சிம்டாங்காரன்: அத்தியாயம்-27

27

முடிந்தேவிட்டது என்ற விரக்தியின்

உச்சமா? பிரமையா?

உன் தரிசனம்!!!

🌹🌹🌹🌹🌹🌹

காலை உணவு வேளையின் பொழுது, முதல் நாள் நடந்த அனைத்தையும் தன் குடும்பத்தினரிடம் கூறினான் மேகன்.

 

ஒருத்தர் கூட, மிருத்திகா தன்னுடைய குடும்பத்தாராலேயே கஷ்டங்களை அனுபவித்திருப்பாள்’ என்று நினைக்கவில்லை.

 

"என்னடா அவளோட அம்மா இப்படி இருக்காங்க? நிஜமாகவே மிருத்திகாவைப் பெத்த தாய் தானா டா? தத்து பிள்ளையா? ஒரு அம்மா எப்படி டா இப்படி இருப்பாங்க? எல்லா வீடுகளிலும் அப்பா திட்டுவாரேன்னு, தடுக்கிறவங்க தானே அம்மா?" என்று ஒருவர் மாற்றி ஒருவர் புலம்பி விட்டனர்.

 

"இனியும் அந்தப் பெண் அவங்களோட பொண்ணா இருக்க வேண்டாம்யா... ஒரு நல்ல நாளா பாத்து, நிச்சயம் பண்ணி, கல்யாணத்தயும் முடிச்சுடுவோம்யா." என்றார் தாத்தா வருத்தத்தோடு.

 

எல்லோரும் அதை ஆமோதித்தனர்... உடனே குடும்ப ஜோசியருக்கு ஃபோன் பண்ணி, வரச்சொன்னார் தாத்தா.

 

குடும்ப ஜோசியர் வந்து மேகனின் ஜாதகத்தைப் பார்த்து,

 

"இவருடைய திருமணம் பல தடைகளைத் தாண்டி நடக்கும் என்பது தான் உண்மை... அதில் பெரிய கண்டத்தை தாண்டியாச்சு. பல தடைகளையும் மீறி பெண்ணை சந்திச்சாச்சு. இன்னும் ஒரு தடை இருக்கிறது. அதை தாண்டிவிட்டால் போதும்.. இனி கவனமாக இருங்க. " என்று கூறி பரிகாரம் என்று சில பூஜைகளை செய்ய சொல்லிவிட்டு போய்விட்டார்.

 

மிருத்திகாவின் அண்ணன் கதிர்க்கு  ஃபோன் பண்ணினான் மேகன். கதிர் போனை எடுத்தான். அவனிடமிருந்து, மிருத்திகா ஃபோன் நம்பரை வாங்கி ஃபோன் செய்தான். மூன்று முறை அடித்தும் மிருத்திகா ஃபோன் எடுக்காமல் இருக்கவே, மீண்டும் கதிருக்கு ஃபோன் செய்து, மிருத்திகா ஃபோன் எடுக்காதது பற்றி  கூறினான்.

 

"நான் நேரில் போய் பார்த்து விட்டு ஃபோன் பண்றேன்" என்று கூறி கதிர் ஃபோனை வைத்து விட்டான்.

 

மேகனுக்கு இருப்பு கொள்ளவில்லை. தன் பைக்கை எடுத்துக் கொண்டு மிருத்திகாவின் வீட்டுக்கு விரைந்தான். வீட்டிற்குசென்று அழைப்பு மணியை அழுத்தினான். யாரும் வந்து திறக்கவில்லை. பயந்து போய் மீண்டும் ஃபோன் க்கு முயற்சி செய்தான். இரண்டு ரிங் போவதற்குள், கதவு திறந்தது. மேகன் வேகமாக உள்ளே வர, அவள் அப்பொழுது தான் குளித்திருப்பாள் போல தலைமுடியை துவட்டிய படி முன்னே நடக்க, மேகன் அவளை பாய்ந்து சென்று இழுத்து, பின்புறமாக கட்டிப்பிடித்தவன், எதிரில் அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தாள் மிருத்திகா.  'அப்போ யாரை அணைத்திருக்கிறேன்' என்று நினைப்பதற்குள், அவனைப் பிடித்து எட்ட நிற்க வைத்த தீபா,

