17
உன்னை நேசிக்க
பலர்
இருக்கலாம்…
உன்னால் சுவாசிப்பவள்
நான் மட்டுமே
🌹🌹🌹🌹🌹🌹
மேகனும், சிபியும்
மிருத்திகாவை பார்க்காமல் பள்ளியை விட்டு வெளியே வந்தனர். இருவருக்குமே ‘மிருத்திகாவிற்கு திருமணம் முடிந்துவிட்டது’ என்ற அதிர்ச்சியை தாங்க முடியவில்லை.
மீண்டும்
மேகனுக்கு ஒரு நப்பாசை! 'ஒருவேளை அந்த செண்பகம், மிருத்திகாவை பற்றி பொய்
சொல்லியிருந்தால்?' என்று நினைத்தவன் சிபியிடம்,
"சிபி
எனக்கு ஏனோ உறுத்தலா இருக்கு... அந்த செண்பகம் ஏதோ
ஒரு காரணத்துக்காக பொய் சொல்லியிருந்தால்? எதுக்கும் பள்ளி ரிசப்ஷனில்
விசாரிப்போமா?" என்று கேட்க,
'இவன்
வாழ்க்கையில எதுவும் நடக்கும்... இறந்தவளே வந்துட்டா... ' என்று நினைத்தபடி சிபி,
"சரி! வா! அதையும்
பார்த்துடலாம்."
இருவரும் மீண்டும் ரிசப்ஷனுக்கு
சென்று,
"எக்ஸ்க்யூஸ்
மி, எங்களுக்கு ஒரு முக்கியமான விபரம் வேண்டும் சொல்லமுடியுமா?" என்று மேகன்
கேட்டான்.
"ம்ம் சொல்லுங்க..."
"பத்தாம் வகுப்பு டீச்சர்
மிருத்திகா மிஸ் ஆ, மிஸஸ் ஆ?"
"அவங்க மிஸ் தான். "
"அப்பாடி!" என்று மேகன்
மூச்சு விடுவதற்குள்,
"ஸாரி என்ன கேட்டீங்க?"
என்று மீண்டும் ரிசப்ஷனில் இருந்த பெண் கேட்க,
'எங்க புத்திய வச்சுக்கிட்டு இருக்கோ?'
என்று நினைத்தவாறு சிபி,
"அது...
உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ன்னு கேட்போம்? " என்று கிண்டலடிக்க,
"என்ன?!!
யார் நீங்க? கொஞ்சம் கூட மரியாதை தெரியாதா உங்களுக்கு?" என்று அவள் எகிற,
"ம்ம்ம்
இப்ப இந்த லோகத்திலதான் இருக்காங்க... மிருத்திகா மேம்க்கு கல்யாணம்
ஆயிடுச்சா? ன்னு கேட்டான்."
சிபியின் வார்த்தைகளால் எரிச்சலடைந்த
ரிசப்ஷனிஸ்ட்,
"அது
உங்களுக்கு எதுக்கு? ஓ! நீங்க புரோக்கரா? ஸாரி! கல்யாண புரோக்கரான்னு கேட்டேன்
சார் "
"இவ்வளவு
பெரிய பள்ளிக்கு வரவேற்பாளர் மாதிரியா இருக்கு உங்க பேச்சு? இந்த ஸ்கூல் லயா என்
அண்ணன் பெண் படிக்கிறா?" என்று சிபி சீரியஸாக பேசியதும், அதுவரை அமைதியாக
இருந்த மற்றொரு ரிசப்ஷனிஸ்ட், அடடா! 'இவன் இந்த ஸ்கூல் ஸ்டூடண்ட் டோட ஃபேமிலி யா?’
என்று நினைத்து ,
"ஸாரி
சார்! இங்க வேலை பார்க்குறவங்களோட அந்தரங்க விஷயங்களை நாங்கள் சொல்லவதில்லை.
