சிம்டாங்காரன்: அத்தியாயம்- 18

 

18

அருகிலிருந்தால் அன்பாலும்

தொலைவிலிருந்தால்

நினைவாலும் கொல்கிறாய்

சிம்டாங்காரா…

🌹🌹🌹🌹🌹🌹

 

தீபிகாவின் பள்ளி ரிசப்ஷனில் மரகதமும் ஷோபனாவும், ‘மிருத்திகாவைப் பார்க்க வேண்டும்’ என்று கூறிவிட்டு வரவேற்பறையில் காத்திருந்தனர்.

 

"எப்படி பேச்சை ஆரம்பிக்கப் போறிங்கம்மா?" என்று மரகதம் ஆச்சியிடம், பதட்டத்துடன் கேட்டார் ஷோபனா.

 

"இது என்ன கேள்வினு நீ கேட்டுக்கிட்டு திரியிற? ஆமா உனக்கு ஏன் இப்படி வேர்த்து கொட்டுது? நிதானமா இரு. வர்ற பொண்ண பயமுறுத்தி அனுப்பிடாத."

 

"என்னன்னே தெரியல ம்மா ஏதோ பயமாயிருக்கு."

 

"அது ஒன்னுமில்ல ஷோபி, உனக்கு பள்ளிக்கூடம் னாலே உதறல் தானே? அதான். நீ ஒன்னும் பேச வேணாம், நானே பேசிக்கிறேன்... சரியா? "

 

மிருத்திகா ரிசப்ஷனில் "என்னை யாரோ பார்க்க வந்திருக்காங்களாமே?" என்று கேட்டாள்.

 

வரவேற்பறையில் அமர்ந்திருந்த மரகதம் ஆச்சி,

 

"அதோ நிக்கிறாளே அவதான் மிருத்திகா." என்று தன் மகளிடம் காட்ட, சட்டென்று எழுந்து நின்றார் ஷோபனா.

 

"இப்ப எதுக்கு அவசரமா எந்திரிச்சு நிற்கிறவ? வர்றது உன்னோட டீச்சர் இல்ல... நிமிசத்துக்கு ஒரு தடவ ' இவள கூட்டிட்டு வந்தது தப்போ ன்னு யோசிக்க வச்சிடாத. .. உக்காரு" என்று ஷோபனாவை அதட்டினார் மரகதம்.

 

"அவங்க வரவேற்பறையில் இருக்காங்க மேம்.... இதுவரை உங்களுக்குத் தான் விசிட்டர் வந்ததே இல்லை... இப்ப உங்களுக்கும் வர ஆரம்பிச்சுட்டாங்க போல?" என்று சிரித்தாள் ரிசப்ஷனிஸ்ட்.

 

அவளிடம் சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுத்து விட்டு வரவேற்பறைக்கு வந்த மிருத்திகாவிற்கு மரகதம் ஆச்சியை நன்கு அடையாளம் தெரிந்தது.. ஷோபனாவை தான் யாரென்று தெரியவில்லை. ஆனால் எங்கோ பார்த்த ஞாபகம்.

 

"???"

 

"வாங்க!" என்று இருவரையும் பார்த்து கூறியவள், "காபி, டீ எதாவது குடிக்கிறீங்களா?" என்று கேட்டவாறே, மரகதம் மற்றும் ஷோபனாவின் முகத்தைப் படிக்க முயன்றாள்.

 

'இவங்க எதுக்கு இங்க வந்திருக்காங்க?' என்று நிச்சயமா நினைக்கிறாள். ஆனா முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை. இந்த வயதில் இப்படி இருக்க ரொம்ப கஷ்டப்பட்டிருக்க வேண்டும்... இருபத்தி நாலு வயசிருக்குமா?' என்று யோசித்த மரகதம் ஆச்சி,

 

"இன்னைக்கு எனக்காக அரை நாள் லீவு எடுக்க முடியுமாம்மா?" என்று கேட்டார்.

 

இதை எதிர்பார்க்காத மிருத்திகா, மீண்டும் யோசனையுடன் இருவரையும் பார்த்தாள்.

 

"நிச்சயம் உன் மனசு புண்படுற மாதிரி எதுவும் நடக்காது வாம்மா.." என்று அழைத்ததும்.

 

"கொஞ்சம் இருங்க இதோ வரேன்." என்று கூறிச் சென்றாள்.

 

"என்னம்மா இவ இப்படி இருக்கா? சிரிக்க பணம் கேப்பா போலிருக்கே? ரொம்ப ரஃப் (rough) டைப்போ? இவள போயி சிரிச்ச முகம்ங்கிறான்!!!"

