30
சந்தோசமோ கவலையோ
சாய்ந்து கொள்ள உன் தோள் வேண்டும்!
🌹🌹🌹🌹🌹🌹
மேகன் சென்ற பிறகும், மிருத்திகாவின்
வீட்டில், யாரும் யாருடனும் பேசும் மனநிலையில் இல்லை.
மேகன் தன் அப்பாவின் கழுத்தருகில்
கையைக் கொண்டு போனது அனைவருக்குமே மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது... ஆனால் இதற்குக்
காரணம் நம்முடைய அம்மா... என்று நினைக்கும் பொழுது, இன்னும் வேதனையாக இருந்தது....
ஒவ்வொருவராய் அப்பாவின் அருகில் வந்து அமர்ந்தனர்....
ஒருவர் மாற்றி ஒருவர், தன்
தந்தையிடம் மன்னிப்புக் கேட்டனர்.
"நீங்க என்னடா பண்ணுவீங்க?
நம்ம வீட்டுல ஆள் சரியில்லை.... மேகன் மேலயும் தப்பு சொல்ல முடியாது. அந்தப் பையன்,
மிருத்திகாவை அடிக்க விடாமல், குறுக்கே நின்னும் அவனை மீறி நம்ம மீராவை உங்க அம்மா
அடிச்சது தப்பு.... உங்க அம்மாவை தடுக்க, அவனுக்கு வேறு வழி தெரியவில்லை... அப்படியிருந்தாலும்,
அவன் கை, என் மேல் படவே யில்லப்பா.... அவனும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், உங்க அம்மா
பிடிவாதம் பண்ணிக்கிட்டிருந்தாள். ... நம்ம மீராவுக்காகத்தானே அப்படிச் செய்தான்....
அவளுக்கு ஒன்னுனா தட்டிக் கேட்க ஒருத்தன் இருக்கானேன்னு நாம சந்தோஷம்தான் படனும்....
இனி என் பெண்ணைப் பத்தி கவலையில்லைடா... மேகன் பார்த்துக்குவான்...." என்று
கூறினார்....
"நீங்க எப்ப வந்தீங்கப்பா?
" என்று கதிர் கேட்டான்.
"உங்கம்மா கிட்ட, யாரோ
இங்க நடக்கிறத சொல்றாங்கடா. இன்னைக்கு காலைல திடீர்னு,
"வாங்க! விக்னேஷ் வீட்டுக்குப்
போவோம்னு சொல்லி, கூட்டிட்டு வந்தா. பஸ்ஸிலிருந்து இறங்கி வரும் பொழுது நம்ம பழய வீட்டுக்குப்
பக்கத்தில் குடியிருந்தவரைப் பார்த்து விட்டேன். நான் அவரிடம் பேசிவிட்டு
வந்தா, உங்க அம்மாவை உக்கார வச்சிட்டு, ரொம்ப பொறுமையா மேகன் பேசிக்கிட்டிருக்கார்.
இவதான் அடாவடி பண்ணி பேசிக்கிட்டிருந்தா..." என்று கூறினார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த
பாலசௌந்தரி, மொபைல் ஃபோனை எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்று, யாருக்கோ ஃபோன்
பண்ணினார். நடந்த அனைத்தையும் கூறினார்.
"இனி அவள ஒன்னும் பண்ண
முடியாது... எனக்கு என் புருஷன் உயிர் முக்கியம்." என்று கூறினார்.
அந்தப் பக்கம் என்ன சொன்னார்கள்
என்று தெரியவில்லை. "சரி! சரி! என்று கூறிவிட்டு ஃபோனை வைத்து விட்டார்.
இதை கவனித்துக் கொண்டிருந்த
இரு மருமகள்களும், ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். 'இனிமேலாவது இந்த வீடு
நிம்மதியா இருக்கட்டும்.' என்று நினைத்துக் கொண்டனர்.
அடுத்தநாள் காலையில் மேகன்,
விக்னேஷ் வீட்டிற்கு வந்து, மிருத்திகாவின் அப்பாவிடம்,
"ஒரு நல்ல நாள் பாத்து
சொல்லுங்க மாமா... எங்க வீட்டிலிருந்து மிருத்திகாவைப் பெண் கேட்டு வருவாங்க."
என்று கூறினான்.
"நாளைக்கே கூட வாங்க...