.." என்று சாந்தமாக கூற,
"மேம் எங்க
ரெண்டு பேரையும் பார்த்தா எப்படி தெரியுது? வம்பிழுக்க வந்த மாதிரியா?" என்று
சிபி மிதமான கோபத்தில் கேட்க,
'ம்ஹும்!... இவன் இன்னைக்கு
சரியில்ல..' என்று நினைத்த மேகன்,
"மேம்
நாங்க மிருத்திகா என்ற பெண்ணை தேடி வந்துருக்கோம். .. எங்களுக்குத் தெரிந்த
பெண்ணுக்கு கல்யாணம் ஆகல... தப்பா, வேற யாரையும் தொந்தரவு பண்ண வேண்டாம்னு தான்
கேக்கிறோம்.. "
"அப்படியா? இந்த ஸ்கூல் ல ஒரு மிருத்திகாதான் இருக்காங்க. அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. இதோ இவங்க தான்.. என்று கம்ப்யூட்டரில் மிருத்திகாவின் படத்தைக் காட்ட,
மேகனுக்கு
உயிரே போய் விட்டது. ஏனென்றால் அந்தப் படத்தில் இருந்தவள் இவனுடைய நிறைமதியே தான்.
"ஸாரி மேம்
நாங்க தேடிவந்தது இவங்கள இல்ல. சிரமத்துக்கு மனிச்சுடுங்க வர்றோம்" என்று
பொய் கூறிவிட்டு வேகமாக வெளியேறினான் மேகன். அவன் பின்னாலேயே ஓடி வந்த சிபி
சந்தோஷமாக,
"இவங்க
இல்லையாடா? நல்லவேளை மறுபடியும் வந்து..." என்று சிபி முடிக்கும் முன்,
"இவதான்"
என்று வண்டியை நோக்கி நடந்துகொண்டே கூறினான் மேகன்.
"டேய்!
நில்றா! இவங்க இல்லை னு அங்கே சொன்ன?"
"வேற என்ன
சொல்லச் சொல்ற?"
பேய்
துரத்துவதைப் போல ஓடிக்கொண்டிருந்தத மேகனை கையைப்பிடித்து நிறுத்தினான் சிபி.
"இவங்க தான் உன்
நிறைமதியாடா?"
"என்
நிறைமதின்னு எப்படி டா சொல்வேன்? அவதான் வேற யாரையோ கட்டிக்கிட்டு. .. "
என்று என் நிறைமதியை அழுத்தமாககூறி மேலும் பேசி முடிக்க முடியாமல் தொண்டை வரை
வந்து துக்கம் அடைக்க, வேறுபுறம் திரும்பிக் கொண்டான்.
"இந்தக்
கொடுமைக்கு அவ இறந்தவளாவே இருந்திருக்கலாமே.... இவன் எப்படி தாங்கப் போகிறான்..'
என்று நினைத்த சிபி.
வண்டியை நோக்கி
மேகன் நடந்ததும், எதுவும் பேசாமல் கூடவே வந்தான் சிபி.
சட்டென்று பள்ளிக் கட்டிடத்தை
திரும்பிப் பார்த்தான் மேகன்.
"என்ன்னடா? " என்று கேட்டான்
சிபி வெறுத்த குரலில்.
"அவ என்னைப் பாக்குறா டா. ."
சிபியும்
பார்த்து விட்டு, "வாடா இங்கிருந்து போயிடுவோம்." என்று பயந்த குரலில்
கூற, சிபியின் வார்த்தைகளில் தெரிந்த மாற்றத்தை உணர்ந்த மேகன்,
"என்னடா
முத்திடுச்சு னு பயந்துட்டியா? அந்த அளவு மோசமாகல. ... ஆனா அவ பாக்குறா... கொஞ்சம்
நிப்போம்டா... " என்றான்.
"வாடா.." என்று
இழுத்துக்கொண்டு போனான்.
வீட்டிற்கு
வந்து, மேகன் குடும்பத்தினரிடம், மேகனும், சிபியும் எல்லா விஷயங்களையும் கூறினர்.
வீட்டில் உள்ள
அனைவருமே ஒன்றும் பேச முடியாமல் இருக்க, பிறைசூடன், மேகன் அருகில் வந்து
அமர்ந்தார்.
