சிம்டாங்காரன்: அத்தியாயம்-22

 

22

உன்னைப் பார்க்கையில்

என்னைப் பார்க்கிறேன்

உந்தன் காந்தக் கண்ணில்...

🌹🌹🌹🌹🌹🌹

 

ஒரு வழியாக ஹோமம் நல்லவிதமாக முடிந்தது.

 

எல்லோரும் தீபிகாவை, நல்லா படிக்கவேண்டும் என்று ஆசீர்வாதம் செய்தனர்.

 

டீச்சராக தோழிகள் இருவரும் ஆசீர்வாதம் செய்தனர்.

 

மேகன் மற்றும் சிபி குடும்பத்தினர்களும் தீபிகாவை ஆசீர்வாதம் செய்ததும்,

 

வேதியர்களில் ஒருவர், "அவ்வளவு தான் ஹோமம் நல்லபடியா முடிஞ்சுடுத்து. அடுத்து, வந்தவா யாராச்சும் சரஸ்வதி அம்பாளை நோக்கி ஒரு தமிழ் சுலோகம், இல்ல... அவாளை செவிச்சு பக்தி பாடல் பாடி, முடிச்சு வச்சுட்டேள்னா, நாங்க புறப்படுவோம்." என்று கூறினார்.

 

அனைவருமே ஒருவரை ஒருவர் பார்க்க,

 

"இதுவரை ஹோமம் முழுவதும் சமஸ்கிருதத்தில் தானே மந்திரம் சொன்னோம். தமிழில் மங்கலம் செய்து நிறைவு பண்ணவேண்டும்... அதனால யாராச்சும் பாடுங்கோ!" என்றார் தலைமை வேதியர்.

 

யாரும் பாடுவதாக தெரியவில்லை...

"ஷோபி நீ பாட்டு க்ளாஸ் போனவதானே? நீயே பாடு..." என்று கூறினார் தாத்தா.

 

ஷோபனா, பிறைசூடனையும், மேகனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பாட ஆரம்பித்தார்.

 

"கலைவாணி நின் கருணை

தேன் மழையே... விளையாடும்

என் நாவில் செந்தமிழே...

அலங்கார தேவையே வனிதாமணி,

கலை யாவும் தந்தருள்வாய்

கலைமாமணி ...."

 

-என்று மெய்மறந்து பாடினார். அவர் பாடி முடித்ததும்,

"அடுத்தடுத்து பாட தெரிந்தவா பாடுங்கோ." என்று கூறி விட்டு வேதியர்கள், தட்சணை வாங்கிக் கொண்டு சென்றனர்.

 

"மேகன் நீ பாடு டா" என்று சிபி கூறவும்,

 

கலைவாணியே... கலைவாணியே...

உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..

வர வேண்டும் வரம் வேண்டும்

துடித்தேன் தொழுதேன் பலமுறை

நினைத்தே அழுதேன் இசை தரும் கலைவாணியே...

 

-என்று பாட,

 

"இவன் நிஜமாவே அன்னை சரஸ்வதி தேவியை நினைத்து பாடுறானா? இல்லை, அவனுடைய தேவியை நினைத்து பாடுறானா?" என்று தன் சந்தேகத்தை, ‘மைண்ட் வாய்ஸ்’ என்று நினைத்து உரக்கக் கூறினார் தாத்தா.

 

"இவர் புத்திய பாரு! எம் பேரன் சரஸ்வதிதேவியை நினைத்துதான் பாடுறான்." என்று தன் பேரன் பாடுவதை ரசித்து கேட்டார் மரகதம் ஆச்சி.

 

உள்ளம் அழுதது,

உன்னை தொழுதது,

உனது உயிரில் இவன் பாதி...

மடிமீது மரித்தேன்,

மறுஜென்மம் கொடுத்தாய்...

சிறு விரல்களில் தலைகோதி,

மடிதனில் எனை வளர்த்தாய்...

இசை எனும் வரம் வரும் நேரம்,

திசை சொல்லவில்லை மறந்தாய்...

முகம் காட்ட மறுத்தாய்.. ஆ....

முகம் காட்ட மறுத்தாய், முகவரியை மறைத்தாய்

உயிரே உயிரின் உயிரே

அழகே அழகின் அழகே

இனி அழ வலுவில்லை

விழிகளில் துளியில்லை

இனியொரு பிரிவில்லை

துயர் வர வழியில்லை.. வருவாய்..

