சிம்டாங்காரன்: அத்தியாயம்-28

 

 

28

முத்தம் முத்தம் என்கிறான்

என் மொத்தமும் அவன் தானன்பதை அறியாமல்

🌹🌹🌹🌹🌹🌹

 

அனைவரும் மேகன் வீட்டிற்கு சென்றதும், மேகன் குடும்பத்தினர் ஆர்வமாக வரவேற்றனர்.

 

சம்பிரதாயமான விசாரிப்புகளுக்குப் பிறகு, ஒருவருக்கு ஒருவர் அறிமுகப் படுத்திக் கொண்டனர். மேகன் குடும்பத்தை மிருத்திகா குடும்பத்திற்கும், மிருத்திகா குடும்பத்தினரை மேகன் குடும்பத்திற்கும் மிகவு‌ம் பிடித்துப் போனது.

 

"தப்பா எடுத்துக்காம ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக்கிட்டா நாங்க மேற்கொண்டு பேச வசதியா இருக்கும்." தயங்கியபடி விக்னேஷ், மேகன் குடும்பத்தினரைப் பார்க்க,

 

"எதுவாக இருந்தாலும் தயங்காம கேட்டுடுப்பா." என்றார் பிறைசூடன்.

 

"வந்து... நீங்க இங்க வந்து வேற பெண்களை, பொண்ணு பார்த்தீங்க... அவங்களுக்கு என்ன சொல்வீங்க?" என்று விக்னேஷ் கேட்டான்.

 

"உங்ககிட்ட யார் சொன்னா? சொன்னவங்க முழுவிபரமும் சொல்லவில்லையா?" என்று பிறைசூடன் கேட்டார்.

 



"இது சம்பந்தமா மேகனிடம் கூட நாங்க விசாரிக்கல. . பொண்ணு வீட்லயும் கேட்டுத் தெரிஞ்சுக்க முடியாது. ஏன்னா, நீங்க பாத்த ரெண்டு பொண்ணும், எங்க உறவினர் வீட்டு பொண்ணு, சுந்தரின்னு ஒரு பொண்ண பாத்தீங்களே? அவ எங்க பெரியம்மா பொண்ணு... நீங்க பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு பொண்ணுக்கு துணைப் பெண்ணா மீராவ தான் பெரியம்மா கூட்டிட்டுப் போயிருந்தாங்க... முக்கியமான வேலையிருந்ததால நாங்க யாரும் போகல... அங்கிருந்து, எங்க வீட்டுக்கு வந்த மீரா, "ஓ!" ன்னு அழுதா... என் மனைவி கிட்ட மட்டும் சொல்லியிருக்கா... " என்று விக்னேஷ் கூறியதும்,

 

மேகனுக்கு சுந்தரியை பெண் பார்க்கப் போன போது, பெண்ணுக்கு அருகில் நின்ற யாரோ அதிர்ச்சியானது ஞாபகம் வர, "அடிப்பாவி அது நீயா?" என்று வாய் விட்டு உளறி விட்டான் மேகன்.

 

"நீங்க பார்த்தீங்களா? என்று தீபா கேட்க,

 

"இல்ல! அந்த பொண்ணு சுந்தரியையே நான் பாக்கல... ஆனா, பொண்ணுக்கு பக்கத்துல நின்ற யாரோ என்ன பார்த்து, அதிர்ச்சியான மாதிரி இருந்தது. மன பிரமைன்னு விட்டுட்டேன்." என்று சொல்லிக் கொண்டிருந்த போது, மேகனுக்கு ஏதோ தோன்ற, நிறைமதியை, பொண்ணு பார்க்கப் போனபோது நீங்கதான என்னை மொறச்சு பார்த்தது?” என்று மேகன் கேட்டதும்,

 



சிபியும், "ஆமாம் டா! இவங்களேதான்... இவங்கள எங்கேயோ பாத்திருக்கேனே னு, இவங்கள பார்த்ததிலிருந்தே யோசிச்சுக்கிட்டிருக்கேன்." என்றான்.

 

"ஆமா நிறைமதி என் தங்கை முறை வரும், உறவுப்பெண்... என்னை உங்களுக்குத் தெரியலைனாலும், உங்களை எனக்கு நல்லாத் தெரியும். அன்னைக்கும், மீரா அங்க வந்திருந்தா... அவளுக்கு எப்படி இருந்திருக்கும்? கோமா வுல இருந்து வெளி வந்துட்டீங்க போல, ஆனா! பழய நிகழ்ச்சிகளை மறந்துட்டிங்களோன்னு யோசிச்சோம்."