என்று ஷோபனா கேட்டதும்.

 

"இல்ல ஷோபி! நம்ம வீட்டுக்கு வந்தபோது, இந்தப் பொண்ணு கள்ளங்கபடில்லாத சிரிச்ச முகமாதான் இருந்தா. எவ்வளவு கஷ்டப்பட்டாளோ? அஞ்சு வருஷம்கிறது சாதாரணமில்ல... ஒரு சின்ன பிரச்சனையாவே இருந்தாலும் அஞ்சு நாளே அதிகமா தெரியும்... ஒரு பொண்ணு தன் இஷ்டபடி நடக்கனும்னு தான் எல்லோருக்கும் நினைக்கிறாங்க... அதுல கொஞ்சம் மாற்றம் ஆயிட்டா... அந்தப் பொண்ண வாழவிட மாட்டாங்க... அவ மனச குத்திக் கிழிச்சுடுவாங்க.... இவ எதையெல்லாம் தாண்டி வந்தாளோ? அதான் வெளிய போய் பேசலாம்னு சொன்னேன்." என்ற மரகதம் ஆச்சி, மிருத்திகா வருவதைப் பார்த்து, ஷோபனாவையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.

 

"பக்கத்துல எங்கயாவது கோயிலுக்கு போவமாம்மா? எனக்கு ரொம்ப நேரம் கால தொங்கப்போட்டு உக்கார முடியாது." என்று மரகதம் ஆச்சி சொன்னதும்,

 

"சரி!" என்றாள்

 

அருகில் இருந்த கோயிலுக்குச் சென்று அங்கிருந்த விநாயகரை வணங்கிவிட்டு, சுற்றுப் பிரகாரத்தில் அமர்ந்தனர்.

 

"அய்யா எப்படி இருக்கார்னு கேப்பே ன்னு எதிர்பாத்தேன்மா..." என்று பேச்சைத் தொடங்கினார் மரகதம் ஆச்சி.

 

"ஸாரி ம்மா! நீங்க எப்படி இருக்கீங்க? அய்யா எப்படி இருக்காங்க? அய்யா வை நான் கோயிலுக்கு வரும் போது பார்ப்பேன்." என்றாள் மிருத்திகா.

 

"ஓ! என்னைத்தான் மறந்துட்டியா?" என்று கேட்டார் மரகதம் ஆச்சி.

 

"அப்படில்லாம் இல்லம்மா... "

 

"நான் உனக்கு அம்மா வா? ஆச்சி னே கூப்பிடு." என்று மரகதம் ஆச்சி சொன்னதும் சிரித்தபடி தலையாட்டினாள். பேசும் போது அடிக்கடி ஷோபனா வை யோசனையுடன் பார்த்தாள் மிருத்திகா.

 

"இவ என் பொண்ணு பேரு ஷோபனா. எனக்கு இவ ஒரு பிள்ளைதான். நீ பார்த்தது கிடையாது ஏன்னா இவ ஆஸ்திரேலியாவுல செட்டில் ஆயிட்டா." என்று கூறியபடி மிருத்திகாவின் முகத்தை ஆராய்ந்தார் மரகதம் ஆச்சி.

 

'அந்த பொண்ணு முகத்துலதான் ஒன்னுமே தெரியலையே! ஓ! தன்னோட பேரனின் அம்மா என்று மறைமுகமாக அறிமுகப் படுத்தியாச்சு! ! ! ரியாக்சன் பாக்க வேண்டாமா?' என்று நினைத்தார் ஷோபனா.

 

'ம்ஹூம்! அவ என்ன நினைக்கிறாள் னே தெரியல. முகத்தைக் கல்லாக்கி இருக்கிறாள்.. சம்பிரதாயமாக மட்டுமே பேசுவதும், சிரிப்பதும். .. ' என்று நினைத்து, இதமாக சிரித்தார் மரகதம்.

 

'இவ வாயே திறக்கப் போறதில்லை. .. இந்த அம்மா ஏன் இப்படி பண்றாங்க?' என்று நினைத்த ஷோபனா விடம்,

 

"எப்படி இருக்கீங்க?" என்று கேட்டாள் முகம் மாறாமல்.

 

"ம்ம்" என்று தலையாட்டினார் ஷோபனா.

 

‘ஷோபனாவை எந்த முறை வைத்தும் கூப்பிட வில்லை’ என்பதை கவனித்தார் ஆச்சி.

 

"மிருத்திகா ன்னா என்னம்மா அர்த்தம்? என்று கேட்டார் மரகதம் ஆச்சி.