"இல்லாமலே
போச்சு ன்னு நினைச்சோம்... எங்கேயோ உயிரோட இருக்கே னு நினைச்சுக்குவோம். இனியாவது உன்னால
காப்பாத்த முடியாம போச்சுங்கற குற்ற உணர்வு இல்லாம இருப்ப... " என்றார்.
"எங்கேயோ
அவ நல்லாதானே இருக்கா.." என்று ஷோபனா சொல்லும் போது, ' எங்க மேம் யாரிடமும்
சீக்கிரம் பேச மாட்டாங்க.' ன்னு சொன்னது மேகனுக்கு ஞாபகம் வர, "அவ சந்தோஷமா
இல்லையோ?' என்று நினைத்தவன், தன் தாயிடம், தீபிகா சொன்னதை ச் சொல்லி,
"அவ நல்ல சிரித்த முகம்மா... . இப்ப
சந்தோஷமாக இல்லையோ?" என்றதும்,
ஷோபனா,
"அடுத்தவனுக்கு சொந்தமாயிட்டா... இனி அந்தப் பொண்ண பத்தி நீ நினைக்கிறதே
தப்பு டா..." என்றார் கவலையாக. இந்த வார்த்தை அவனுக்கு எவ்வளவு வலியைத்தரும்
என்று அறியாமல்.
சூழ்நிலையை மாற்ற எண்ணிய தாத்தா,
"விடு ய்யா உன்னைக் கட்டிக்க,
குடுத்து வைக்கல அந்தப் பொண்ணுக்கு.. "
இதுவரை எதுவும்
பேசாமல் இருந்த மரகதத்தை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.
"என்னம்மா!
ஒன்னும் சொல்லாம இருக்க? எந்த ஒரு பிரச்சனைனாலும் நீ தானே நல்ல தீர்வா சொல்வ...
இவ்வளவு பெரிய பிரச்சினை போயிட்டிருக்கு, அமைதியா இருக்கியே?" என்று தாத்தா
மரகதத்திடம் கேட்டார்.
"நான்
அந்தப் பெண்ணைப் பாக்கனும்." என்று மரகதம் கூறவும், சிபி உட்பட அனைவரும்
அதிர்ந்தனர்.
‘இனிமேலாவது
மகனின் மனதை மாற்றி, அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து விடலாம்னு
நம்பி இருக்கும் போது, இந்த மனுஷி ஏன் இப்படி பண்றாங்க...:’ என்று கவலையுடன்
பார்த்தார் பிறைசூடன்.
"இதுக்கு
மேல நம்ம அந்தப் பொண்ண பாக்குறது நல்லதில்லை மரகதம். உனக்கு நான் சொல்ல
வேண்டியதில்லை...இப்ப நாம போய் பார்த்தா, அந்தப் பொண்ணோட வாழ்க்கையில் வீணான
குழப்பம்தான் வரும். நம்ம வீட்டுக்கு வந்திருக்க வேண்டியவ, போன இடத்திலாவது நல்லா
இருக்கட்டும். என்ன நான் சொல்றது." என்று தாத்தா கேட்டார்.
"அதேமாதிரி
நான் தேவையில்லாத விஷயத்துக்கு அடம்பிடிக்கிறவ கிடையாதுங்கறது உங்களுக்கு நல்லாவே
தெரியும். நீங்க எல்லாரும் மேகன் கஷ்டப்படுறத மட்டும் பாக்குறீங்க. .. ஒரு பொண்ணா,
இன்னொரு பொண்ணோட கஷ்டத்தையும் பாக்குறேன். அவ இல்லை ன்னது கூட எனக்குப் பெரிய
வலியா தெரியல. ஆனா அஞ்சு வருஷம்! காதலித்தவனுடன் சேராமல், இல்ல,... சேர விடாமல்
ஒரு பொண்ணு என்ன பாடுபட்டாளோன்னு கவலைப்படுறேன். அவ சந்தோஷமா இருக்காளான்னு
எனக்குத் தெரியனும்." என்று மரகதம் பேசிக்கொண்டிருக்கும் போதே,
"அத
தெரிஞ்சுக்கிட்டு நாம என்னம்மா பண்ண முடியும்?" என்று ஷோபனா கேட்டார்.
