31
காதலன் வீட்டிற்குக்
கல்யாணம் பேச அனுப்பிவிட்டுக்
காத்திருக்கும் வலியை விடவா
கொடிய வலி, மரண வலி?
🌹🌹🌹🌹🌹🌹
இப்பொழுதே மேகனின் வீடு கல்யாண களை
கட்டியது போலிருந்தது.
மிருத்திகா வீட்டினர் அனைவரும் மேகன்
வீட்டிற்கு வந்திருந்தனர். மிருத்திகாவை, செண்பகத்துடன். விக்னேஷ் வீட்டில்
விட்டுவிட்டு வந்திருந்ததால் மேகன்தான் முகத்தை தொங்கப்போட்டு அலைந்தான். நைசாக
நழுவலாம்னு பார்த்தா..., பாலசௌந்தரி, மேகனை கவனிச்சுக்கிட்டே இருந்தார்.
"என்னடா நழுவ முடியல.." என்று
மேகன், சிபியிடம் புலம்ப,
"போனதடவ, போயும்,போயும் அந்த அம்மா
கண்ணுல மாட்டிட்ட. .. அதை மறக்க முடியுமா? அதான் உன்னையே விடாம சைட்
அடிச்சுக்கிட்டு இருக்கு..."
"சைட் டா"
"என்ன செய்றது இன்னைக்கு உன்
தலையெழுத்து, நாற்பதுகளில் இருக்கும் பொம்பளை, உன்னை
சைட் அடிக்குது..."
"டேய்! ஏதாவது உதவி செய்வேன்னு
பார்த்தா கடுப்பேத்திக்கிட்டு இருக்க?" என்று கூறியவன், பால சௌந்தரி,
பெரியவர்கள் பேச்சில், கவனமாயிருந்ததைப் பார்த்து, மெல்ல நகர,
"தம்பியையும் கூப்பிட்டு
பேசுவோம்... அவருக்கும் நாம என்ன பேசுறோம்னு தெரிஞ்சிருக்கனும்ல? நாளபின்ன, எங்க
பொண்ணுகிட்ட, பெரியவங்க பேசினது, எனக்கெதுவும் தெரியாதுன்னு சொல்லிடக்
கூடாதுல்ல..." என்று கூறி பாலசௌந்தரி, மேகனையும் அவன் குடும்பத்தினருக்கு
அருகில் அமரவைத்து விட்டார்.
சும்மா இருந்திருந்தாலும் அவன்பாட்டுக்கு
இருந்திருப்பான். பாலசௌந்தரி செய்தது மேகனை சீண்ட, 'இந்த அத்தையை கொஞ்சம் அலற
விடலாமா?' என்று யோசித்த நேரத்தில், அவன் மொபைல் ரிங் ஆனது...
"இவனுக்குன்னு கஸ்டமர் கேர்ல
இருந்து ஃபோன் வருமே! அப்படியே கழண்டுடுவான். ம்ஹும்! கொடுத்து வச்சவன். நாமதான்
இந்த பெருசுகள் கிட்ட அல்லாடனும்" என்று சிபி நினைத்ததற்கு மாறாக, மேகன்
அங்கேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.
"ம்ம் சொல்லும்மா! நான்தான்
பேசுறேன்."
"...."
"என்னடி சொல்ற? லூசா நீ? இது சீசன்
இல்லடி." என்றவாறு அனைவரையும் பார்த்தான். அவன் எதிர்பார்த்தபடியே, அனைவரும்
மேகனின் "டி" யில் ஆர்வமாகி, இவன் பேசுவதை கவனித்தனர், கவனிக்காதது
போன்று...
'நான் அப்படியெல்லாம் இல்லை' என்பது போல
நேரடியாக மேகனையே பார்த்துக் கொண்டிருந்தார். பாலசௌந்தரி.
'அதானே! யார் நீங்க? எனக்கும் இதுதான்
தேவை மாமியாரே!' என்று குஷியான மேகன், யாரையும் கவனிக்காததுபோல, மேற்கொண்டு பேச
ஆரம்பித்தான்.