 

-என்று மேகன் மிருத்திகாவைப் பார்த்தவாறு பாடி முடித்தான். வீட்டில் ஊசி விழும் சப்தம் கூட கேட்கவில்லை.

'என்ன! எல்லாரும் எழுந்து ஓடிட்டாங்களா?' என்று சந்தேகம் வந்து சுற்றிலும் பார்க்க,

 

ஒட்டு மொத்த வீடும், "இதுதான் சாமி பாட்டா?" என்று நினைத்தபடி மேகனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

"சரி! விடுங்க! விடுங்க! ஏதோ நல்லா பாடிட்டேன்றதுக்காக இப்படியா கண்ண கூட சிமிட்டாமல் என்னையே பார்பீங்க? " என்று மேகன் அசடுவழிந்தான்.

 

"சரிமா நீயாவது சரஸ்வதி பாட்டா பாடு. தீபிகாவுக்கே நீதான் பாட்டு சொல்லி தருவாயாமே " என்று சிபியின் அண்ணி, மிருத்திகாவிடம் கூற,

 

"திடீர்னு கேட்டா... " என்று மிருத்திகா தடுமாற,

 

"மேம் சரஸ்வதி பூஜை யப்ப எனக்கு ஒரு பாட்டு சொல்லி தந்தீங்களே! அந்த பாட்டு பாடுங்க மேம். நீங்க பாடிக் காட்டியபோது எல்லோரும் அசந்து நின்னோம்." என்று தீபிகா எடுத்துக் கொடுக்க,

 

“இவ எந்த பாட்ட சொல்றா?”... என்று யோசித்த செண்பகம், அது எந்த பாடல் என்று ஞாபகத்திற்கு வந்ததும், திருதிரு வென முழிக்க,

 

 

எல்லோரும் வற்புறுத்தவே,

 

"வேற வழியே இல்லை. சிக்கிட்ட. .. இனியும் நீ தயங்கினா ‘பிகு’ பண்ற மாதிரி தெரியும் பாடிடு." என்று செண்பகம் கூறினாள்

 

நீ தானே நாள்தோறும்

நான் பாட காரணம்

நீ எந்தன் நெஞ்சோடு

நின்றாடும் தோரணம்

நீயின்றி நான் பாட

வேறேது கீர்த்தனம்

உறவு ராகம் இதுவோ

இன்று உதயமாகி வருதோ

உனது தாகம் விளைய

இது அடிமையான மனதோ"

 

ஷோபனா, “இது சரஸ்வதி பாட்டா ம்மா?” என்று கேட்டதும்,

 

"ஆமாம் அத்தை! 'பாட்டு வாத்தியார் ' என்ற படத்தில் வரும்." என்று  மிருத்திகா கிசுகிசுக்க,

 

"அத்தையாஆஆ? !!!" என்று அதிலேயே ஷோபனா ஆஃப் ஆனதும்,

 

ஊற்றுப் போலவே பாட்டு வந்ததே

உன்னைக் கண்டதாலே ...

பாவை என்னையே பாட வைத்ததே

அன்பு கொண்டதாலே.

உன்னைப் பார்க்கையில் என்னைப் பார்க்கிறேன்

உந்தன் காந்தக் கண்ணில்...

நன்றி சொல்லியே என்னை சேர்க்கிறேன்

இன்று உந்தன் கையில்.

எந்தன் ஆவல் தீருமோ?

உந்தன் பாத பூஜையில்

இந்த ஜீவன் கூடுமோ?

உந்தன் நாத வேள்வியில்

எண்ணம் நீ... வண்ணம் நீ...

இங்கு நீ ...எங்கும் நீ...

வேதம் போலே உந்தன் பேரை

ஓதும் உள்ளம் தான்...

 

-என்று பாடி முடித்ததும்,

 

"இந்த பாட்டை யா நீ சரஸ்வதி பூஜை யப்ப மேடையில பாடுன?" என்று சிபியின் அண்ணி, பதறிபோய் தீபிகாவிடம் கேட்க,

 

"ஆமாம் ம்மா எவ்ளோ க்ளாப்ஸ் தெரியுமா?" என்றாள் அப்பாவியாக தீபிகா.