"ஏதோ ஒரு
சக்தி! அஞ்சு வருஷம் கழிச்சு மேகனை இங்க வரவச்சு, அந்தப் பெண்ணு உயிரோட இருக்குறத
காட்டியிருக்கு ன்னா? அதுக்கு ஒரு வலுவான காரணம் இருக்கும்... அது என்னன்னு அந்தப்
பொண்ண பார்த்தா தான் தெரியும்." என்று மரகதம் கூறினார்.
"எனக்கும்
இது சரிப்படாதுன்னு தோணுது ஆச்சி. அந்தப் பொண்ணு, அவ மனச மாத்திக்கிட்டு வாழ
பழகிட்டாங்க, அவங்கள அப்படியே விட்டுறதுதான நல்லது? " என்றான் சிபி.
"நம்மலா
ஏதாவது கற்பனை பண்ணாம, என்னதான் இருக்குன்னு பாத்துடலாமே?" என்றார் மரகதம்.
"இல்ல
ஆச்சி இது என்னோட கற்பனை இல்ல...இந்த விஷயத்த மேகன் கிட்ட கூட சொல்லல. நான்
மிருத்திகாவை நேர்ல போயி பாத்தேன். " என்று விளையாட்டு போட்டி நடந்த அன்று
மிருத்திகா வை சிபி சந்தித்த விபரங்களைக் கூறினான். (அத்யாயம் 15.ல்)
"ஏன்டா எங்கிட்ட சொல்லல?"
என்று மேகன் பதறினான்.
"இதோ நீ
இப்படி பிகேவ் பண்ணிருவே ன்னுதான்... அவதான் நிறைமதியா இருந்தா உங்கிட்ட சொல்லலாம்.
இல்லைனா விட்டுடலாம்னு நினைச்சேன்." என்றான் சிபி.
'ச்சே! இவன்
நமக்காக தேடியிருக்கான்.. நாம தப்பா புரிஞ்சுக்கிட்டு கிண்டல் பண்ணிட்டேனே.' என்று
நினைத்த மேகன்,
"ஸாரி டா!" என்று... அன்று,
தான் நினைத்ததை சொல்லி மன்னிப்பு கேட்டான்.
"அத
விடு!" என்று மேகனிடம் கூறிவிட்டு, மற்றவர்களைப் பார்த்து, "அந்தப்
பொண்ணுக்கு மேகன தெரியாம இருக்காது... பிறகு ஏன் தெரியாதது போல நடநுதுக்கனும்?
இப்ப இருக்குற வாழ்க்கைக்கு பிரச்சனை வந்துடுமோன்னு தானே?" என்று மரகதத்திடம்
கேட்டான் சிபி. இதைக் கேட்ட ஷோபனா,
"ஒருவேளை இப்படி
இருந்திருந்தா?" என்றார்.
"எப்படி?" என்று கேட்டார்
பிறைசூடன்.
தயக்கமாக
சிபியைப் பார்த்த ஷோபனா, "தப்பா எடுத்துக்காதப்பா. .. மிருத்திகா, இப்படி
நடந்துக்கிட்டதுக்கு தீபிகா காரணமா இருப்பாளோ?"
"எங்க
அண்ணன் பொண்ணுங்கறது க்காக சொல்லல ம்மா... அவ சின்னப் பொண்ணு, அவ என்ன
செஞ்சிருக்கப் போறா?" என்று கேட்டான் சிபி
ஏதோ சொல்ல
வாயெடுத்தவர், "அத மிருத்திகாவோ, தீபியோ தான் சொல்ல முடியும்." என்றார்.
"நீங்க ஏதோ
சொல்ல தயங்குறீங்கன்னு நினைக்கிறேன். நான் தீபி க்கு ஃபோன் பண்ணி தர்றேன்
பேசுறிங்களாம்மா?"
"இல்லப்பா வேண்டாம்."
"அம்ம்மா!
" என்று கூறி சிரித்துக் கொண்டே ஃபோன் செய்து தீபிகிட்ட அண்ணி கொடுத்ததும்,
"தீபி!
