ கொடுத்து விட்டு கீழே இறங்கிச் சென்று விட்டாள்.

 

மேகன், டீ யை எடுத்து வாய் அருகில் கொண்டு சென்றபோது, மீண்டும் கதிரிடமிருந்து சிபி நம்பருக்கு ஃபோன் வந்தது. மேகன் தயங்கியபடி ஃபோனை எடுத்து,

 

"கதிர் நான் ..."

 

"மேகா! மீராவ காணோம்" என்று கதிர் கிட்டத்தட்டக் கத்தினான்... முதலில் ஒன்றும் புரியவில்லை மேகனுக்கு,

 

"என்ன கதிர் சொல்ற? அங்கதான் இருப்பா... நீ வரும் வரை, நான் வாசலிலேயேதானே நின்றேன்... உன்னைப் பார்த்த பிறகே வந்தேன்... அவ.." என்று சொல்லி முடிப்பதற்குள்,

 

"பின் வாசல் திறந்து இருக்கு மேகா!"

 

"பின்னாடி ஒரு வாசல் இருக்கா?"

 

"ஆமா!"

 

"அவ எங்காவது அருகில் போயிருப்பா... செண்பகத்துக்கு ஃபோன் பண்ணி கேட்டியா?"

 

"கேட்டேன். அவ வீட்டுக்கும் போகல. "

 

"ஒரு நிமிஷத்தில் அங்கே இருப்பேன்." என்று கூறி சிபியையும் அழைத்துக் கொண்டு மிருத்திகா வீட்டுக்கு விரைந்தான்.

 

மிருத்திகாவின் அறையைப் போய் பார்த்தான். கடைசியாக கண் கலங்கியபடி மிருத்திகா, அவனைப் பார்த்தது ஞாபகம் வர, மேகனுக்கு மனதிற்குள் ஏதோ உடைந்தது போலிருந்தது.

 


"மேகன் நீங்க வெளியே வந்த போது மீரா எதாவது சொன்னாளா?"

 

"இல்ல கதிர்! அவ ஒன்னும் சொல்லலையே."

 

சிறிது நேரத்தில் செண்பகமும் வர, செண்பகத்திடம் எகிறினான் கதிர்.

 

"உன்னை துணைக்கு இருக்கச் சொல்லிட்டு தானே போயிருந்தோம். . எங்க போன?"

 

"எங்கம்மாவுக்கு முடியலைன்னு எனக்கு ஒரு ஃபோன் வந்துச்சு கதிர். மிருத்திகா, 'நீ கிளம்பு’ ன்னு சொன்னதால தான் போனேன். ஆனா அங்க அப்படி எதுவும் இல்லை... எங்கம்மா நல்லாதான் இருக்காங்க. யாரோ என்னை வேணும்னே கிளப்பிவிட்டிருக்காங்க... எனக்கென்னவோ நம்ம மிருத்திகாவை யாரோ கடத்திட்டாங்கன்னு தோணுது கதிர்." என்று செண்பகம் கூறவும்தான், கதிர், நித்யா இருவருக்கும் கொஞ்சம் நிம்மதியானது. ..

 

"எதுவும் தப்பான முடிவுக்கு மீரா போகல. அப்போ யார் கடத்தியிருப்பா?" என்று கதிர் கேட்டதும்,

 

"அழகு சுந்தரமாத்தானிருக்கும்." என்று நித்யா, மேகன், செண்பகம் மூவரும் ஒரே நேரத்தில் கூறினர்.

 

"நான் போலீசுக்கு ஃபோன் பண்றேன்." என்று மேகன் ஃபோனை எடுக்கவும்,

 

"வேண்டாம் மேகன், இதில் எங்கம்மா சம்மந்தப்பட்டிருக்கலாம்.. இப்ப அம்மா வந்துடுவாங்க... நாம முதல்ல எங்கம்மா கிட்ட கேட்டுக்கலாம்." என்றான் கதிர்.

 

"அவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது கதிர்." என்று மேகன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே,

 

மிருத்திகாவின் அப்பா, அம்மா, விக்னேஷ், தீபா நால்வரும் பதறி அடித்து வீட்டிற்குள் வந்தனர்.

 

மேகன் வந்ததை, மறைத்துவிட்டு மற்ற விபரங்கள் சொன்னான் கதிர்.

 

"இல்லை கதிர்! அழகுசுந்தரம் அப்படிப் பண்ணியிருக்க மாட்டான். .. அவன் பயந்தசுபாவம். .. வேற ஏதோ நடந்திருக்கு, கோயிலுக்கு எங்கேயும் போயிருப்பா. அங்கே போயி தேடலாம்." என்று அம்மா கூறனார்.

 

"எனக்கு உங்க மேலதான் சந்தேகம்... கல்யாணத்தைத் தடுக்க இப்படி ஏதோ பண்ணிட்டீங்க." என்று நேரடியாக பாலசௌந்தரியிடம் மேகன் கேட்க,

 

தன் நெஞ்சைப் பிடித்தவாறு அமர்ந்து விட்டார் பாலசௌந்தரி.

 

"என் பொண்ண கல்யாணம் பண்ணாம, இன்னொருத்தனோட அனுப்புவேனா? கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி, உங்க கல்யாணத்தை நிறுத்தத் தெரியாதா எனக்கு?... எப்ப என் புருஷன் கழுத்துல நீ கைய வச்சியோ அந்த நிமிஷமே நான் ஒதுங்கிட்டேன்" என்று பாலசௌந்தரி அழுதபடி கூறவும்,

நித்யாவும், தீபாவும், முந்தைய நாள் யாருக்கோ ஃபோன் பண்ணி பாலசௌந்தரி பேசிய விபரத்தைக் கூறினார்கள்.

 

"இருந்தாலும் உங்கம்மாவை என்னால நம்பமுடியல்ல விக்னேஷ்... நாம அழகு சுந்தரம் வீட்டுக்கு போவோம்" என்று அவசரப்படுத்தினான் மேகன்.

 

மிருத்திகாவை கடத்தியது யாராக இருக்கும்?

 

அடுத்த அத்யாயத்தில் சந்திப்போம்...

 

❤❤❤❤❤


Post a Comment

0 Comments