 

'இதேஏஏ வேலையாய்த்தான்  இருந்தியா?!!... நீ ஃபீல் பண்ணி பாட என் அண்ணன் பொண்ணு தான் உனக்கு கிடைத்தாளா?..." என்று நினைத்தபடி சிபி மிருத்திகாவைப் பார்த்து விட்டு, மேகனிடம், "பாருடா!" என்று கூறியபடி பார்க்க. அவனோ மிருத்திகாவை, உருகி உருகி பார்த்துக் கொண்டிருந்தான்.

 

"டேய் மேகா! ... மேகா... அடேய்ய்ய்!" என்று சிபி சப்தமாக அழைக்க,

 

"ஏன்டா இப்படி கத்துற? நான் என்ன நாலு மைலுக்கு அந்தபக்கமா இருக்கேன்?" என்று எகிறிய மேகனிடம்,

 

சிபி, "அவங்கள கூட மொபைல் ஃபோன்ல கூப்பிட்டுடலாம்... நீ தனி லோகத்துல இருக்க.... எனக்கு சிக்னல் கிடைக்கல..."

 

"இத சொல்லவா டா இவ்வளவு சத்தமா கூப்பிட்ட?" என்று மேகன் நொந்து கொள்ளவே,

 

"ஏன்டா ரெண்டு பேரும் என் தாலிய அறுக்கிறீங்க?"

 

"நிறுத்து! உனக்கு ஏதுடா தாலி? அதுலயும் எந்த ரெண்டு பேரு, உன் தாலியை? !!!.. இது என்ன பாஷை டா?"

 

"ம்ம்ம்? உன்கிட்ட பேசுறதுக்கு நான் சுவத்துலயே முட்டிக்கலாம்.."

 

"ஐய்ய்ய்யோ! !! உனக்கு என்ன தான்டா வேணும்?"

 

"போ!... நீ பண்ண கூத்துல நான் சொல்ல வந்ததையே மறந்துட்டேன்."

 

"ஆங்!!! இவனுக்கு என்ன ஆச்சு?" என்று மேகன் சத்தமாக ஃபீல் பண்ணவும்,

 

"உங்கூட சேர்ந்துட்டான்ல..!" என்று அருகில் குரல் மட்டும் வர,

 

"இது யாரு?" என்று மேகன் திரும்பிப் பார்த்தால், சுற்றியுள்ள அனைவருமே மேகனையே பார்த்த வண்ணம் இருந்தனர்... 'என்ன எல்லோரும் ஒரு டைப்பா பாக்குறாங்க?' என்று நினைத்தவன் சமாளிப்பாய் ஒரு சிரிப்பு சிரித்தான்.

 

"உங்கூட பேச நினைக்கிறார் உன் ஹீரோ." என்றாள் செண்பகம், மிருத்திகா விடம்.

 

"புரியுது ஆனா இத்தனை பேர் நடுவில எப்படி?..." என்று யோசனையுடன் மிருத்திகா கேட்டாள்.

 

  "அதுக்கு? ‘தனி ரூமுக்கு வா’ ன்னா கூப்பிட முடியும்?"

 

      "தெரியுதுல்ல?... அதான் என்ன பண்றதுன்னு தெரியாம யோசிச்சுக் கிட்டிருக்கேன்.

 

      "அப்ப சைட் அடிச்சுட்டு போகப்போறியா?" என்று இவர்கள் இருவரும் மேகனிடம் பேசுவது பற்றி யோசிக்க,

 

அதே நேரத்தில் மேகனும் சிபியிடம்,

 

      "இவ்வளவு நேரம் ஒரே இடத்தில் இருக்கோம்... ஆனா ஒரு வார்த்தை பேசிக்க முடியலயே டா. .. அவளாவது வந்து பேசுறாளா?" என்று மிருத்திகாவைப் பார்த்தபடியே கேட்டான்.

 

      "இவ்வளவு பேர் இருக்கும் போது எப்படி மேகா வந்து பேசுவாங்க?" என்று சிபி கேட்டதும்,

 

      "கதாகாலட்சேபம் நடக்குற போது நானும், அவளும் மட்டுமா இருந்தோம்? ஒவ்வொரு தடவையும் கூட்டத்துக்கு நடூல தான இருந்தோம்?"