 


    "அக்கா மேல் இவ்வளவு பாசமா தம்பி? வந்ததும், காதலியைக் கூட பார்க்காமல், என்னை இறுக்கி அணைத்துக் கொண்டீர்களே! " என்று கூறி சிரிக்க,

 

அசடு வழிந்த மேகன், "மன்னிச்சுடும்மா பாக்கல." என்று தயங்கி கூறினான்.

 

"அவ்வளவு அவசரமா பாக்க வந்தது ஏன் னு தெரிஞ்சுக்கலாமா?"

 

"இல்ல!... அவசரமா வரல... ரித்தி ஃபோன எடுக்கல... வந்து... ஜோசியர் ஏதோ சொல்ல .... நீங்க குளிச்சுட்டு இருக்கும் போது வந்துட்டேனு நினைக்காதீங்க... அது நீங்க ன்னு நினைச்சு கட்டிப்பிடிக்கல. .."

 

"அப்பறம் யார்னு நினைச்சீங்க?" என்று மிருத்திகா கேட்டதும்.

 

"அது நீ தான் ன்னு... "

 

"என்ன!!?"

 

"இல்ல. ...வந்து. ."

 

"ஒரு மனுஷன் தனியா மாட்னா இப்படி தான் பண்ணுவீங்களா?" என்று அப்பொழுதுதான் வீட்டிற்குள் வந்தபடி கேட்டான் கதிர்.

 

"என்னண்ணா இப்ப வந்துருக்க?" என்று மிருத்திகா ஆச்சரியமாக கேட்டதும்,

 

"இத நான் எப்படி எடுத்துக்க? கரடி மாதிரி எப்படி கரக்ட்டா வந்த ன்னு கேக்கிறாயா? இல்ல.. ஏன் இங்க வந்தன்னு கேக்கிறாயா? " என்று சோகமாக கூறிய கதிரிடம்,

 

"அண்ணிய கூட்டுட்டு வந்திருக்கலாம்ல?" என்று பேச்சை மாற்றினாள் மிருத்திகா.

 

"வாழ்க்கை இப்படி தான் போகப்போகுது மேகன்... நீங்க ஒன்னு கேட்டா அவ வேற ஒன்ன கேப்பா..." என்று கதிர், மேகனிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே

 

"வீட்டுக்கு வந்தவங்கள உக்கார சொல்லாம, ரெண்டு பேரும் என்ன வாயடிச்சுக்கிட்டு நிக்கிறீங்க?" என்று கேட்டபடி வந்த விக்னேஷ்,

 

"வாங்க மேகன்!... வாடா! " என்று மேகனையும், தம்பியையும் வரவேற்றான்.

 

"ஜோசியர் கூறியதைக்கூறி, அதனாலதான் ஜாக்கிரதையா இருக்கச் சொல்ல வந்தேன். முன்னாடி எல்லாம் இந்த மாதிரி விஷயங்களில் நம்பிக்கை இல்லை... ஆனா ஆஸ்திரேலியாவில் அப்படி ஒருவர் சொன்னத வச்சுதான் இங்க மிருத்திகாவை தேடி வந்தோம்.... " என்றான் மேகன்.

 

"நீங்க சொல்றதும் சரிதான்... உங்க வீட்டு பெரியவங்கள நாங்க பாத்து பேசிட்டா, அடுத்து என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணிடலாம்." என்று விக்னேஷ் கூறியதும்,

 

மேகன் தன் வீட்டிற்கு ஃபோன் செய்து குடும்பத்தினரிடம் பேசிவிட்டு,

 

"இப்பொழுதே வர்றதானாலும் வருவீங்களாம்." என்று மேகன் சிரித்தபடி கூறியதும்,

 

தீபா, மிருத்திகா, கதிர் மூவரையும் பார்த்து, "என்ன போயிட்டு வந்துடலா மா?" என்று  விக்னேஷ் கேட்டதும் சம்மதித்தனர்.

