23
உன்னை
பார்க்க வந்தவள்,
என்னை
உணர்த்த வழ்ழியின்றி
தவிக்கிறேன்...
🌹🌹🌹🌹🌹🌹
ஹோமத்திற்காக வந்த விருந்தினர் அனைவரும் சென்ற பிறகு சிபி யும், சிபியின் அண்ணன் குடும்பமும் அவர்கள் வீட்டிற்கு
கிளம்பியது.
மிருத்திகாவும், செண்பகமும் 'புறப்படலாமா?' என்று ஒருவருக்கு
ஒருவர் கேட்டு கொண்டு. மேகன் குடும்பத்தினரிடம் சொல்லிக் கொள்ள சென்றனர். அதற்குள்
வீட்டில் வேலை செய்யும் பெண். பூசணிக்காயை எடுத்து வந்து ஆச்சியிடம் காட்டிவிட்டு,
"சரி வீட்டில் இருக்குற எல்லோரும் ஒன்னா நில்லுங்க.
திருஷ்டி சுத்திபோட்டுடுறேன்." என்று அழைக்க, அனைவரும் ஒன்றாக நின்றனர்.
மிருத்திகாவும், செண்பகமும் தனியே நின்று கொண்டிருந்ததைப்
பார்த்த ஷோபனா, "வாங்கம்மா! ஏன் அங்க நிக்கிறீங்க?" என்று அழைத்தார்.
இரு
தோழிகளுக்கும் சிலிர்த்து விட்டது... 'அப்படினா? என்னை,
அவங்க குடும்பத்தைச் சேர்ந்தவள்' என்று காட்டுகிறார்களா?' என்று இருவருமே சந்தோஷப்
பட்டனர்.
திருஷ்டி
கழித்ததும். பூஜை அறையிலிருந்து வந்த ஆச்சியும், ஷோபனாவும் ஒரு தாம்பாளத்தில்,
புடவை, பூ, மஞ்சள், குங்குமம் வைத்து தோழிகள் இருவரிடமும் கொடுத்தனர்.
இரு
தோழிகளும் தயங்கி நிற்கவும்,
"மறுக்கக்
கூடாது, வாங்க!" என்று அழைத்தார் ஆச்சி.
"ரெண்டு
பேருமே தம்பதி சமேதராக நில்லுங்க ஆச்சி” என்றாள் செண்பகம்.
அதேபொல் ஆச்சி, தாத்தா, ஷோபனா பிறைசூடன் நால்வரும் ஒன்றாக
நிற்க, இரு தோழிகளும் பெரியவர்கள் பாதங்களில் நமஸ்காரம் செய்து, தாம்பாளத்தை
வாங்கிக் கொண்டனர்.
புறப்படும் பொழுது செண்பகம் மேகன் குடும்பத்தினரிடம், "உங்க
குடும்ப விஷயத்தில் தலையிடுவதாக நினைக்க வேண்டாம். உங்கள் குடும்பத்தில் எல்லோருமே
நல்லவங்களா இருக்கீங்க... மிருத்திகாவை ஏன் தனியா விட்டீங்க? அவ பட்ட கஷ்டம்.
.." என்று சொல்லிக் கொண்டு போன செண்பகத்திடம்,
"வா! ஹாஸ்டலுக்கு லேட்டா போனா திட்டுவாங்க..." என்று
செண்பகத்தின் கையைப்பிடித்து மிருத்திகா இழுத்தாள்.
"அவ
பேசட்டும் ம்மா. .." என்றார் பிறைசூடன்.
செய்வதறியாத மிருத்திகா மேகனை கண்களால் 'வா' என்று சைகை
செய்தாள். அவன் அருகே வரவும்,
"தயவுசெஞ்சு
இவள பேச விடாம தடுங்க..." என்று கிசுகிசுத்தாள்.
"ஏன்?"
"காரணம்
கேட்காமல் உதவுங்களேன்."
"நாளைக்கு
நான் உன்னை பாக்கனும்."
"நான்
என்ன சொல்லிக்கிட்டிருக்கேன்? நீங்க என்ன கேட்கிறீங்க?"