வீட்ல எல்லோரும் இருக்கோம்" என்று கூறினார்.
முதல்நாள் நடந்ததற்கு மீண்டும்
மன்னிப்பு கேட்டான்.
"எனக்கு நீங்களும், அப்பாவும்
ஒன்னுதான். அதனால நான் தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சுடுங்க மாமா" என்று மேகன்
கேட்டதும்,
வீட்டிலிருந்த அனைவரும் 'இவன்
மாதிரி மாப்பிள்ளை கிடைக்க நாம கொடுத்து வச்சிருக்கனும் ' என்று மகிழ்ந்தனர்.
அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே மேகனின் கண்கள் மிருத்திகாவை தேடிக் கொண்டேயிருந்தது. இதை கவனித்த நித்யா,
"மீரா ஹாஸ்டலுக்குப்
போயிட்டா." என்று கூறியதும்,
"சரி! நான் எங்க வீட்ல
சொல்லிட்டு உங்களுக்குத் தகவல் சொல்றேன்." என்று விடைபெற்று வேகமாக ஹால்- லிருந்து
வெளியேற, அங்கிருந்து மேகன் வந்திருப்பதை அறிந்து ஓடிவந்த மிருத்திகாவின் மேல் மோதி,
அவள் விழுந்து விடாமல் பிடித்துக் கொண்டான். மீண்டும் மிக அருகில் மிருத்திகாவைப் பார்த்தவன்,
அவளை விடாமல் பிடித்தவாறு மிருத்திகாவை வைத்தக் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
மிருத்திகாவும் சுற்றுப்புறம் மறந்து, அவனையே பார்க்க.... சுற்றி இருந்தவர்களுக்குத்தான்
வெட்கமாக போய் விட்டது. முதலில் தெளிவான கதிர்,
"மேகன்! இங்கே நாங்களும்
இருக்கோம்." என்று கூறியும் இருவரும் அசையவில்லை .
"அச்சோ அத்தை!"
என்று நித்யா கத்த,
சட்டென்று, மிருத்திகாவும்
மேகனும் விலகி நின்று பாலசௌந்தரியைத் தேட,
அனைவரும் சிரித்தனர்.
மிருத்திகா மேகனையும், மேகன்
மிருத்திகாவையும் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
"ம்ஹூம்! அவங்க ரெண்டு
பேரும் யாரையும் பாக்கிற மாதிரி இல்ல.... அப்பா! சீக்கிரம் கல்யாணம் செஞ்சு வச்சுடுவோம்."
என்று கதிர் சிரிக்க, மிருத்திகா கதிரை கிள்ளிவிட்டு ஓடிவிட்டாள்..
"ஆ! பிசாசே!" என்று
கதிர் கத்த,
அப்பொழுதும் மேகன், மிருத்திகா
சென்ற பாதையையே பார்க்கவும்,
"மீரா போயாச்சு. ..
" என்றான் கதிர்.
சிரித்தபடி விடைபெற்றுச் சென்றான்
மேகன்.
மேகன் சென்ற சிறிது நேரத்தில்
செண்பகம் வந்தாள்.
"மிருத்திகா இனி வேலைக்கு
வர மாட்டாளா? " என்று விக்னேஷிடம் கேட்டாள்.
"எப்படியும் அடுத்து
வர்ற முகூர்த்தத்திலேயே கல்யாணம் பண்ணி வச்சுடுவோம். இனி அவ இஷ்டம்தான்மா"
"எனக்குத்தான் ரொம்ப
கஷ்டமா இருக்கு அண்ணா..."
"உள்ள தான் மீரா இருக்கா...
போய் பாரு,"
"அம்மா இருக்காங்களா?"
"ஆமா"
"அவளோட கடற்கரைக்கு போயிட்டு
வரவா?"
"அவகிட்ட கேளு, வந்தா
கூட்டிட்டுப் போ!"
மிருத்திகாவும் செண்பகமும்
கடற்கரைக்கு வந்தனர். அங்கே மேகனும், சிபியும் நின்று கொண்டிருந்தனர்.
"அவர் சொல்லித்தான் வந்தாயா?"
என்று மிருத்திகா, செண்பகத்திடம் கேட்டாள்.