 

சட்டென்று நிமிர்ந்தவள், ஆச்சியின் கண்களுக்குள் பார்த்தாள். ' தெரிந்தே கேட்கிறார்களா?' என்று நினைத்தபடி,

 

"பூமாதேவி."

 

‘ஒரு வார்த்தை விடையளி! நடக்கிறதோ?’ என்று நினைத்துக் கொண்டார் ஷோபனா.

 

"ஆளுக்கேற்ற பேர்தான்." என்றார் ஆச்சி.

 

மெல்லியதாக சிரித்தாள்.

 

'என்ன ஒரு நல்ல பதில்!!! சிரிக்கிறதையாவது பளிச் சுனு சிரிக்கக்கூடாதா' என்று நினைத்தார் ஷோபனா.

 

"வீட்டுல ஒரு விஷேசம் வச்சிருக்கோம். .. உன்னைக் கூப்பிடலாம்னு வந்தோம் மா. "

 


‘மேகனின் திருமணமாக இருக்கும்’ என்று நினைத்த மிருத்திகா சட்டென்று "இதை பள்ளியில் வச்சே சொல்லியிருக்கலாமே ஆச்சி?" என்று கூறிவிட்டு 'சட்!! உணர்ச்சி வசப்படாத மிரு.' என்று தன்னைக் கட்டுப்படுத்த முயன்றாள்.

 

'வெரிகுட்! இத தான் எதிர்பார்த்தேன். கூட்ட விட்டு வெளியே வா பெண்ணே... என்று ஆச்சி நினைப்பதற்குள், மீண்டும் முகத்தை கல்லாக்கிக் கொண்டாள்.

 

"என்ன விஷேசம்னு கேப்பே னு நினைச்சேன்... நீ என்னன்னா?"

 

"..." ஒன்றும் பேசாமல் முகத்தையும் நேராக பார்க்காமல் குனிந்து கொண்டாள் மிருத்திகா.

 

'உன் உணர்வுகள் எனக்கு புரியும்... வெளியே வா!' என்று நினைத்த ஆச்சி,

 

"நம்ம வீட்டுல ஒரு ஹோமம் பண்ணலாம்னு இருக்கோம். நம்ம வீட்டு வாண்டு உன் கிளாஸ் ல படிக்குதே அந்த குட்டி, தீபிகா தெரியும்தான?" என்று கூறி நிறுத்திய மரகதம் ஆச்சிக்கு மிகத் தெளிவாக புரிந்தது மிருத்திகா வின் மனசு. கல் போல முகத்தை வைத்திருந்தாலும், நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியது அவள் படபடப்பைக் காட்ட,

 

'ஐயோ கஷ்டபடுறா' தெய்வாதீனமாக புரிந்து கொண்ட ஷோபனா, மிருத்திகா வருத்தப் படுவது பொறுக்காமல்,

 

"அவ பத்தாவது பொதுத் தேர்வு எழுதுறா இல்லையா? அதான் ஹோமம் பண்றோம்." என்று அவசரமாக கூறினார்.

 

'உன்னை இப்ப சொல்லச் சொன்னேனா? ' என்பது போல பார்த்தார் மரகதம் ஆச்சி.

 

"இல்ல! ரெண்டு பேருமே தப்பா எடுத்துக்காதீங்க... நான் ஹாஸ்டல் ல இருக்கேன்... எங்க குடும்பம் வந்தவாசி பக்கத்துல இருக்கும் தென்னாங்கூர் ங்கிற கிராமத்துல இருக்காங்க. எங்க வீட்ல அனுமதி கேட்கனும்."

 

"நிச்சயமா! வீட்ல கேட்டுக்கம்மா... நாளகழிச்சு தானே ஹோமம்? அதுக்குள்ள கேட்டுடலாம்ல? நம்ம வீட்டுல விஷேசம் னு சொன்னா ஒன்னும் சொல்ல மாட்டாங்க "

 

"இருந்தாலும் அப்பா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்." என்றாள் மிருத்திகா யோசனையுடன்.

 

'உன்னை வரவைக்கிறேன் பார்...' என்று நினைத்த மரகதம் ஆச்சி,

 

"அண்ணன்களும் கிராமத்துல தான் இருக்காங்களா?"

 

"இல்ல! இங்கதான் சன்னதித்தெருவில் இருக்கிறார்கள்."

 

"அவங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?" என்று மரகதம் ஆச்சி கேட்க,

 

'இது ரொம்ப முக்கியமா?' என்று நினைத்தார் ஷோபனா.

 

"பெரிய அண்ணனுக்கு ஒரு பொண்ணு, சின்ன அண்ணனுக்கு ஒரு பையன்."