"பதிலுக்கு எதுவும் கிடைக்காமல் நான் யாருக்கும் உதவுவது
கிடையாது மேம்." என்று மேகனை முறைத்தவள். இப்போதைக்கு செண்பகம் வாயைமூடினால்
போதும் என்று நினைத்து,
"சரி!"
என்றாள்.
"என்ன
சரி!"
‘இவன் நம்மை வம்பிழுக்கிறான்’ என்று புரிந்து, நாமே செண்பகத்தை
தடுக்கலாம் என்று நினைத்து திரும்பியவள் திடுக்கிட்டாள். ஏனென்றால் வீட்டினர்
அனைவரும் மேகனையும், மிருத்திகாவையும் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தனர்.
அசடு வழிந்த மிருத்திகா, கண்களை சுருக்கி, நாக்கின் நுனியை
சின்னதாக வெளியே நீட்டி, பற்களால் கடித்தாள்.
"பாவம்! அது என்ன பண்ணுச்சு? கடிக்கிற. . " என்று
மிருத்திகாவுடைய நாக்கின் மேல் பாவம் பார்த்த, மேகனைக் கீழ் பார்வை பார்த்த
மிருத்திகாவின் அருகில் வந்த தாத்தா,
"நல்லா நிமிர்ந்து பாத்தே மொறைச்சுடு ம்மா. உனக்கில்லாத
உரிமையா இந்த வீட்டில்?"
"தாத்தா!"
மேகன்
எல்லோரும்
சிரித்தனர்.
ஆச்சி செண்பகத்திடம். " நல்ல புரிதல் இல்லாததால்...
சொல்லப் போனா புரிந்து கொள்ள சமயம் கிடைக்காமல் நிறைய தப்பு நடந்துடுச்சு... எங்க
வீட்டு மருமக மிருத்திகாதான். அதுல உனக்கு பயம் வேண்டாம் .. எங்களுக்குள்ள என்ன
நடந்துச்சுன்னு, உன்னிடம் எங்க மருமகப் பொண்ணு சொன்னா தான் சரியாக இருக்கும்...
அவட்ட பேசிட்டு வா... என்ன செய்யலாம்னு பேசுவோம். சரியா?" என்றார்
"கார்ல போயி பிள்ளைகளை அவரவர் இடத்தில் விட்டுட்டு
வாய்யா!" என்று மேகனிடம் கூறினார் தாத்தா.
மூவரும்
காரில் அமைதியாக செல்ல, மேகனுக்கு ஃபோன் வந்தது. டிஸ்பிளேயில் தாத்தா நம்பர் வர, ஃபோனை
காதுக்குக் கொடுத்த மேகன்,
"என்ன
தாத்தா?" என்று கேட்க,
"இப்படி அமைதியா போறது க்கா உன்னை கூட்டிட்டுப் போகச்
சொன்னோம்?" என்று தாத்தா கூறியதும்,
"தாத்தா!!!
எப்படி?"
"முதல்ல
ஃபோனை ஸ்பீக்கர் மோடுக்கு மாத்து."
மேகன்
ஸ்பீக்கர் பட்டனை அழுத்தவும்,
"ரொம்ப நாளுக்கப்புறம் சந்திக்கிறதால, வருத்தம்,
கோபமெல்லாம் உங்க ரெண்டு பேர் மனசிலுமே இருக்கலாம்...
வார்த்தைகளில் கவனம் இருக்காது. அதனால மூணு பேரும் நேரா கடற்கரைக்கு போங்க! மனசு
கொஞ்சம் லேசானதும், அப்புறம் ஹாஸ்டலுக்கு போகலாம்... கடைசியில் செண்பகத்தை அவ
வீட்டில இறக்கி விடு. .. புரியுதா?" என்று மூவரிடமும் பொதுவாக பேசினார்.
மூவரும்
கோரஸாக, " சரி தாத்தா!" என்றனர்.
கடற்கரையில் ஆளுக்கொரு காரபொரி
வாங்கிக் கொண்டு அமர்ந்தனர். அவர்கள் பின்னாலிருந்து,
"எனக்கு யாரடா வாங்கித் தருவா?" என்று கேட்டபடி மேகன்
அருகில் வந்து அமர்ந்தான் சிபி.