"இல்லப்பா! மேகனுக்கு
நாம வர்றது தெரியாது," என்று செண்பகம் கூறிக் கொண்டிருக்கும்பொழுதே, சிபி இவர்கள் இருவரையும் பார்த்து விட்டான்.
"குட்டிசாத்தான் நம்மல
பாத்துடுச்சு" என்று செண்பகம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே மேகனும், சிபியும்
இவர்கள் அருகில் வந்து விட்டனர்.
"ஹாய்! குலதெய்வமே,"என்று
மேகன், செண்பகத்தைப் பார்த்து கையைத்தூக்கிக் கும்பிட செண்பகம் சிரித்துவிட்டாள்.
"உங்க குலதெய்வம் ரௌடி
யா மேகா?" என்று சீரியஸாக சிபி கேட்க,
கையிலிருந்த மண்ணை எடுத்து
சிபிமேலயே போட்டாள் செண்பகம்.
"ரௌடிபேபி லூசா நீ?
"
"வாயைத் திறந்த... கொன்னுடுவேன்
ராஸ்கல்,,,"
"உனக்கு அன்பாவே பேசத்தெரியாதா
ரௌடிபேபி? மிருத்திகாவின் தோழி தானே நீ?"
"அதுக்கு?"
"என்னை பிரியமாவும் பாக்கலாம்..."
"ஆமா! அத்தை மகன் பாரு?
பிரியமா பாக்க.."
"பேசாம உன் புருஷனை டைவர்ஸ்
பண்ணிடு ரௌடிபேபி... நாம கல்யாணம் பண்ணிக்கலாம்."
அவ்வளவுதான் கையில் இருந்த
பேக்கை தூக்கிக் கொண்டு சிபியை செண்பகம் துரத்த, இதுவரை அவர்களை வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்த மிருத்திகா சிரித்தபடி மேகனைப் பார்த்தவள் சிரிப்பு நின்றது.
மேகன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்...
'எவ்வளவு நேரமாகப் பார்க்கிறான்?
இது என்ன பார்வை? இப்படிப் பார்த்தால் எப்படி உட்கார முடியும்?' என்று நினைத்தவள் அதற்கு
மேல் அவனைப் பார்க்க முடியாமல் குனிந்து கொண்டாள்.
"ரொம்ப மாறிட்ட டி. முன்னாடி
எல்லாம் இப்படி சிவக்காது உன் முகம்."
"கொஞ்சமாவது நார்மலாக
பார்க்கணும்."
"எப்படி பார்க்கிறதுன்னு
நீதான் சொல்லித் தாயேன்."
"அய்யே பச்சைபிள்ளை"
"அப்படி நானா சொன்னேன்?
நீதான் என்னை பச்சபிள்ளை ன்னு சொன்ன." என்றதும் மேகனை நிமிர்ந்து பார்த்தாள்.
மறுபடியும் அவன் குறும்பு, கண்களில் மின்ன பார்க்கவும், சிரித்தபடி வேறுபக்கம் திரும்பிக்
கொண்டாள். அங்கே செண்பகமும், சிபியும் அமர்ந்து இருக்க,
"வாங்க நாம அவங்க கிட்ட
போகலாம்" என்று எழுந்தவளை பிடித்து அமரவைத்தான்.
"லூசாடி நீ! நாம தனியா
இருக்கட்டும்னு தான், அவங்க அங்க போயிட்டாங்க."
"செண்பகம் தனியா இருக்காளே?"
"கண்ணும் போச்சா? சிபி
பக்கத்துல தானே இருக்கான்."
"அதான் பயப்படுறேன்"
"ஹேய்! அவன் நல்லவன்
டி. அதுமட்டுமல்லாமல் செண்பகம் கல்யாணம் ஆனவ."
"கல்யாணம் ஆகியிருந்தா
நான் ஏன் பயப்படுறேன்." என்று மிருத்திகா ஏதோ யோசனையில் உளற,
"ஹேய்! என்னடி சொல்ற?