ஷோபனாம்மா உங்கிட்ட ஏதோ கேக்கனுமாம். எதுவா இருந்தாலும் பயப்படாம சொல்லுடா. மேகன்
நல்லா இருக்கனும் இல்லையா? சொல்லு." என்று கூறி சிபி ரிசீவரை ஷோபனா விடம்
கொடுக்க,
"இல்ல! அவ குழந்தை... எனக்கு
பதட்டத்தில சரியா பேசக்கூட வராது." என்றார் ஷோபனா.
சிபியிடமிருந்து ரிசீவரை வாங்கிய
மரகதம்,
"தீபி கண்ணா ஆச்சிக்கிட்ட
பேசுறீங்க ளா? "
"ம்ம்ம் பேசுறேன் ஆச்சி!"
"விளையாட்டு
போட்டிக்கு மேகன் உங்க ஸ்கூலுக்கு வருவான்னு யார் யார்ட்ட சொன்னீங்க?"
"என் கிளாஸ் ல எல்லார்ட்டயுமே
சொன்னேன்."
"வெரிகுட்!
செல்லக்குட்டி எப்பவுமே புத்திசாலிதான்.... ஆமா? என்னன்னு டா தங்கம்
சொன்னீங்க?"
"சித்தப்பா பக்கத்துல இருக்காரா
ஆச்சி? "
"இல்லடா! நான் மட்டும் தான்
இருக்கேன்."
"யாரு கிட்டயும் சொல்ல
மாட்டீங்களே?"
"நீ எங்க வீட்டு குழந்தை டா...
சரி! சொல்லுங்க, என்ன சொன்னீங்க?"
"நான் கல்யாணம் பண்ணிக்கப் போற மாமா
வருவாங்கன்னு சொன்னேன்."
"குட்டிப் பொண்ணு அப்படியா சொல்லு
ச்சு?
"ஆமா."
"சரி ஃபோனை
வச்சிடுங்க. .. ஆச்சி உங்களுக்கு தங்கத்துல நெக்லஸ் வாங்கித் தர்றேன்."
"ஏன்?"
‘மேகனுக்கும்
மிருத்திகாவிற்கும் இடையே விழுந்துள்ள முடிச்சுகளில், ஒரு முடிச்சை அவிழ்த்ததற்காக’
என்று சொல்லாமல்,
"பத்தாம் வகுப்புல நல்ல மார்க்
எடுப்பீங்கல்ல அதுக்குதான்."
"எனக்கு
நெக்லஸ் வேண்டாம் ஆச்சி! பட்டு சுடிதார் மெட்டீரியல் வாங்கித் தர்றீங்களா?"
"நிச்சயமா.." என்று கூறி
ஃபோனை வைத்து விட்டு, சிபியைப் பார்த்த மரகதம்,
"தீபிகா வை,
கல்யாணம் பண்ணிக்கப் போறவனா தான் பள்ளிக்கூடத்தில் எல்லோரும் மேகனை
பாத்திருப்பாங்க... நீ தீபி க்கு சித்தப்பா ன்னு அறிமுகப்படுத்திக் கொண்டு தானே
பேச ஆரம்பிச்ச? அப்ப மிருத்திகா எப்படி நடந்துக்குவா?" என்று கேட்டார்
மரகதம்.
"ஏன் ஆச்சி
ஒரு குழந்தை சொல்றதெல்லாமா நம்புவா?" என்று மேகன் கேட்டான்.
"இந்த விஷயத்துல தீபி, பொய்
சொல்லுவாளான்னு தோணாதா?"
"இதெல்லாம்
சரியா இருந்தாலும், மிருத்திகாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சே? இதுக்கு என்ன பண்றது?
தேவையில்லாம எதிர்பார்த்து ஏமாறத்தான் போறோம்." என்றார் பிறைசூடன்.
கல்யாணம் ஆன மிருத்திகா வை ஏன்
சந்திக்க வேண்டும் ஆச்சி? இதனால் வரப்போவது நல்லதா? கெட்டதா?
அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்
❤❤❤❤❤❤❤❤
0 Comments