 

"அப்ப சிவகாமி?" என்று மேகன் கேட்டதும்,

 

"எந்த சிவகாமி? எங்களுக்கு அப்படி யாரையும் தெரியாதே?" என்று மிருத்திகா குடும்பத்தினர் கூறவும்,

 

"இல்ல! அங்கயும் நான் மிருத்திகாவைப் பார்த்தேன்... அவ என்னை திட்டகூட செஞ்சா. அப்புறம் நான் திரும்பிப் பாக்குறதுக்குள்ள, அவ எதிர் வீட்டுக்குள்ள புகுந்துட்டா." என்றான் மேகன்.

 

"யாரு?... சிவகாமியை பார்க்க போன போதா?... தாம்பாளத் தட்டு தூக்க ஒத்தப்படையில் ஆள் இல்லைன்னு நான் தான் எதிர் வீட்டில் நின்று கொண்டிருந்த பெண்ணைக் கூப்பிட்டேன். அதுவா மிருத்திகா?!! என்று ஆச்சி ஆச்சரியத்துடன் கூற,

 

"நம்ம எதிர்வீட்டு சிவகாமியா இருக்குமோ?" என்று நித்யா கதிரிடம் கேட்டாள்.

 

"எந்த தெரு?" என்று கதிர் கேட்க, தாத்தா தெருப்பெயர் சொன்னதும்,

 



 

"அது எங்க வீடு தான். .. எதிர் வீட்டுப் பெண்ணை, பெண் பார்க்க வந்தவர்கள், வீட்டுக்கு வந்து விசாரிச்சதா, மாமா சொன்னாங்க. அவங்க நீங்களா?" என்று நித்யா கூற,

 

"ஆமா!" என்று நித்யாவிடம் சிபி கூறிவிட்டு, "அப்போ நான் போய் உங்க அப்பா கிட்டயா நண்பா விசாரிச்சேன்?” என்று கதிரிடம் சிபி கேட்டான்.

 

"அது எனக்குத் தெரியாது... ஆனா நீ எதுக்கு எங்க வீட்டுக்கு வந்து விசாரிச்ச? அந்த பொண்ண உங்களுக்கு பிடிச்சிருச்சோ?" என்று ஒரு விதமான முகப்பாவத்தோடு கதிர் கேட்க,

 

"அந்த அளவுக்கு போகாதிங்க நண்பா.. இவன் சிவகாமியைப் பார்த்து விட்டு வந்ததிலிருந்து, மேகன், அவனைத் திட்டிவிட்டு சென்ற பெண், மிருத்திகா மாதிரி தெரியுதுன்னு புலம்பி எடுத்துட்டான். அதனால, அந்த வீட்டில் இருக்குற பொண்ணு யாருன்னு? பாக்க வந்தேன். என் நேரம் உங்க வீட்ல யாருமே இல்லை, உங்க அப்பாவைத் தவிர... நான் சொல்றத நம்பலைன்னா, மிருத்திகாகிட்ட கேளுங்க... அவள ஸ்கூல்ல போயி பாத்து, மேகன தெரியுமா? ன்னு, தூர இருந்த மேகனைக் காட்டிக் கேட்டேன். ஆஸ்கர் ஆக்டிங் போட்டு, அவங்க ரெண்டு பேருக்கும் சம்மந்தமே இல்லைங்கிற மாதிரி பேசி, என்னை நம்ப வச்சுட்டாங்க... நாங்க வந்ததிலிருந்து மிருத்திகாவைத் தேடிக்கிட்டு தான் இருந்தோம்... எந்த ஆதாரமும் இல்லாம." என்று முடித்தான் சிபி.

 

"எனக்கு ஏன் இது தோணாம போச்சு? மிருத்திகா சொன்ன நாலு பெயரும் அவளுக்குத் தெரிஞ்சவங்களா இருக்கும்னு." என்று மேகன் கேட்க,

 

"நீ தான் நம்பவே இல்லையடா? இங்க வந்தபிறகு தானே அவ இருக்காளோன்னு உனக்குத் தோணுச்சு..." என்று சிபி கூறினான்.