"எப்படி டா வந்த?" என்று மேகன் ஆச்சரியமாக கேட்கும்
போதே ‘இதுவும் தாத்தா வேலை!’ என்று புரிந்து சிரித்தான்.
'எவ்வளவு நல்ல குடும்பம்? இவ்வளவு தூரம் யோசித்து செய்கின்றனரே?
பிறகு எப்படி இவர்கள் இருவரும் பிரிந்தனர்?' என்று யோசித்தாள் செண்பகம்.
'இதல
வேற ஏதாவது சிக்கல் இருக்கோ?' என்று செண்பகம் யோசித்துக்
கொண்டிருக்கும் போதே, செண்பகத்தின் மொபைல் ஃபோன், "வர்லாம் வர்லாம் வா!
பைரவா!" என்று அழைத்தது.. (கேட்டா 'எனக்கு பைரவர்
சாமியை பிடிக்கும்னு சொல்வா)
"ஹலோ!" என்றாள் புது நம்பரைப்
பார்த்துவிட்டு.
"நான்
மிருத்திகாவோட அம்மா பேசுறேன்... மிருத்திகா வுக்கு ஃபோன் பண்ணினா கால் போக
மாட்டேங்குது... முக்கியமான விஷயம் பேசனும்... நீங்க ரெண்டு பேரும் இப்ப எங்க
இருக்கீங்க?" என்று மிருத்திகாவின் அம்மா கேட்டார்.
மிருத்திகாவின்
அம்மா என்றதுமே ஃபோனை ஸ்பீக்கர் மோடுக்கு மாற்றிய செண்பகம், மிருத்திகாவைப்
பார்க்க, அவள் ஆச்சர்யபட்டு தன் ஃபோனை எடுத்து பார்த்தாள்... மிஸ்டு கால் எதுவும்
வரவில்லை.
"என்னம்மா ஒன்னும் சொல்லாம இருக்க?" என்று மிருத்திகாவின்
அம்மா கேட்டதும்,
"நா வெளியே வந்திருக்கேன் மா..
நீங்க பேசுறது சரியா கேக்கல.." என்றாள் செண்பகம்.
"மிருத்திகா எங்கே இருக்கா?"
"என் பக்கத்தில்தான் இருக்கா..
இருங்க குடுக்கிறேன்."
"வேணாம்
வேணாம்" என்று அவசரமாக கூறியவர் ஃபோனை கட் செய்து விட்டார்.
"ஏன்
கட் பண்ணிட்டாங்க?" என்று செண்பகம் மிருத்திகாவிடம் கேட்க,
அவள் மேகனையும் சிபியையும் சங்கட பார்வை பார்த்துவிட்டு,
"நான்
இவங்க வீட்டு விஷேசத்துக்கு வந்தது அம்மாவுக்குத் தெரிஞ்சுடுச்சு." என்றாள்.
"அதெப்படி?
நாமலே இன்னும் வீடு போயி சேரலையே? என்று செண்பகம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே,
மிருத்திகாவிற்கு ஃபோன் வந்தது. டிஸ்பிளேயில் பெரிய அண்ணன் நம்பர் தெரிய,
"அண்ணா! எப்படி இருக்கீங்க?"
என்று கேட்டாள்.
"நீ எங்கம்மா இருக்க?"
"நான் செண்பகத்தோட கடற்கரைக்கு
வந்திருக்கேன்."
"பாத்தீங்களாம்மா? யாரோ உங்ககிட்ட
பொய் சொல்லியிருக்காங்க." என்றதும் தான் தெரிந்தது, அண்ணன் கான்ஃபரன்ஸ் கால்
பண்ணியிருக்கான் என்று.
"நல்லா
தெரிஞ்சவங்க சொன்னாங்க டா. .. அவங்க பொய் சொல்ல மாட்டாங்க." என்றாள்
மிருத்திகாவின் அம்மா.
"அப்போ!
இவ சொல்றத நம்பமாட்ட? யாரோ ரோட்டுல போறவங்க சொல்றத நம்புவ... ஏம்மா இப்படி இருக்க?