 

மிருத்திகாவை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு விக்னேஷ், தீபா, கதிர் புறப்பட,

 

"மிருத்திகா வரலயா?" என்று வேகமாக கேட்ட மேகனிடம்,

 

"முறை ன்னு ஒன்னு இருக்கு மாப்பிள்ளை... இப்ப கூட்டிட்டுப் போகச் கூடாது." என்றான் சிரித்தபடி விக்னேஷ்.

 

"அப்போ நீங்க கிளம்புங்க! நான் மிருத்திகா விற்கு துணையா..." என்று மேகன் முடிக்கும் முன்பே,

 

"வேண்டாம்... மேகன் தம்பி! நீங்க, வந்ததுமே யார் கதவ திறக்கிறாங்கன்னு கூட பாக்காம..." தீபா என்ன சொல்லப் போகிறாள் என்பதை புரிந்து கொண்ட மேகனும், மிருத்திகாவும்,

 

"அண்ணி! "

 

"யக்கா!"

 

என்று இருவருமே பதற,

 

"ஏன்? என்ற ஆச்சு?” என்று விக்னேஷ் கேட்க.

 

‘மிருத்திகா சொல்வாள்’ என்று மேகனும், ‘மேகன் சொல்வான்’ என்று மிருத்திகாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க...

 

"ஹேய்! நிறுத்து இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்... அவ தனியா இருந்துக்குவா... உங்களை விட்டுட்டு போனாதான், எங்களுக்கு வயுத்துல நெருப்ப கட்டிக்கிட்ட மாதிரி இருக்கும்." என்று கதிர் சிரிக்க,

 

"எல்லோரும் உன்னை மாதிரி இருக்க முடியுமா?" என்றான் விக்னேஷ் சிரிப்பை அடக்கியபடி.

 

  தீபாவும் மிருத்திகாவும் சேர்ந்து சிரிக்க,

 

      "என்ன?" என்பது போல மேகன், இரு புருவத்தையும் ஏற்றி இறக்கி கேட்டான்.

 

      அவன் அவ்வாறு செய்தது மிகவும் அழகாக, நெருக்கமான உணர்வை ஏற்படுத்த, மிருத்திகா மேகனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

  மிருத்திகா பார்ப்பதை பார்த்து மேகனும் மிருத்திகாவையே பார்க்க,

 

      இதை கவனிக்காமல், கதிர், "வேண்டாம் ணா! மேகன் ட்ட சொல்லாதீங்க. என்ன இருந்தாலும் அவர் நம்ம வீட்டுக்கு வரப்போற மாப்பிள்ளை..." என்று  கெஞ்ச,

 

      "நம்ம மாப்பிள்ளை புரிஞ்சுக்குவார்டா. சிரிக்கத்தான் செய்வார் பாரேன். சீரியஸா எடுத்துக்க மாட்டார்." என்று விக்னேஷ் கூறியதும்,

 

"இருந்தாலும்.." என்று கதிர் தயங்க,

 

      "டேய்! நீ என்ன, தப்பா பண்ணின?" என்று விக்னேஷ் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது தீபா,

 

      "நீங்க எதுக்கு விவாதம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க? இங்க நீங்க பேசுறத கேக்கிற நிலையில் யாரும் இல்லை." என்று கூறியபடி மேகனையும், மிருத்திகாவையும் காட்டினாள்.

 

      "அண்ணா! இவங்களுக்கு சீக்கிரமே கல்யாணத்த பண்ணிடனும். கிடைச்ச சந்துல சிந்து பாடுறாங்க பாரு." என்று கதிர் சிரிக்க,

 

      "நம்ம மீரா இனிமேல் நல்லா இருப்பா டா... மேகன் கண்களில் தெரியும் காதல், எப்பவும் நம்ம மீராவுக்கு சந்தோஷத்தை அள்ளித் தரும்னு நம்புறேன் டா."