 

"சரி! இந்தப் பேச்ச விடுங்க!... இப்ப நடக்கிறத பார்ப்போம்.." என்று பொதுவாக கூறிவிட்டு, "தம்பி! இதுவரை நாங்க மூணு பொண்ணுங்கள தான், பார்க்கப் போனோம். இவன் எந்தப் பெண்ணையும் பார்க்கக் கூட இல்ல... ஆஸ்திரேலியாவிலிருந்த பெரியவர், ஏதோ சொன்னாரேன்னு சிபியும், எங்க மாப்பிள்ளையும், வற்புறுத்தியதால் தான் இந்த ஊருக்கே வந்தான்... மேகன், கல்யாணத்துல விருப்பமில்லாமல் இருக்கும் போது, அவங்களுக்கு நாங்க என்ன பதில் சொல்ல முடியும்? ஏதேதோ காரணம் சொல்லி மறுக்க வேண்டியதாச்சு.. எங்களுக்கே இது பிடிக்கல.... அதான் நாலாவது ஒரு பொண்ணு பாக்க இருந்தோம்.. அதை பார்க்காம விட்டுட்டோம். உறுதியா சோல்றேன் நாங்க எந்தப் பெண்ணுக்கும் வாக்கு கொடுக்க வில்லை. ... அதனால நாம நிம்மதியா அடுத்த பேச்ச ஆரம்பிக்கலாம்" என்று தாத்தா கூறினார்.

 

அடுத்து கல்யாண பேச்சை அவர்கள் பேச ஆரம்பித்ததும்... மேகனுக்கு ஒரு ஃபோன் வர,

சிபிக்கு கண் காட்டிவிட்டு,

 

"நீங்க பேசிக்கிட்டிருங்க. .. நான் இதோ வரேன்." என்று கூறி மாடிப்படிகளில் தாவி ஏறினான் மேகன்.

 

அவனைத் தொடர்ந்து சிபி, மாடிக்கு வந்து, "யார்டா ஃபோன்ல?" என்று கேட்டான்.

 

"அது சும்மா கஸ்டமர் கேர் .. .. எனக்கு மிருத்திகாவைத் தனியா பார்க்கனும் போல இருக்குடா... நான் பின்னால் இருக்கும் படிவழியே இறங்கி போயி பாத்துட்டு வந்துடுறேன்." என்றான் மேகன்.

 

"ஏண்டா அங்கிருந்தே போயிருக்கலாமே? ஏன் இப்படி தெரியாம போய் பார்க்கனும்?" என்று சிபி கேட்டதும்,

 

"உனக்கு ஏன் எதுவும் செட் ஆகல தெரியுமா? என்னை தனியா, அவகூட இருக்கவிடாம கூட்டிட்டு வந்துட்டாங்கடா. .. எப்ப பாத்தாலும் அவ ஒரு கூட்டத்தோடவே இருக்காடா..."

 

"ரௌடிபேபியையா கூட்டம்ங்கிற?"

 

"பின்ன இல்லையா?"

 

"அதுசரி நீ பாட்டுக்கு நழுவியிருக்க வேண்டியது தானே? என்னை ஏண்டா மாடிக்கு கூட்டி வந்த?"

 

"அது ஏண்டா திடீர்னு ஒன்னுமேஏஏ புரியாதவனா ஆயிடுற? என்னை அவங்க தேடினா, நீ ஒரு ஃபோன் பண்ணு, நான் வந்துடுவேன்."

 

"நல்ல உதவி! ஃபிரண்ட் டா போயிட்ட... சரி! போயிட்டு வா..." என்று கூறி அனுப்பி வைத்தான்.

 

கதவு தட்டும் ஓசை கேட்டு, 'அதுக்குள்ள வந்துட்டாங்களா? மேகனும் வந்திருப்பார்.. ம்ஹும்! அவர தனியாதான் பாக்கமுடியல, குறைந்த பட்சம் கூட்டத்தோட யாவது பார்ப்போம்... ' என்று எண்ணியவாறு ஓடிவந்து கதவைத் திறந்தாள்... மேகன் மட்டும் இருக்கவே.. "அவங்க வரலயா?" என்று கேட்டாள்.