 

      "அப்ப அவ சின்ன பொண்ணு... அஞ்..சு வருஷம்... அவளுக்கு என்னவெல்லாம் கத்துக் கொடுத்துச்சோ? தீபி சொன்னத கேட்டேல்ல? சிரிக்கவே மாட்டாங்களாம். இன்னைக்கு மாதிரி அலங்காரம் பண்ணினதே கிடையாதாம்.... ஆண்டு விழா வா இருந்தாலும் கொண்டை போட்டுதான் வருவாங்களாம். ... பூ வச்சதே இல்லையாம்... ஆச்சி சொன்ன மாதிரி என்னெல்லாம் கஷ்டபட்டுச்சோ? ஆனாலும் உனக்காகத் தானே காத்திருந்தாங்க? போ! நீ போயி பேசுடா."

 

  "செண்பகம் கூட இருக்காளே."

 

      "ஐய்ய்ய்யோ! அவள ஒன்னும் பண்ண முடியாது. கண்டுக்காம நீ போயி பேசு!" என்று மேகனிடம் கூறி அனுப்பினான் சிபி.

 

      மேகன், மிருத்திகாவை நோக்கி நடக்க, மிருத்திகாவும் மேகன் வருவதைப் பார்த்து, அவனை நோக்கி இரண்டு எட்டு எடுத்து வைத்திருப்பாள், அதற்குள் வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் சாப்பிட்டுவிட்டு, வீட்டினரிடமும், மேகனிடமும் சொல்லிக் கொண்டு புறப்படுவதற்காக, ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர். மேகனால் ஒன்றும் செய்ய முடியாமல், மிருத்திகாவைப் பார்த்தபடியே அனைவருக்கும் விடை கொடுத்துக் கொண்டிருந்தான்.

 

      "சரி! நாமும் கிளம்புவோம்." என்று செண்பகத்திடம் கூறினாள் மிருத்திகா. ‘கூட்டத்தோடு கிளம்பிடலாம்... இல்லைனா தனக்கும் மேகனுக்கும் திருமணம் நடக்கவில்லை என்று செண்பகத்துக்கு தெரிந்து விடும்’ என்று சங்கடப்பட்டாள். மேலும் இந்த விஷயத்தை தானே செண்பகத்திடம் சொல்வதுதான் நல்லது என்றும், எவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சொல்லிவிட வேண்டும்.' என்று நினைத்தபடி, ஆச்சியிடம் விடைபெறச் சென்றாள்.

 

      "நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் இருங்க ம்மா." என்று கூறி விட்டு ஷோபனாவும்,  ஆச்சியும் மற்றவர்களை வழியனுப்பிக் கொண்டிருந்தனர்.

 

      மிருத்திகாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை... அவள் தவிப்பை தவறாக புரிந்து கொண்டனர் இருவர்,  ஒருவர் மேகன், அடுத்தது செண்பகம்.

 

      செண்பகம் மிருத்திகாவை நெருங்கி, "ஏன் இவ்வளவு கஷ்டபடனும்? போயி பேசு!" என்றாள்.

 

      'நம்மட்ட பேசத்தான் இவ்வளவு தவிக்கிறாளோ?' என்று நினைத்து வேகமாக மிருத்திகாவை நோக்கி வந்த மேகன்,

 

  "ம்ம் சொல்லு!" என்றான்.

 


 

      'செண்பகத்திடம், தனக்கும், ‘மேகனுக்கும் திருமணம் நடக்கவில்லை’ என்று சொல்லி விட வேண்டும்' என்று நினைத்துக் கொண்டிருந்தவள், மிக அருகில் மேகன் குரல் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டவளாக,

 

  "ம்ம்.... கட்டாயம்.... கட்டாயம்  சொல்லிடுவேன். " என்று மிருத்திகா  உளற, 

 

      "எப்ப சொல்லப் போற?" என்று, அவள் எதைச் சொல்கிறாள் அறியாமல்  கேட்டான் மேகன்.

 

      "சந்தர்ப்பம் கிடைக்கும்போது" என்றாள், அவன் புரிந்து கொண்ட விதம் தெரியாத மிருத்திகா.