"சீசன் இல்லைடி... எல்லோரும் என்
பக்கத்துலதான் இருக்காங்க. அப்புறம் பேசலாம். நகர முடியலடி."
"..."
"இவ்வளவு சொல்றேன் புரிஞ்சுக்காம
மறுபடியும் மாங்கா கேக்கிற? நான் இப்ப மாங்காய்க்கு எங்கடி போவேன்."
"மாங்காயா? !!!" வீட்டினர்
அதிர்ந்து பார்க்க, சிபி மட்டும், 'ஆஹா! இவன் விளையாட ஆரம்பிச்சுட்டான்...'
"ஏய்! என்னடி சொல்ற? நீ மாங்கா
கேக்குறதுக்கு நான் காரணமா? நான் உனக்கு வாங்கித்தர்றேன்னு சொன்னதே
இல்லயேடி."
'அடேங்கப்பா என்னமா நடிக்கிறான்? ஒரு
பொண்ணு மாங்கா கேட்டா அர்த்தம் புரியாதாமா?!! நடத்துடா... நடத்துடா... ' சிபி.
" என்னடி சொல்ற? தப்பா?"
என்றவன், சட்டென்று குரலை மாற்றி, தெளிவான ஹஸ்கி வாய்சில் பேசினான்.
"அடிப்பாவி! என்ன சொல்ற? ஒரு தடவைதானே?...."
"...."
"நீயாவது ஜாக்கிரதையா...."
"..."
"சரி! சரி! அழாதே! மாமா
இருக்கேன்ல?"
"..."
"வீட்ல யார்ட்டயும்
சொல்லவேண்டாம்... நான் வந்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறேன்."
"...."
"ஆஸ்பத்திரிக்கு வேண்டாமா? பின்னாடி
பிரச்சனையாகிடப் போகுது. .."
"...."
"ஏய்! கல்யாணம் இன்னும் ...."
"என்ன நடக்குது இங்கே? இத்தனை பேர்
இருக்கீங்க? என்ன ஏதுன்னு கேட்க மாட்டீங்களா?" என்று பாலசௌந்தரி அலற...
'ஆஹா வொர்த் ஔட் ஆயிச்சு. .. ம்ம்ம்! என்
கிட்டயா உன் துப்பறியும் வேலையைக் காட்ற? யார்ட்ட?' என்று நினைத்தவன் ஒன்றும்
தெரியாதவனைப் போல, மொபைலை கட் பண்ணிவிட்டு பாலசௌந்தரியைப் பார்த்தான்.
யாரும் ஒன்றும் பேச முடியாமல் முழிக்க,
"உங்க பையனை நீங்க கேட்கிறீங்களா?
இல்ல நான் கேட்கட்டுமா?" என்று அவசரப்படுத்தினார் பாலசௌந்தரி.
"டேய்! மிருத்திகாவை எப்ப...?
எங்கடா ...? வந்து. .." என்று தாத்தா திணற,
"இதுக்கு எதுக்கு தாத்தா இவ்வளவு
திணறுறீங்க? இதிலெல்லாம் நீங்க தான என் குருவே!"
"அடப்பாவி! உங்க குடும்பமே இப்படித்தானா?
கேட்டுக்கிட்டுங்கள்ல? இந்த குடுபத்துலதான் பொண்ணு குடுக்கப் போறீங்களா?"
என்று மிருத்திகாவின் அப்பாவிடம் பாலசௌந்தரி கேட்க,
"விஷயத்தை பெருசாக்காதீங்க!
சின்னஞ்சிறுசுக....அதான் கல்யாணம் பண்ண போறோமே? " என்று ஷோபனா தயங்கி கேட்க..
"இனி எப்படி இந்தக் குடும்பத்துல
கல்யாணம் பண்றது? நாங்க வேற இடம் பாத்துக்குறோம்." பாலசௌந்தரி எகிற,
"இனிமே எப்படி வேற மாப்பிள்ளை பார்க்க
முடியும்?" என்று மிருத்திகாவின் அப்பா, பாலசௌந்தரியின் காதைக் கடித்தார்.
"ஏன் முடியாது? நான் சொன்னா
அழகுசுந்தரம். ..."