 

"ஏன் நான் மட்டும் வந்தா என்ன? ஏண்டி கூட்டத்தோட தான் இருப்பியா? முதல் ராத்திரிக்காவது தனியா வருவியா? இல்லை கும்பலா வருவியா?"

 

"அய்ய! பேச்ச பாரு ... " என்றவள், அவன் உள்ளே வர வழிவிட்டுவாறு, "வீட்டில் யாருமில்லைன்னா யாரா இருந்தாலும் கதவ திறக்கமாட்டேன். தெரியுமா?"

 

"நான் யாரு உனக்கு?"

 

"சண்ட போடத்தான் தனியா வந்தீங்களா?" என்று மிருத்திகா கேட்டதும், சட்டென்று சிரித்த மேகன், அவளை இழுத்து கட்டியணைக்க, அவனிடமிருந்து விடுபட்டு,

 

"பெரிய வெளிநாட்டு அதிபரு!! பார்த்ததும் கட்டிதான் பிடிப்பார்..."

 

"நமக்கு கல்யாணம் பேசிக்கிட்டிருக்காங்கடி... நான், உன்னை கட்டிகூட பிடிக்கக் கூடாதா?"

 

அவனைப் பார்த்து சிரித்தவள், "அதான் கல்யாணம் பேசுறாங்கல்ல? இனி காலம்பூரா கட்டிப்பிடிச்சுக் கிட்டு தானே இருப்போம்? இப்ப பேசிக்கிட்டு இருக்கலாம்..."

 

"பேசுறதாஆ?!!.... ஒரு முத்தம் கூட கிடையாதாஆ?"

 

"ம்ம்ஹூம்!"

 

"சரி வா! இந்திய பொருளாதாரத்த பத்தி பேசலாமா?"

 

அவன் முகத்தைப் பார்த்து சிரித்தவள், "உங்களுக்கு என்ன வேணும்?" என்று கேட்டாள்.

 

"நீதான்டி வேணும்.."

 

"அது அப்புறம்.. இப்ப குடிக்க என்ன வேணும்? "

 

"எதாவது கஷாயம் இருந்தா குடு!"

 

"ஐய்! நல்ல ஐடியா!" என்று அடுப்படிக்குள் சென்றவள், ரோஸ்மில்க் தயாரித்தாள். மிக்ஸியில் இருந்த ரோஸ்மில்க் ஐ கண்ணாடி டம்ளரில் ஊற்றிக கொண்டிருந்தவளை, மேகன் பின்னாலிருந்து அணைக்க,

 



 

"படவா கையை எடுக்கல, பாவக்காய் ஜூஸ் தான்."

 

"அடிப்பாவி!"

 

"என் செல்லம்ல.....என்ன ஆச்சு? நல்ல பையனாதானே இருந்தீங்க...."

 

"உனக்கென்னடி தெரியும்? நீயாவது நான் வருவேன்னு காத்திருந்த... ஆனா நான்! நீ இல்லாத வாழ்க்கையை அஞ்சு வருஷம் வாழ்ந்திருக்கேன். ... நீயாவது விடிவுகாலம் பிறக்கும்னு காத்திருந்த... ஆனா நான், 'இனி என் வாழ்நாளில் வசந்தகாலமே வராது' என்று நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தேன். ... நாலஞ்சு தடவைதானே பார்த்திருக்கிறாய், பேசக்கூட இல்லயேடான்னாங்க நண்பர்கள்... அவங்களுக்கு என்ன தெரியும்? நீ என்னைக்கு என் கண்களில் விழுந்தாயோ அன்னையிலிருந்து உன்னோடுதானே வாழ்ந்தேன்.... ஆனா, 'இனி என்ன செய்யப் போகிறேன்?' என்று தெரியாமலே நான் வாழ்ந்த நரக வாழ்க்கையைப்பற்றி உனக்கென்ன தெரியும்.. அதான் இனி உன்னை விடுவதில்லைனு, பார்க்கும் போதெல்லாம் இறுக்கிக் கட்டிக்கிறேன்."

 

அவன் சொன்ன விதத்தில் மிருத்திகாவிற்கு, அவனை ஆறுதல் படுத்தவேண்டும் என்று தோன்ற, அவளே மேகனை அணைத்துக் கொண்டாள். அவளின் இந்த செயல் மேகனுக்கு, அவன் மேல், மிருத்திகாவிற்கு இருந்த காதலை உணர்த்தியது... அவனும் அவளை கட்டிக்கொண்டான்....சிறிது நேரத்தில் குறும்பு கண்களில் மின்ன...