 

      "அப்படி என்ன சொல்லிடப் போற? அத இப்பவே சொல்லிடேன்." என்றான் காதலுடன்.

 

      அவன் பார்வை வேறு ஏதோ சொல்வதைப் பார்த்த மிருத்திகா, 'செண்பகத்திடம் நான் உண்மைய சொல்றதுல   இவனுக்கு என்ன இவ்வளவு ஆர்வம்?' என்று நினைத்த வளாக,

 

  "இங்க எப்படி சொல்றது?" என்று கேட்டாள்.

 

      "ஏன் இங்க சொல்றதுக்கென்ன? பக்கத்துல உன் ஃபிரண்ட் தானே இருக்கா... தப்பா எடுத்துக்க மாட்டா... இல்லைனா, இங்கிதம் கருதி தள்ளி நின்னுக்குவா.. நீ சொல்ல வந்ததை சொல்லு!" என்று மேகன் கூறியதும், சில வினாடிகளில் ‘அவன் என்ன சொல்கிறான்’ என்று புரிந்து கொண்ட மிருத்திகா, ‘இவன கொஞ்சம் கலாய்க்க லாமா?’  என்று நினைத்து,

 

  "எனக்கு உங்க அப்பா, அம்மாவை ரொம்ப பிடிச்சிருக்கு." என்றாள்.

 

"ஹேங்!" என்றவன் கண்களைச் சுருக்கி,

"வேற" என்று கேட்டான்.

 

  "உங்க தாத்தா, ஆச்சியை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு."

 

      "ஏன் எங்க வீட்டுல கடிக்கும் கொசுவைப் பிடிக்கலையா? " என்றான் காண்டாக.

 

      "டேய்! டேய்! வீட்டு ஹால் ல நின்னு இப்படியெல்லாம் அந்த பொண்ண பாக்கக்கூடாதுடா..." என்ற பதறினார், மேகன் ரொமான்ஸ பண்ணுவதாக நினைத்த தாத்தா.

 

      'தாத்தா ஆஆ!    ‘ரொமாண்டிக் லுக்’ குக்கும், மொறைக்கிறதுக்கும் வித்யாசம் தெரியாம..' என்று நினைத்த மேகன் கடுப்பாகி, "இவள பாக்காம! மரகதத்தையா பாக்க சொல்றீங்க?"

 

  "அடப்பாவி! நீ பாப்ப டா! பாப்ப!. .." என்று பதறியவரிடம் வந்த மரகதம்,

 

  "வந்தவங்களை வழியனுப்பி வச்சுட்டு வந்து அரட்டை அடிங்க" என்று கூற,

 

      "அரட்டையா அடிக்கிறேன்? இவன் என்ன சொன்னான் தெரியுமா?" என்று மேகன் கூறியதை, தாத்தா கூற, அங்கே  என்ன நடந்திருக்கும்? என்று அருகில் இருந்த மேகன், மிருத்திகா, செண்பகம் , தாத்தா ஆகியோரின் முகங்களே காட்டிக் கொடுக்க, ஆச்சி சிரிக்க ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து அருகில் இருந்த நால்வரும் சிரிக்கவே... வீட்டில் இருந்த குடும்பத்தினர், விடை பெற்றுக் கொண்டிருந்தவர்கள், அனைவரும் என்னவென்றே தெரியாமல் சிரித்தனர்.... ஒரே ஒருத்தியைத் தவிர,

 



       விருந்தாட வந்ததிலிருந்து மிருத்திகாவையும் மேகனையும் பார்த்துக் கொண்டே இருந்தவள், விடைபெறும் நேரத்தில், சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். அங்கு மிருத்திகாவும் மேகனும் தாத்தா,ஆச்சியுடன் சேர்ந்து சிரித்தது, ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த வயிற்றில் ‘ஆசிட்’ டை ஊற்றியதைப் போல வெந்தது. ... அவள் கண்கள், மிருத்திகாவையும், மேகனையும் எரித்து விடுவதைப் போல பார்த்தது.

 

   யார் அவள்? அவளுக்கு ஏன் மேகனும், மிருத்திகாவும் சேர்ந்து சிரித்ததும் வயிறு எரிகிறது?

 

  அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்! ....

 

❤❤❤❤❤❤

Post a Comment

0 Comments