இவ்வளவு பெரிய குடும்பம் இருந்தும் அவ தனியா போயுமா! நீ இப்படி இருப்ப? உன்
இஷ்டத்துக்கு, அவள கல்யாணம் பண்ண சொல்லி, அவள பாடா படுத்தி தனியா அனுப்பிட்டேல? அவ
எங்க போனா உனக்கு என்ன?"
"நம்ம குடும்ப மானம்லடா
போகுது?"
"அவ இத்தனை வருஷம் தனியா
இருக்குறதுக்கு மானம் போகலையா?"
"ஏன்
தனியா இருக்கனும்? நான் காட்டுன பையனை கட்டிக்கிட்டு சந்தோஷமாக இருக்க
வேண்டியதுதானே?"
"அவளுக்கு
பிடிக்கலையேம்மா... அப்படியே இருந்தாலும் ஊருக்கே தெரிந்து போச்சே அவ மனசுல வேற
யாரோ இருக்காங்கன்னு... பிறகு எப்படி இன்னொருத்தனுக்கு கட்டிக் கொடுக்க
முடியும்?"
"இவ
ஓடிப்போனது தெரிஞ்சும் மாப்பிள்ளை வீட்டார் கல்யாணத்துக்கு
ஒத்துக்கிட்டாங்கல்ல?"
"அங்கதான்
எனக்கு சந்தேகம் வருது. நம்ம தங்கச்சிய கூட்டிட்டு போயி
கஷ்டபடுத்துனா என்ன பண்ண முடியும்?"
"இவ
நம்ம பேச்ச கேக்குறாளா? அவங்க வீட்டுல போயி மிதி வாங்கட்டும். அப்பதான் அவ திமிரு
அடங்கும்..." என்று இன்னும் திட்டிக் கொண்டிருக்கும் போதே அண்ணன் ஃபோனை கட்
செய்துவிட்டு, மீண்டும் மிருத்திகாவிற்கு ஃபோன் செய்து,
"எங்கிட்ட
சொல்லுடா... நீ இன்னைக்கு அந்த கோயில் நிர்வாகி வீட்டுக்கு போனியா?"
"ஆமாம்
ண்ணா" என்று மிருத்திகா தயங்கி கூறிக்கொண்டிருக்கும் போதே, அவளிடமிருந்து
ஃபோனை வாங்கிய மேகன்,
"நாங்க
தான் எங்க வீட்டு விஷேசத்துக்கு இவள வரச்சொல்லி அழைச்சோம்." என்றான்
அமைதியாக.
பயந்து
போன மிருத்திகா, "அண்ணா என் மேல இருக்கும் பாசத்துலதான் கேக்குறாங்க....
" என்றாள் அவசரமாக.
"சரி நான் பாத்துக்கிறேன்."
என்பது போல சைகை செய்தான் மேகன்.
"நீங்க எப்படி?" என்று அண்ணன்
கேட்டதும்.
"மிருத்திகாவையும்,
செண்பகத்தையும் வீட்டில் விட்டுவிட்டு போக நானும் என் ஃபிரண்ட் -ம் வந்தோம்"
என்றான் மேகன்.
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... என் தம்பிய கான்ஃபரன்ஸ் ல
கூப்பிட்டுக்கிறேன்” என்று கூறியவர், மிருத்திகாவின் சின்ன அண்ணன் லைனுக்கு
வந்ததும்,
"கதிர்வேலா!
அம்மா ஃபோன் பேசுனத சொன்னேன் ல. .. மீரா
(மிருத்திகா) அந்த கோயில் நிர்வாகி வீட்டு ஃபங்ஷனுக்கு கூப்பிட்டதால, அவ ஃபிரண்ட்
செண்பா வோட போயிருக்கா... இப்ப என்கூட மேகன் பேசிக்கிட்டிருக்கார்." என்று
சுருக்கமாக தன் தம்பி கதிர்ரிடம் பெரிய அண்ணன் விக்னேஷ் என்ற விக்னேஷ்வரன்
கூறினார்.
"மேகனா?
அவரு எப்படி?" என்று கேட்டான் கதிர் (மிருத்திகாவின் இளைய அண்ணன்.)