 

"அப்படியே முத்தமும் கிடைக்குமா எனக்கு?..." என்று மேகன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, அவனிடமிருந்து விலகி, 'சேட்டை' என்று நினைத்தபடி ஃபிரிட்ஜில் வைத்திருந்த ரோஸ்மில்க் ஐ எடுத்து மிருத்திகா, அவனுக்குக் கொடுக்க,

 

"இன்னொரு டம்ளர் எடுத்து வா... ரெண்டு பேரும் சேர்ந்து குடிக்கலாம்." என்றான்.

 

"ஒன்னும் வேண்டாம்... எனக்கு வேணும்னா நானே செஞ்சுக்கிறேன்."

 

"ஓகே! உன் மனசுல என்ன இருக்குன்னு புரியுது... ஒரே டம்ளர்ல ரெண்டு பேரும் சேர்ந்து குடிக்க ஆசைப்படுற. .. எனக்கொன்னும் அப்ஜக்சன் இல்ல...பக்கதுல வா!" என்று மேகன் கண்ணடிக்க,

 

"ஆஹா! நீங்க இப்படி தான் இருந்தீங்களோ? எனக்குத் தான் தெரியாம போச்சு..."

 

"நீ எங்கடி என் கூட இருந்த? அப்படியே தெரிஞ்சிருந்தாலும் என்ன பண்ணியிருப்ப? ஆசையா கட்டிப்புடிச்சு முத்தமா குடுத்திருப்ப. ..?" என்று அவளிடம் குறும்பு செய்தவன், கொஞ்சம் சீரியஸாக,

 

"அப்ப நீ சின்ன பொண்ணுடி. .. படிச்சுக்கிட்டிருந்த. அதனால தான் எட்ட நின்னே ரசிச்சேன். .. உனக்கு படிப்பு முடியிற வரை, உன் மனச கெடுக்க வேண்டாம்னு, தள்ளியே இருப்போம்னு நினைச்சேன்..."

 

"அடடடடா! இவர் தொட்டுப் பேசினா என் மனசு கெட்டுடுமாக்கும்... நினைப்புதான்."

 

"அப்பறம் ஏன் கிட்ட வர மாட்டேங்கிற? முத்தம் தர மாட்டேங்கிற?"

 

"யீஈஈஈ... முத்தம்... முத்தம் னு... இப்படி தான் உங்க அம்மாவையும் முத்தம் முத்தம்னு போட்டு படுத்தினீங்களா?"

 

"எங்கம்மா வள்ளல்டி நான் கேட்காமலே எனக்குக் கொடுப்பாங்க. .. உன்னை மாதிரி என்னைக் கெஞ்ச விட மாட்டாங்க...!!"

 

"ஹை! உங்கம்மா உங்களுக்கு முத்தம் கொடுக்கிறதும, நான் உங்களுக்கு கொடுக்கிறதும் ஒன்னா?"

 

"தெரியுதுல! அப்புறம் எதுக்கு கேட்கிற?" என்று கூறியபடியே மீண்டும் அவளை நெருங்கினான்.

 

"வேண்டாம்! கிட்ட வராதீங்க.. அப்புறம் சத்தம் போட்டு கத்துவேன். .." என்று மிருத்திகா கூறியபடி பின்னோக்கி நகர்ந்து சுவரில் இடித்துக் கொள்ள, மேகன் அவளை நெருங்கி, அவள் நகராதபடி இருபுறமும் சுவரில் கைகளை வைத்து சிறைபடுத்தினான்... மெல்ல அவளை நோக்கி குனியும் போது,

 



"படார்!" என்று கதவு திறக்கும் ஓசை எழ, பதறி விலகியவள், கதவு திறந்து தானே இருந்தது? யார் இது கதவை உடைப்பது? என்று பார்த்தவள் கண்கள் விரிய பயத்தில் பின்வாங்கி, மேகனின் பின்னால் மறைந்து கொண்டாள்....

 



 

யார் அது? நம்ம ஹீரோயினோட ஃபீலிங்சை இப்படி கட் பண்ணியது??

 

அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்!!

 

❤❤❤❤❤❤

Post a Comment

0 Comments