ரௌடிபேபிக்கு கல்யாணம் ஆகலயா? " என்று மேகன் ஆச்சரியமாகக் கேட்டதும்தான், மிருத்திகாவிற்கு,
'உளறி விட்டோமோ?' என்று தோன்ற, மெல்ல மேகனைப் பார்த்தவள், அவன் இரு புருவமும் முடிச்சிட,
அவளையே துளைக்கும்படி பார்க்கவும், இவனிடம் மறைக்க முடியாது. கண்ணுக்குள்ளேயே நுழைகிற
மாதிரி பார்த்தே உண்மையைத் தெரிஞ்சுக்குவான்.' என்று எண்ணியவள்,
"ஆமா! அவளுக்கு இன்னும்
கல்யாணம் ஆகல. செவ்வாய் தோஷம் இருந்ததால மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டமாயிடுச்சு, அவளும்
அதைப் பெரிசா எடுத்துக்காம, தன் தங்கையையும், தம்பியையும் படிக்க வைத்து திருமணமும்
செய்து வைத்தாள். ஆனால் விதி அவள் தங்கையின் கணவர் ரூபத்தில் வந்தது. மனைவியின் உடன்பிறந்தவள்,
தனக்கும் உடன்பிறந்தவள்தானே? அந்தப் பொறுக்கிதான் அப்படி இருக்கான் என்றால், இவள் கூடப்
பிறந்த கழிசடை ஒரு நாள் இவளிடம் வந்து,
"நான் வேண்டுமானால் வாழ்க்கையை,
விட்டுக் கொடுக்கிறேன்னு சொல்லிட்டா."
அன்னைக்கு அருவருத்துப் போனவள்
தான், அந்த ஊரைவிட்டு இங்கு வந்து, 'திருமணம் ஆகிவிட்டது' என்று பொய் கூறி வாழ்கிறாள்.
மேகனால் நம்பமுடியவில்லை...
செண்பகத்தையே பார்த்தான். 'பாவம் அவள்' என்று தோன்ற,
"இனிமேலாவது கல்யாணம்
பண்ணிக்க வேண்டியதுதானே?" என்று சீரியஸாகக் கேட்டான்.
"செவ்வாய் தோஷமுள்ள மாப்பிள்ளை
கிடைக்கவில்லை..."
"இப்பக் கூட இதெல்லாம்
நம்புறாங்களா?" என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு சுண்டல் விற்கும் சிறுவன்,
"என்னக்கா அண்ணே சுண்டல்
வாங்கித் தரமாட்டேங்கிறாரா?" என்று கலாய்க்க
இருவரும் சிரித்துவிட்டனர்.
மறுபடியும் மேகன் அவள் சிரிப்பதையே
ரசித்துப் பார்க்க,
"ஆரம்பிச்சுட்டான்.'
என்று நினைத்தவள், 'இவனை விடக்கூடாது! நாமும் அவனையே பார்ப்போம்' என்று நினைத்து, அவளும்
மேகனையே குறுகுறு வென்று பார்க்க, காற்றில் மேகனின் சட்டை பறந்து, முதல் பட்டன் விலக,
"எங்கே காணோம்?"
என்று கேட்டாள் மிருத்திகா.
"என்னத்தடி காணோம்?"
"உங்களுக்கு முதல் பட்டன்
இருக்கும் இடத்தில் ஒரு தழும்பு இருந்ததே?" என்று அந்த இடத்திலேயே உற்றுப் பார்த்தவாறு
கூற,
சட்டென்று முதல் பட்டனை மாட்டியவன்,
"ச்சீ! அங்கெல்லாமாடி
பார்த்து தொலைப்ப?" என்று காதுவரை சிவந்து போய் கூற,
'ஆஹா! இவனுக்கு இப்படி ஒரு
கூச்சம் இருக்கா? ம்ம்ம் இனி எங்கிட்ட விளையாடு மவனே, அந்தத் தழும்பைப் பற்றி பேசியே
வாயை மூடவைக்கிறேன்...' என்று நினைத்துக் கொண்டே பார்த்தாள்.
"ஹேய்! என்ன பார்வை டி
இது?"
"ஓ! இப்ப வரைக்கும் நீங்க
என்ன பண்ணீங்க?"
"அடிப்பாவி! உன் கண்ணை
மட்டும் தானடி பார்த்தேன்"
"ஆமா! இல்லைனு சொல்லலையே!
ஆனா குறு குறு ன்னு பாத்தீங்களா இல்லையா?"
"அதுக்கு?"
"பையன் அம்சமா இருக்கானே!
நாமலும் பார்ப்போம்னு, பார்த்தது தப்பா?"
"அம்சமா இருக்கேனா? அது
இன்னைக்குதான் தெரிஞ்சதா?"