'ரெண்டு பேருமே ஒரே மாதிரி கேக்குறாங்க
டா' என்று நினைத்த மேகன்,
"உங்க ரெண்டு பேரையும் நான்
சந்திக்க முடியுமா?" என்று கேட்டான்.
சட்டென்று
"ம்ம் பாக்கலாமே? எங்க? எப்ப? னு
சொல்லுங்க." என்றான் கதிர்.
"எங்க
வீடு அல்லது கோயில்.. இல்லைனா கடற்கரை?" என்று மேகன் கேட்டதும்,
விக்னேஷும், கதிரும் சேர்ந்து, "கோயில்." என்றனர் ஒரே நேரத்தில்.
‘மறுபடியும் ஒரே மாதிரியான பதில்!’
என்று ஆச்சர்யப்பட்டவன்,
"எப்ப பாக்கலாம்னு நீங்களே
சொல்லுங்க... " என்று கேட்டதும்,
"இப்ப.. சாயந்திரம் 5
மணிக்கு?" என்றனர் மீண்டும் ஒரே நேரத்தில்!!!"
'இவனுங்க
ரெட்டை பிறவியோ? ஒரே மாதிரி நினைத்து, ஒரே மாதிரி பேசுறாங்க?!!' என்று நினைத்த
மேகன்,
"சரி
நாங்க நாலுபேரும் கோயிலுக்கு புறப்படுறோம்." என்று அண்ணங்களிடம் கூறிவிட்டு,
ஃபோனை கட் செய்து மிருத்திகாவிடம் கொடுத்தான்.
"வாங்க நம்ம கோயிலுக்கு போகலாம்." என்று கூறியபடி
நடந்த மேகன், மிருத்திகாவிடம்,
"உன்னை
உங்க வீட்ல மீரா ன்னா கூப்பிடுவாங்க?" என்று கேட்டான்.
"ஆமா!...
மிருத்திகா, மிரு வாகி, மிரா வாகி, மீரா வாயிடுச்சு..." என்றாள் மிருத்திகா.
'அடுத்தடுத்து
கேள்வி கேட்க விடாம, எல்லா பதிலயும், ஒரே கேள்விக்கு சொல்லிடுறா.' என்று நினைத்த
மேகன்,
"உங்க அண்ணன்கள் இரட்டை
பிறவிகளா?" என்று கேட்டான்.
"இல்ல...
அவங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி பேசுற தால கேட்கிறீங்களா? அவனுங்க அப்படிதான்... எங்களுக்கே புரியாத புதிர் இது."
என்று செண்பகத்தை பார்த்தவாறு மிருத்திகா கூறினாள்.
"என்ன
செண்பா? நானும், உங்கள அப்படியே கூப்பிடவா ? இல்ல..." என்று இழுத்தவன், சிபியை பார்த்தவாறு, "சிபி செல்லமாக கூப்பிடுற மாதிரி
கூப்பிடவா?" என்று மேகன் கேட்டதும்,
"செல்லமா வா? என்னா...து
அது?" என்று நக்கலாக கேட்டாள் செண்பகம்.
அதுவரை
ஏதோ ஒரு யோசனையில் இருந்த சிபி, செண்பகத்தின் நக்கலான பேச்சில் அதிர்ந்து,
மேகனிடம்,
"டேய்!
நீயெல்லாம் ஒரு ஃபிரண்ட் டா டா? ரௌடி பேபி என்னை தொலைச்சுட்டு தான் மறுவேலை
பார்ப்பா." என்று தன்னையறியாமலே செண்பகத்தின் செல்ல பெயரை உளறி விட்டான்.
"என்னது பேபி யா?"
"அதுவும் ரௌடி பேபி!" என்று
எடுத்துக் கொடுத்தான் மேகன்.
"அடேய்
உனக்கேன்டா? மறுபடியும் ரௌடி பேபி ட்ட கோர்த்து விடுற?" என்று பதறினான் சிபி.
"நீ தான்டா ரௌடி லூசு! ரௌடி பக்கி! ரௌடி பண்டாரம்.... என்
புருஷன் கூட அப்படி கூப்பிட மாட்டாரு... " என்று செண்பகம், சிபியைத் திட்டி
முடிக்குமுன்,
"அவரயும்
மிரட்டி வச்சுருக்கியா? ஐயோ பா..வம்!" என்று சிபி, 'செண்பகத்திடம் பேசுகிறான்’
என்பதை மறந்து கலாய்க்க...