"ஏய் ய்! " என்று அதட்டியவர்,
"அசிங்கப்படுத்தாதே!" என்றார் மிருத்திகாவின் அப்பா.
'இதற்கு
மேல் தாங்காது' என்று முடிவுக்கு வந்த மேகன்...
"இங்கே என்ன நடக்குது?" என்று
கேட்டான்.
உடனே
புரிந்து கொண்ட மரகதம் ஆச்சி!
"படவா
இதெல்லாம் என்ன விளையாட்டு?" என்றதும்,
"இதுதான் உங்க குடும்பத்துல
விளையாட்டா? விட்டா மடியில தூக்கி கொஞ்சுவீங்க போல?" என்று பாலசௌந்தரி
நக்கலடித்ததும்,
மேகன், "அத்தை! எங்க வீட்டுல, வார்த்தைல
கவனம் வச்சு பேசனும்... இது உங்க வீடில்ல" என்றதும் பாலசௌந்தரி ஏதோ பேச வர,
கையைக்காட்டி நிறுத்தியவன் ,
"இப்போ எதுக்கு இப்படிப்
பேசுறீங்க?" என்று மிருத்திகாவின் அம்மாவிடம் மேகன் கேட்டான்.
"உனக்கு ஒன்னும் தெரியாது?"
"தெரியாமத்தானே கேட்கிறேன்
சொல்லுங்க.."
"இதெல்லாம்
என் வாயால சொல்ல முடியுமா?"
"இதுவரைக்குமே
எதால பேசுனீங்களோ அதாலயே பேசுங்க..."
"எல்லா அசிங்கமும் பண்ணிட்டு...
பேச்ச பாரு?"
"அத அப்புறம் பாக்கலாம், என்ன
அசிங்கம் பண்ணிட்டேன்."
"டேய்! விடுடா... அவங்கதான்
பேசுறாங்கன்னா நீயும் கூடகூட பேசிக்கிட்டு." என்றார் ஷோபனா.
"ஷோபி! அவன்தான் பேசுறான்ல?" என்று
மரகதம் ஷோபனாவிற்கு 'பேசாதே!' என்பது போல சைகை காட்ட, மேகன் குடும்பத்தினருக்கு,
மரகதமே, பேசாதே என்றால் விஷயம் பெரிதில்லை. .. என்று அசுவாசப்படுத்திக் கொண்டு,
நடப்பதை சிபியைப் போல், கன்னத்தில் கைவச்சு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.
"அத எப்படி சொல்வேன்?"
"சொல்லமுடியலைன்னா பேசாம
உட்காருங்க." என்று மேகன் தனது மாமியாரிடம் பேசிவிட்டு, மற்றவர்களைப்
பார்த்து, "நீங்க கல்யாணம் விஷயமா பேசுங்க... நான் பக்கத்துலயே உக்காந்து
கேட்கிறேன்."
"அண்ணா! மாப்பிள்ளை விளையாடுறார்
நாமும் வேடிக்கை பார்ப்போம்" என்று கவலையுடனிருந்த விக்னேஷிடம் மெல்ல
கூறினான் கதிர்.
"அதெப்படி மேல பேசுறது"
மிருத்திகாவின் அம்மா!
"அத்தை இப்ப உங்களுக்கு என்ன
பிரச்சனை?"
"என் மகளை தலை நிமிர முடியாம
பண்ணிட்டு ஒன்னும் நடக்காத மாதிரி பேசுற?"
"இதென்ன வம்பா போச்சு... நான்
இங்கே இருந்துகிட்டு உங்க மகளை என்னங்க பண்ணினேன்? தலையில சுமக்க முடியாத
பாரத்தையா தூக்கி வச்சுட்டேன்."
"பாரத்தை வயுத்துலேல ஏத்திட்ட?"
"அய்யே! என்னத்தை இவ்வளவு அசிங்கமா
கற்பனை பண்றீங்க?"
"நானா? நானா?"
"பின்ன நானா?"
"உங்கிட்ட தானடா மாங்கா
கேட்டா"
"ஆமாம்! அதுக்கும் நாம கல்யாணம்
பேசுறதுக்கும் என்ன சம்மந்தம்?"