 

"அப்படியா ரொம்ப நல்லது... அந்த குட்டிகள் பேரென்னம்மா?"

 

'இந்த அம்மா ஏன் டிராக் மாறி போறாங்க?' என்று புரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் ஷோபனா.

 

"பெரியண்ணா பொண்ணு பேரு மஞ்சு, சின்னண்ணா பையன் பேரு முகில்." என்று கூறி விட்டு ஆச்சியை திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் மிருத்திகா. 'மேகனின் ஞாபகத்தில், நான் தான் பேரு வச்சுருக்கேன்னு கண்டுபுடிச்சிருவாங்களோ?'

 

'நான் நீ படிச்ச ஸ்கூலோட, கரஸ்பாண்டன்ட் டே நான் தான்' என்று நினைத்தவாறு, எதுவும் புரியாதது போல முகத்தை வைத்துக் கொண்டார் மரகதம் ஆச்சி.

 

சட்டென்று உஷார் ஆன மிருத்திகா,

 

"எங்க வீட்ல அனுமதி கொடுத்தால் மட்டும் தான் வரமுடியும்..." என்று கூறி பேச்சை முடிக்கப் பார்த்தாள்.

 

"என்னமா இப்படி சொல்லிட்ட? தீபி யோட வகுப்பு டீச்சர், நீ வந்து, ஆசீர்வாதம் பண்ணினா நல்லதுன்னு கூப்பிட வந்தோம். ஏன்னா கொஞ்ச நாளாவே, தீபிக்கு படிப்புல கொஞ்சம் கவனம் சிதறுது.... படிக்கிறதுல இருந்து தப்பிக்க வழி தேட ஆரம்பிச்சுட்டா.. பாருமா! குட்டி பொண்ணுக்கு இருக்கும் சாமர்த்தியத்தை!! எனக்கு ஒரு பேரன் இருக்கான்.. இதோ இவ மகன்... அஞ்சு வருசமா தொலைஞ்சு போன காதலிய நினைச்சுக்கிட்டு, கல்யாணமே பண்ணிக்க மாட்டேங்குறான்... வற்புறுத்தி பொண்ணு பார்க்க கூட்டிட்டு போனாலும் உபயோகமில்ல... அத பார்த்த அந்த குட்டி, ‘நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?’ னு நேரா வே என் பேரன் ட்ட கேட்டுட்டா... அப்புறம், 'கல்யாணம் பண்ணிக் கிட்டாலும் படிக்க வைப்பேன்னு' மேகன் சொன்ன பிறகு, ‘இதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணனும்? படிக்கிறதுல இருந்து தப்பிக்க முடியாது போலிருக்கே’ ன்னு நினைச்சு, அமைதியா இருக்கா. .. ம்ஹும்! என்ன பண்றது? நம்மட்ட பேசுற மாதிரி வெளியே சொல்லிட்டா என்ன பண்றதுன்னு... சிபி! எம்பேரனோட ஃபிரண்ட். அவன் அண்ணன் பொண்ணு தான் தீபி... அவ அப்பா வுக்குத் தெரிஞ்சா அடிச்சு போட்டுறப் போறாரு ன்னு... நம்ம வீட்ல வச்சு ஹோமம் பண்றோம்... வந்துடுமா. .. " என்று தீபிகா பேசிய விஷயம் விளையாட்டு தனமானதுதான்! என்றும், பெரியவர்கள் வற்புறுத்தலின் பேரிலேயே மேகன் பெண் பார்க்க வந்தான் என்றும் விளக்கிவிட்டு மிருத்திகாவின் முகத்தைப் பார்த்தான் மரகதம்.

 

அவர் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை ... மிருத்திகாவின் முகம் அவளறியாமல் யே மலர்ந்தது....

 

'ஹப்பாடா ஒரு வழியா முகம் மலர்ந்துருச்சு! !! இந்த அம்மா முக்கியமான விசயத்த கேக்கலையே?

 

‘உனக்கு கல்யாணம் எப்ப நடந்துச்சுன்னு நாம கேப்போமா?' என்று நினைத்து வாயைத் திறக்கப் போன ஷோபனாவை மெல்ல கிள்ளிவிட்டு, 'நல்லாபோயிட்டுருக்கு கெடுத்துடாதே’ ன்னு கண்களால் எச்சரித்தார் மரகதம் ஆச்சி.

 

அதானே! மிருத்திகா விற்கு தான் திருமணம் ஆயிடுச்சே? இந்த ஆச்சியின் திட்டம் தான் என்ன?

 

அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம். ..

 

❤❤❤❤❤❤❤❤

Post a Comment

0 Comments