"இவ்வளவு நாளா முகத்தை
மட்டும் தானே பார்த்தேன்?"
"ஹேய்! என்னடி இப்படியெல்லாம்
பேசுற?"
"நான் என்ன பண்ணட்டும்?
அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே முழுசா பார்த்தேன்.... இன்னைக்கு பார்த்தா காணோமே?"
"என்னது முழுசா பாத்துட்டியா?
மெல்ல பேசித்தொலைடி. எவன் காதிலாவது விழுந்து தொலைக்கப் போகுது."
"சரி மெல்ல கேக்குறேன்.
அந்த இடத்துல எப்படி தழும்பு வந்துச்சு?"
"எந்த இடத்துலக்கா?"
என்று சுண்டல் விற்கும் சிறுவன் கேட்டதும்...
"ரொம்ப முக்கியம் போடா!
அந்தப்பக்கம்..." என்று அந்தச் சிறுவனை, மேகன் விரட்ட,
சற்று தூரத்தில் அமர்ந்திருந்த
சிபி,
"இவன் என்ன? மிருத்திகா
பின்னாடி போவான்னு பார்த்தா? ஒரு பையன் பின்னாடி...' என்று நினைத்த வேளையில் அந்தச்
சிறுவன், சிபி அருகில் வர, அவனைப் பிடித்து,
"அந்த அண்ணன் ஏன்டா உன்னை
விரட்டுறான்?" என்று மேகனைப் பார்த்தபடி கேட்க, சிபி அந்தச் சிறுவனைப் பிடித்ததைப்
பார்த்த மேகன், 'அவனை விடு' என்பது போல் சைகை செய்ய, அதை பார்த்த சிறுவன்,
"அந்த அண்ணா உங்களுக்கு
தெரிஞ்சவரா? என்று சிபியிடம் கேட்டான்.
"ஆமா! ஏன்?"
"அந்த அண்ணாவை, அந்த
அக்கா முழுசா பாத்துட்டாங்களாம்." என்று கூறி விட்டு ஒட,
சிபி 'இது எப்படா நடந்தது?
' என்று நினைத்தவாறு மேகனைப் பார்க்க, அதை புரிந்து கொண்ட மேகன்,
"என் மானத்தை வாங்கிட்டியேடி"
என்று மிருத்திகாவிடம் எகிற,
"நான்தானே பார்த்தேன்...
" என்று மேலும் தூண்டிவிட்டாள்.
" ஏய்!" என்று அவள்
காதைத்திருக வந்தவனிடமிருந்து, மிருத்திகா விலகி நகர, கடல்மண் மேகன் கண்களில் விழுந்து
விட்டது.
அவன் "ஸ்ஆஆ" என்று
கண்ணை கசக்கவும்,
"கண்ணை கசக்காதீங்க!
நான் ஊதிவிடுறேன்... " என்று கூறி மேகன் அருகில் வந்து அவன் கண்களில் ஊதி கண்களில்
விழுந்த மண்ணை வெயியேற்ற முயற்சித்தாள்.
இதைப் பார்த்த சிபியும், செண்பகமும்
"இவன் என்ன பொது இடத்தில் இப்படி பண்றான்" என்று கூறி செண்பகத்தைப் பார்க்க,
அவள் வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.
செண்பகத்தின் இந்த செயல் சிபியை
சீண்ட, "இவ ஏன் இப்படி வெட்கப்படுறா?" என்று அதிசயமாகப் பார்த்தான்.
மேகனின் கண்களில் மிருத்திகா
ஊத, தூசி விலகியதும், மிருத்திகாவின் அருகாமை மேகனை குஷிபடுத்த, மிக அருகிலிருந்த மிருத்திகாவின்
கழுத்தில் மேகன் ஊத, சட்டென்று விலகி அமர்ந்தவள், மேகன் கண்களில் குறும்பு மின்ன, அதைப்
பார்த்து, "ஆரம்பிச்சுட்டான்." என்று நினைத்து குனிந்து கொண்டாள்.
"ரித்தி!" என்று
ஹஸ்கி வாய்சில் அழைத்தான்.
"ம்ம்ம்"
"நான் ஒன்னு கேட்கலாமா?"