"என்ன சம்மந்தமா? நீ ஃபோன் ல
பேசினதை நான் கவனிக்கலைன்னு நினைச்சியா?"
'அதுக்குத்தானே கத்தவிட்டு வேடிக்கை
பார்க்கிறேன்...' என்று நினைத்தபடி சிரித்துக்கொண்டு,
"என்னத்த கவனிச்சீங்க? தீபிகா எங்கிட்டே
மாங்கா கேட்டா... அவ சிபியோட அண்ணன் பொண்ணு! அவளுக்கு ஏற்கனவே வயித்துக்கு
சரியில்லாததால் அவ அப்பா, மாங்கா வாங்கித்தர மாட்டார்னு, சிபிக்கு போன்
பண்ணியிருக்கா, அவன் எடுக்கலைன்னு, எங்கிட்ட கேட்டா... விஷயம் இதுதான்
போதுமா?" என்று நமுட்டுசிரிப்போடு மேகன் முடிக்க,
"இதென்ன புதுக்கதை? மாங்கா தின்ன
நீ காரணம்னு சொன்னாளே?" என்று பாலசௌந்தரி விடாமல் கேட்டாள்.
"ஆமா! அவளுக்கு மூன்றுநாள்
முன்னாடி கடையில சிக்கன் நூடுல்ஸ் வாங்கிக் குடுத்தேன்... அது அவளுக்கு சேரல. ..
ஆஸ்பத்திரியில காரம், புளிப்பு எதுவுமில்லாமல் சப் புன்னு சாப்பிட சொல்லிட்டாங்களாம். இன்னைக்கு ஸ்கூல் வாசலில் மாங்காயைப் பாத்துட்டு ஃபோன் பண்றா.
.. "
'அடப்பாவி! என்னமா ரீல் சுத்துற? அதுக்கு ஏன்டா தீபிய இழுக்குற?' என்று
கவலைப்பட்டான் சிபி!
"நான் நம்ப மாட்டேன்.. இதுக்கும்
உங்க கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்?" என்ற பாலசௌந்தரியிடம்,
"போதும் பாலா! நம்ம பொண்ணு
மானம்தான் போகுது... அவர்தான் இல்லைனு சொல்றார்ல விட்டுடு." என்று மிருத்திகா
அப்பா கூற,
"அவன் பொய் சொல்றான்."
"நம்ம பொண்ணு அப்படியா?"
"அவ மேலதான் எனக்கு நம்பிக்கையே
இல்லை! இவன் சும்மா இருந்தாலும், கல்யாணம் பண்ணிவைக்க அவ எதுனாலும் செய்வா"
"கடவுளே!" என்று தலையில்
கைவைத்து விட்டார் மிருத்திகாவின் அப்பா.
"அத்தை இப்படி ஒரு வழி இருக்கா?
ஆனா உங்க பொண்ணு ரொம்ப மோசம் அத்தை... என்னைத் தொடவே விடமாட்டேங்கிறா..."
"மாப்பிள்ளை போதும்! என் பொண்ணு
இங்க வந்து கௌரவமாக வாழனும்" என்றார் மிருத்திகாவின் அப்பா நைந்த குரலில்.
"அத பத்தி நீங்க ஏன் மாமா
கவலைப்படுறீங்க? எங்க வீட்ல என்னையும் நம்புவாங்க... உங்க பொண்ணையும்
நம்புவாங்க... எங்க வீட்டு 'மகாலட்சுமி' மாமா உங்க பொண்ணு"
"பேச்ச மாத்தாத" - பாலசௌந்தரி
'இவ விட மாட்டா' என்று நொந்தபடி
பார்த்தார் மிருத்திகாவின் அப்பா.
"நீங்க கேளுங்க அத்தை"
"யார்கிட்ட போயி அம்மா வாயக்
குடுக்குது பார்" என்று தீபாவிடம் கூறினான் விக்னேஷ்.
"உங்க கல்யாணம்..." என்று
மீண்டும் கேட்டாள் பாலசௌந்தரி.
