இந்து சமய கடவுள்களில் முதல் கடவுள் விநாயகர்
ஆவார்.
இவர் பிள்ளையார், ஆனைமுகன், கணபதி, ஐங்கரன், கஜமுகன்,
விக்னேஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
சிவபெருமான் மற்றும் பார்வதிதேவியின் மகனாவார்.
இவரின் வாகனம் மூஞ்சூறு எனும் குட்டி எலிவகையாகும்.
இவர் பொதுவாக யானைமுகமும், மனித உடலுமாக
அறியப்படுகிறார்.
ஆனால் முப்பத்தியிரண்டு உருவிலும் பல இடங்களில்
காணப்படுகிறார்.
விநாயகரிடம் வரம் வேண்டி செய்யும் பல விரதங்கள்
இருந்தாலும், பெரும்பாலும் அறியப்படுவது, விநாயக
சதூர்த்தி விரதம், விநாயகர் சஷ்டி விரதங்களாகும்.
இவர் அருகம்புல்லும், கொழுக்கட்டையும் வைத்து வணங்கினாலே
வரங்கள் பல தந்தருள்பவர்.
அவருக்கான எளிய மந்திரங்களை அறிவோம்.
விநாயகர் ஸ்லோகம்:
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்
கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி
போற்றுகின்றேனே.
விநாயகர் ஸ்லோகம்:
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.
விநாயகர் சகஸ்ரநாமம்:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ
விக்நோப சாந்தயே
விநாயகர் ஸ்லோகம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
கணபதி ஸ்லோகம்:
அல்லல்போம் வல்வினைபோம்
அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத்
துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக்
கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைத்தொழுதக் கால்.
விநாயகர் ஸ்லோகம்:
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.
விநாயகர் காயத்ரி மந்திரம்:
வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரப்ரசாதனாய நமஹ.
இம் மந்திரங்களை சொல்லி, அருகம்புல்லால்
அர்ச்சனை செய்தபடி வணங்கினால் விநாயகரின் அருள் மிகச் சிறப்பாக கிடைக்கும் என்பது
ஐதீகம்.
விநாயகரை வணங்கி பதினாறு பேறுகள் பெற்று வாழ்வோம்.
வணக்கம்
0 Comments