சுவையான மட்டன் தக்கடி

 

மட்டன் தக்கடி





தேவையான பொருட்கள்:

வெங்காய விழுது:

பெரிய வெங்காயம் - 2 மீடியம் சைஸ்

பெரிய பூண்டு - 4

இஞ்சி - ஒரு துண்டு

பெரிய தக்காளி - 1


மசாலா பொடிகள்:

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 

குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மட்டன் மசாலா பொடி - 1 1/2 ஸ்பூன்

காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் - 1ஸ்பூன்

தயிர் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு 


கொழுக்கட்டை செய்ய:

அரிசி மாவு - 1 கப் 

மட்டன் கிரேவி - 1/2 கப்

சீரகம் - 1 டீஸ்பூன் 

தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ½

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1

பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு 

உப்பு - தேவைக்கு


செய்முறை:

ஒரு மிக்ஸியில் 2 வெங்காயம், 1 தக்காளி, ஒரு துண்டு இஞ்சி, 4 பூண்டு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

வாணலியில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, ஒரு பிரியாணி இலை சேர்த்து சிவக்கவும்,

அரைத்த தக்காளி வெங்காயம் விழுது, பச்சை மிளகாய் சேர்த்து சுருள வதக்கவும், 

மட்டனையும், கொடுத்துள்ள மசாலா பொடிகளான, மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன், மட்டன் மசாலா பொடி ஒன்றரை ஸ்பூன், காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், தயிர் 2 டேபிள் ஸ்பூன், தேவையான அளவு உப்பும் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிடுங்கள்.

அரிசி மாவில் கொழுக்கட்டை செய்யத் தேவையான பொருட்களான, சீரகம் ஒரு டீஸ்பூன், துருவிய தேங்காய் 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தில் பாதி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து, அதில் கொதித்துக் கொண்டிருக்கும் மட்டன் குழம்பு ½ கப் சேர்த்து கொஞ்சம் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

இதில் கொஞ்சம் மாவை தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து அதை குழம்பில் சேர்த்துவிடுங்கள்.

பிறகு குட்டியாக உருண்டை பிடித்து அதை வடைபோல் லேசாக தட்டி கொழுக்கட்டை செய்து கொள்ளுங்கள்.

அல்லது நீங்கள் விரும்பும் வடிவத்தில் குட்டி குட்டியாக கொழுக்கட்டை செய்து அதை கொதிக்கும் குழம்பில் சேர்தது ஒரு கொதி வரவும், பத்து நிமிடம் குறைந்த தீயில் சிம்மரில் வைத்து இறக்கும் முன் சிறிது கொத்துமல்லி இலை தூவி விடுங்கள்.


சுவையான மட்டன் தக்கடி ரெடி!


🙏🙏🙏🥗🙏🙏🙏





Post a Comment

0 Comments