"என்னத்தை இதுகூட புரியலையா? ஆஸ்பத்திரிக்கு
போகலைனா வயிறு எப்படி சரியாகும்னு? கேட்டேன்... கவலைப்படாதீங்க மாமா! உங்க
கல்யாணத்துக்குள்ள சரியாகிடும்னு கிண்டலாக சொன்னா... கல்யாணம் இன்னும்
முடிவாகவில்லைடா இப்பொழுதே எப்படி அதை நினைச்சு சொல்லப்போறேன்னு சொன்னேன்..."
என்ற மேகன், பாலசௌந்தரியின் முகம் தெளியாததைக் கண்டு, இன்னும் நம்பவில்லையா? உங்க
பொண்ணுக்கு ஃபோன் பண்ணி பேசுறேன். ஸ்பீக்கர் ல வைக்கிறேன் கேளுங்க."
"மாப்பிள்ளை வேண்டாம்... மீரா
பாவம்! அவளுக்கு இந்த விஷயம் தெரியவேண்டாம்" என்று அவசரமாக தடுத்தாள் தீபா.
"நீங்க கவலைப்படாதீங்க அக்கா நான்
பாத்துக்கிறேன்." என்று கூறி விட்டு மிருத்திகாவிற்கு ஃபோன் பண்ணினான்.
"போதும் டா விளையாடினது"
என்றார் தாத்தா. அவரைப் பார்த்து கண்ணடித்துவிட்டு, மிருத்திகா ஃபோன் எடுத்ததும்
"ஹாய்! ரித்தி!"
"என்னாச்சுங்க. .. கல்யாண நிச்சயம்
என்னைக்காம்?" என்று பதட்டத்துடன் மிருத்திகா கேட்க,
"அவ்வளவு ஆசையாடி என்னை கல்யாணம்
பண்ணாக்கிறதுல?... நீ மாங்கா கேட்டேல்ல... அத வாங்கிட்டு
வந்து நேரா சொல்றேன் ஓகே?."
"மாங்காயா? நான் எப்ப கேட்டேன்? இது
சீசனில்லையே?" என்று சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு அவன் சீண்டுகிறான் என்று
புரிந்தது.
"படவா! வந்தேன் அவ்வளவுதான்ஆமா!...
பேச்ச பாரு. .. இவர்கிட்ட மாங்கா கேட்டாங்களாம். .."
"அப்போ உனக்கு நான் மாங்கா வாங்கி
வர வேண்டாமாடி"
"அடப்போடா! நீயெல்லாம் அதுக்கு
சரிபட்டு வரமாட்ட. "
"அடிப்பாவி! என்னடி சொல்ற?"
"அந்த இடத்தை, நான் பாத்ததுக்கே,
வேகமா பட்டனை மாட்டி கூசிப்போனவன்தானே நீ?"
"அடிப்பாவி முழுசா
பேசமாட்டியா?" என்று கூறி மேகன் ஸ்பீக்கர் ரை ஆஃப் செய்ய போக, கதிர் அதைப்பறிக்க.
"இதுல முழுசா பேச என்ன மாமா
இருக்கு? அந்த தழும்பு பத்திதான் கேட்கிறேன்.. நெஞ்சுல அந்த இடத்தில் எப்படி அடிபடும்?
மாமா... மாமா... இப்ப சொல்லுங்க கல்யாணத்துக்கு முன்னாடி மாங்கா குடுப்பீங்களா?
கல்யாணத்துக்கு பின்னாடியே"
"ரித்தி போதும்" என்று மேகன்
கத்த, குஷியான மிருத்திகா,
"எங்க விட்டேன்? ஹாங்!
கல்யாணத்துக்கு பின்னாடி நான் மாங்கா திங்க, உங்களுக்கு கூச்சம்போறவரையா
காத்திருக்க முடியும்னு? நானே கவலையோட இருக்கேன்... வந்துட்டாரு கல்யாணத்துக்கு
முன்னாடி... என்ன டார்லிங் பேச்ச காணம்?"