"ம்ம்ம்"
"நமக்குக் கூடிய சீக்கிரம்
கல்யாணம் ஆகப்போகுது... இது சம்பந்தமா எதாவது கனவுகள்... ஐ மீன் எதிர்பார்ப்பு. ..
எப்படி சொல்றதுன்னு தெரியல.... இப்படி எதுவும் இருக்கா?"
"ம்ம் நிறையவே இருக்கு...
என்னுடைய ஒவ்வொரு செயலும் உங்களை நினைத்தே இருக்கனும்... உங்களுக்கு நான் எப்படி இருந்தா
பிடிக்கும் அந்த மாதிரி... ஆடை, அணிகலன்கள், சிகை அலங்காரம், இப்படி உங்களுக்கு எது
பிடிக்கும்னு தெரிஞ்சுகிட்டு அந்த மாதிரி நான் இருக்கனும்... உங்களுக்குப் பிடிச்ச
உணவை தயாரித்து, இன்னும் புதுசு புதுசா செய்து உங்களை அசத்தனும். .. தினமும் சாயந்தரம்
அல்லது நேரம் கிடைக்கும் பொழுது, உங்களைக்கட்டிக்கிட்டு, எதுவும் பேசாமல், எதைப்பற்றியும்
நினைக்காமல், உங்கள் நெஞ்சில் சாஞ்சுக்கனும். அப்பப்போ உங்களை சீண்டி விளையாடனும்.
ஒவ்வொரு நாளும் உங்கள் முகம் பார்த்தே தூங்கி, உங்கள் முகம் பார்த்தே முழிக்கனும்.
... குறைஞ்சது நாலஞ்சு பிள்ளைகளாவது பெத்துக்கனும்... உங்க மனசுக்கு, நான் எப்பவும்
ஸ்பெஷலா இருக்கனும்.. இன்னும்.. இன்னும். .. மொத்தத்துல எப்பவுமே, எப்ப்ப்ப்பவுமே உங்களுக்குப்
பிடித்த மாதிரி நான் இருக்கனும்... ம்ம்ம் அப்புறம்..." என்று கூறியவாறு கனவுலகிலிருந்து
, மீண்டவள், தான் மேகனின் கைக்குள் கை கோர்த்து, அவன் தோளில் சாய்ந்த வண்ணம் பேசிக்கொண்டிருப்பது
புரிய, சட்டென்று தள்ளி அமர்ந்தாள்.
"ஏண்டி! ஏன்? வா! நல்லா
தான் இருந்துச்சு..."
"பொது இடமில்லையா?"
"கல்யாணம் பண்ணின பிறகும்
இப்படி தான் இடைவெளி விடுவாயாடி?"
"கல்யாணத்துக்கு அப்புறம்,
மத்தவங்க கண்ணுக்கு உறுத்தாத வகையில, நெருங்கியிருப்பது போலவும் இல்லாம, தள்ளியும்
இல்லாம இருப்பேன்."
"இதுவரை, கல்யாணத்துக்கப்புறம்,
நீ எப்படி இருப்பேன்னு மட்டும் தானடி சொல்லிருக்க. .. நான் உன்னோட எப்படி இருக்கனும்னு
சொல்லவே இல்லையே?"
மேகனையே இமைக்க மறந்து பார்த்தாள்...
"நீங்க எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கும்... கடைசிவரை உங்கள் கண்கள் என்னைப்
பார்க்கும் போது, என் மேல் உள்ள காதல் அந்த கண்களில் இருக்கனும். அது போதும் எனக்கு."
என்றவளை, 'இழுத்து அணைத்து முத்தமிடவேண்டும்' என்று தோன்றியது. ஆனா பொது இடம்னு.
.. அது இது ன்னுவாளே" என்று நினைத்தவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்....
நம் மிருத்திகாவின் அழகான
கனவுகள் நிறைவேற ஆண்டவனை பிரார்த்திப்போம்.
ஜோசியர் இன்னும் ஒரு தடை வரும் என்றார்... ஒருவேளை
அது பாலசௌந்தரியாக இருந்தால், அந்தத் தடையும் விலகிவிட்டதுதானே? அப்போ! அடுத்தடுத்த
அத்யாயங்களில் மேகனும், மிருத்திகாவும் திருமணம் சாப்பாடு போடப்போகிறார்களா?
அடுத்த அத்யாயத்தில் சந்திப்போம்!
❤❤❤❤❤
0 Comments