 

      "அடடா! இப்பெல்லாம் நீ அடிக்கடி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ற, கன்ட்ரோல் பண்ணு ண்ணா" என்று விக்னேஷை கலாய்த்த கதிர், மேகனைத் தட்டி,

 

      "உங்க வீட்டில நமக்காக காத்திருப்பாங்க. .. நம்ம படத்தை, அப்புறம் ஓட்டலாம்... இப்ப கிளம்புற வழிய பாக்கலாமா?" என்று கிண்டலடிக்க,

 

      மிருத்திகா, கன்னங்கள் சிவந்து, குனிந்து கொண்டாள்... அவளின் வெட்கம் மேகனை ஈர்க்க அவளை நெருங்கப் போனவன் முன்னால் நின்று , தன் இரு கரங்களையும் இரு புறமும் பக்கவாட்டில் நீட்டி,

 

      "போதும் மேகன்! போதும்!... முடியல!... நாம கிளம்புவோமா?" என்று கேட்டான் கதிர். கதிரின் இந்த செயலால் அனைவருமே சிரிக்க,

 

      மிருத்திகாவை,  வீட்டில் விட்டுவிட்டு, மற்ற நால்வரும் கதிர் வீட்டுக்குச் சென்று நித்யாவையும் அழைத்துக் கொண்டு, மேகன் வீட்டை நோக்கி சென்றனர்.

 

      "ஆமா! உங்க கல்யாணம் பத்தி ஏதோ சொல்ல வந்தீங்களே?" என்று மேகன் கேட்டதும்,

 

      "இவ்வளவு நேரம் என்ன பண்ணீங்க ராசா? இதை மட்டும் மறக்கல இல்ல? அவ்வளவு ஆர்வம்?!!... ம்ம்?" என்று கதிர் கண்களை சுருக்கி மேகனை பார்த்தபடி கேட்க,

 

  மேகன் சிரித்தான்.

 

      "இங்கேயே சொல்லிடு கதிர்... மேகன் தம்பி, அவங்க வீட்ல வச்சு கேட்டா, அத்தனை பேர் மத்தில, எப்படி இருக்கும்?  யோசிச்சு பாருங்க." என்று தீபா மேடை ரகசியம் பேச,

 

      "அப்படி என்னதான் நடந்துச்சு? இப்படி ஆர்வத்தை தூண்டுறீங்களே? யாராவது சொல்லுங்களேன்." என்றான் மேகன்.

 

       யாரும் வாயைத் திறக்கும் வழியைக் காணாததால், நித்யாவே சொல்ல ஆரம்பித்தாள்

 

      "என்னை பெண் பார்க்க வந்தாங்க... மாப்பிள்ளை எப்படி இருக்கார்னு பார்க்க, என்னை ஹாலுக்கு வரச் சொன்னாங்க, நான், எங்கூட எங்கம்மா, அடுத்து எங்க அத்தைனு மூணு பேரும் சேர்ந்து வர, போட்டோவில் மட்டும் என்னை பார்த்திருந்த கதிர், சுற்றி இருந்த பெரியவர்கள், பெண்ணை பார்க்க சொன்னதும், நடுவில் வந்த எங்க அம்மாதான் இவர் பார்க்க வந்த, 'பெண்!' என்று நினைத்து விட்டார்...

      ...  ஏன் னா? நான் நேரில் பார்ப்பதை விட ஃபோட்டோவில் பெரிய பெண்ணாய் தெரிவேன். .. அதோட நான் பார்ப்பதற்கு,  எங்க அம்மா மாதிரியே  இருப்பதால், எங்க அம்மாவை பொண்ணுன்னு நினைச்சு பார்த்து விட்டு,

 



  "பெண் கிட்ட தனியா  பேசணும்" னு சொன்னார்.

      எல்லோரும் கூடி பேசி, திண்ணையில் என்னை உக்கார வச்சிட்டு, அம்மா அடுப்படிக்கு போயிட்டாங்க.