"இரு டா உன்ன".... என்று கூறி,
சிபியின் தலையில், செண்பா ஓங்கி கொட்டி விட்டாள். ..
"போதும்!
போதும் செண்பா! பாவம் சின்ன பையன் விட்டுடுங்க..." என்று தடுப்பது போல மேகன்
வர,
"ஏன்டா
இவ்வளவு சீக்கிரமா வந்துட்ட... ஆற அமர மெல்ல வரவேண்டியது தானே?... பாவம் டா ரௌடி
பேபி புருஷனும், ஸ்கூல் பிள்ளைகளும். தலை ரெண்டா உடையல?" என்றான் தலையைத்
தடவியபடி சிபி.
"இப்படி
விளையாடத்தான் வந்தோமா? எங்கம்மாவுக்கு விஷயம் போயிருக்கேன்னு நான் பயந்துகிட்டு
இருக்கேன்..." என்றாள் மிருத்திகா கவலையோடு.
"யாருங்க
இவ்வளவு சீக்கிரம் செய்தி வாசித்தது.?" என்று கொட்டு பட்ட தலையை தடவியபடியே
கேட்டான் சிபி.
"தெரியலை.
நாங்க யார்கிட்டயும் சொல்லிட்டும் வரல." என்றாள் செண்பகம்.
"அப்போ
வேற யாருக்குத் தெரியும்? ஒருவேளை, நம்ம வீட்டுக்கு விருந்தாட வந்தவங்கதான் சொல்லி
யிருப்பாங்களோ?" என்று மேகன் கேட்டான்.
"அடப்பாவி
நீங்க ஏன்டா வில்லங்கத்துக்கு அழைப்பு வச்சீங்க?" என்றான் சிபி.
"வந்தவங்க
யாருமே மிருத்திகாவை தெரிஞ்சதா காட்டிக்கலையே?" என்று யோசித்த மேகன்,
மிருத்திகாவிடம்,
"உனக்குத்
தெரிஞ்சவங்க யாராவது நம்ம வீட்டுக்கு வந்தாங்களா?" என்று கேட்டான்.
"இல்லை!
எனக்கு தெரிஞ்சவங்க யாரும் வரல." என்று
செண்பகத்திடம் கூறினாள் மிருத்திகா.
"செண்பா! உன் தோழிக்கு
எப்பயிருந்து மாறுகண்?" என்று மேகன் கேட்டதும்,
"புரியல."
"நான் கேட்கும் போதெல்லாம் அவ
உன்னிடம் பதில் சொல்வானேன்?"
‘மேகன்
என்ன சொல்கிறான்’ என்று புரிந்ததும், "ஏன்டி" என்று ரகசியமாக மிருத்திகாவிடம்
கேட்டாள் செண்பகம்.
மிருத்திகா
ஒன்றும் கூறாமல் மேகனைப் பார்த்தாள். பிறகு செண்பகத்தைப் பார்த்து, சிரித்தாள்.
"இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்? செண்பா?" என்று
மேகன், மிருத்திகாவைப் பார்த்தபடி கேட்க,
"உன்ன விட ரௌடிபேபியை தான் புடிச்சிருக்காம்" என்றான் சிபி.
"மறுபடியும்
ரௌடி பேபி யா? இருடா உன்னை...” என்று சிபியை நோக்கி செண்பகம் நடக்க,
"கடவுளே காப்பாத்து!” என்றபடி ஓடினான் சிபி. செண்பகம்
அவனைத் துரத்திக் கொண்டு ஓட, அவர்களைப் பார்த்து சிரித்தனர் மேகனும்,
மிருத்திகாவும்.
அவர்களைப்
பார்த்து முறைத்தபடி, மொபைல் ஃபோனில் ஃபோட்டோ எடுத்தாள் அவள்.
யார்
அவள்? அவளுக்கு இவர்கள் இருவர் மேல் என்ன கோபம்?
அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம். ...
❤❤❤❤❤❤
0 Comments