ஸ்பீக்கரை ஆஃப் செய்து மேகனிடம் கொடுத்து
விட்டு,
"கர்மா" என்று சிரித்தான்
கதிர்.
"அதான் பேசவேண்டியதெல்லாம் நீயே
பேசிட்டியே வைக்கிறியா ஃபோன?"
"இன்னும் பேச ஆரம்பிக்கவேயில்லையே
டார்லிங்!"
"வேணான்டி என்னை கிளப்பிவிடாதே...
ஏற்கனவே உங்க அம்மா கல்யாணத்துக்கு ஐடியா குடுத்துருக்காங்க... அப்புறம் என்மேல
தப்பு சொல்லாத" என்று பேசியபடி மாடிக்கு சென்றான்.
"அப்படி என்ன ஐடியா டார்லிங்? சொல்லுங்களேன் முயற்சி பண்ணிப்
பாக்கலாம்."
"நானே கடுப்புல இருக்கேன்... நேரா
உன் வீட்டுக்கு வந்தேன்..நிஜமாவே மாங்கா கேட்ப."
"செண்பா இருக்காளே மாமா?"
"ஆமா செண்பா பெரிய இவ, அவளை மட்டும்
விட்டுடுவேனா? "
"என்ன சொல்றீங்க?" என்று மிருத்திகா
பொங்கவும்தான், அவள் எடுத்துக் கொண்ட அர்த்தம் புரிய,
"அடச்சே! செண்பா தங்கைடி"
"யப்பா! வயித்துல பாலை
வார்த்தாய்" என்று பின்னால் வந்து நின்ற சிபி நிம்மதி பெருமூச்சு விட்டான்.
சிபியை ஒரு பார்வை பார்த்துவிட்டு மிருத்திகாவிடம்,
"அவளை மட்டும் நமக்குள் வர விட்டுட்டுவேனான்னு சொன்னேன்டி."
"ஓ! அதுசரி... ஏதோ மாங்கா... ஐடியா ன்னு ஏதோ சொன்னீங்களே... அதெல்லாம் நீங்க
வந்து சொல்லக்கூடாதா டார்லிங்?"
"இங்க பாரு... வரமாட்டேன்னு தைரியத்துல பேசாத, ஏன்டி என்னை உசுப்பேத்தி
விடுற?"
"வாங்க டார்லிங்!
இப்பவே ஆரம்பிச்சாதான் கல்யாணம் பண்றதுக்குள்ள உங்க கூச்சத்தை தூக்கியெறிய
முடியும்... "
"இங்க பாரு!"
"வந்தாதானே பாக்கமுடியும்?"
"வேணாம்! என்னை சீண்டாத."
"முதல்ல கிளம்பி வாடா!"
ஃபோனை வைத்தவன் பின்பக்க படிகளில் இறங்க. .. ,
"மேகா! உன் ஆளா ன்னு பாத்துக்க டா. .. அங்க ரௌடிபேபி வேற இருக்கு. போற
வேகத்துல கண்ணுமண்ணு தெரியாம ரௌடிபேபி மேல பாஞ்சிடாதே" என்று சிபி முடிக்கும்
போது காற்றுடன் பேசிக் கொண்டிருந்தான்."
"இவனைப் போயி சீண்டி விட்டுட்டியே மிருத்திகா." என்று மிருத்திகாவை நினைத்து
மறுபடியும் காற்றுடன் பேச,
எதிர்வீட்டு மாமா!
"அங்க இருந்து யார்ட்ட பேசிக்கிட்டு இருக்க? "என்று கர்ஜித்துவிட்டு,
அவங்க மாடியில் 'தேமே" என்று
துணிகாயப்போட்டுக் கொண்டிருந்த அவருடைய மகளையும், மனைவியையும் கீழ்வீட்டிற்கு
செல்லும்படி துரத்திக் கொண்டிருந்தார்.
'இந்த ஆளு நினைப்பை பாரு! நானே அரண்டு போயிருக்கேன்' என்று நினைத்தபடி
பால்கனியிலிருந்து ரூமிற்குள் சென்றுவிட்டான்...
ஹாஹ்ஹா! ஹா!
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!...
❤❤❤❤❤
0 Comments