 

      அம்மா அடுப்படிக்கு போனத பாத்த இவர், நேரா அடுப்படிக்கு போயிட்டார். எல்லோரும், "மாப்பிள்ளை திண்ணைக்கு போங்க!" என்று சொல்ல,

 

      "ஒருத்தராவது, பெண் திண்ணையில் இருக்கிறாள் னு சொன்னாங்க ளா?" என்று இடையில் புகுந்து கேட்டான் கதிர்.

 

கதிரை சிரித்தபடி ஒரு பார்வை பார்த்துவிட்டு,  தொடர்ந்தாள் நித்யா,

 

      “திண்ணைக்கு போகச் சொன்னவர் களிடம்,  "ஒரு நிமிஷம்" என்று கூறி அடுப்படிக்குள் சென்று விட்டார்.

 

அடுப்படிக்குள் இவர் வரவும் பதறிய எங்க அம்மா! "எதாவது வேணுமா?" என்று கேட்க,

 

      "அதெல்லாம் ஒன்னும் இல்ல... உங்கட்ட பேசனும்... உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?" என்று கேட்க,

 

      எங்க அம்மா ஒரு லூசு! எதார்த்தமா எடுத்துக்கிட்டு, "இதக் கேக்கவா இங்க வந்தீங்க? உங்கள எங்க வீட்ல எல்லோருக்கும் பிடிச்சிருக்கு." என்று கூறியிருக்கிறார்.

 

      "அத விடுங்க... உங்களுக்கு என்னை  பிடிச்சிருக்கா?” என்று இவர் கேட்டதும்,

 

எங்க அம்மா, " புடிச்சுருக்கு" என்று  கூறியுள்ளார்.

 

  நேராக வந்து, அவர் இருக்கையில் உட்கார்ந்தவரிடம்,

 

      "திண்ணைக்கு போங்க மாப்பிள்ளை!" என்று எங்கள் உறவினர் ஒருவர் கூற, 'இவங்க ஏன் திண்ணைக்கு போகச் சொல்றாங்க? ஒரு வேளை  காத்தாட போய் உட்கார சொல்றாங்களோ? " என்று நினைத்த இவர்,

 

      "பரவாயில்லை... இங்கேயே இருந்துக்கிறேன்." என்றதும் மற்றவர்கள் முழிக்க, இவர் அண்ணா,

 

  "பொண்ணுட்ட பேசனும் னு சொன்ன? இப்ப என்னாச்சு?" என்று கேட்க,

 

"பொண்ணுட்ட பேசினாயே, பொண்ண புடிச்சிருக்கா னு கேட்கிறார்" என்று நினைத்து,

 

  "எனக்கு பொண்ண பிடிச்சிருக்கு." னு  இவர் சொல்லிட்டார்.

 

      சரி! பொண்ண புடிச்சுப்போச்சு! பிறகு எதற்கு பேசனும்? னு நினைக்கிறார் போல ன்னு எல்லோரும் நினைச்சு மத்த விஷயங்களை பேச ஆரம்பிச்சுட்டாங்க.

 

 அப்புறம்,  இவர்களும் வீட்டிற்கு போயிட்டாங்க...  வீட்டுக்குப் போய் பேசும் போது,

 

       "ஏன்டா பொண்ணுட்ட பேசல? ன்னு இவர் அப்பா கேட்டதும் தான், இவர் செய்த கூத்து எல்லோருக்கும்   தெரிஞ்சிருக்கு...  அப்புறம்,

 

      "நான் அந்தப் பெண்ணை திரும்பிக் கூட பாக்கலயேன்னு இவர் சொல்ல, மறுபடியும் வந்து என்னை பாத்தாங்க..." என்று நித்யா கூற,

 

 காரே குலுங்கும் அளவுக்கு சிரித்தான் மேகன்...

 

அவர்கள் சந்தோஷமாக சிரிக்கட்டும். வாங்க! நாம,

 அந்த ஜோசியர் கூறிய தடை என்னவாக இருக்கும்? னு யோசிப்போம்.

 

  அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம். . . .

 

❤❤❤❤❤❤ 

Post a Comment

0 Comments