சுவையான கோதுமை நூடுல்ஸ்

சுவையான கோதுமை நூடுல்ஸ்


தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - கால் படி

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு


மசாலா:

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பொடியாக நறுக்கியபூண்டு - 2 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள் 

ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 2

கேரட் ரெண்டு - 2

முட்டைகோஸ் - பாதி

குடைமிளகாய் - 1

உப்பு - தேவையான அளவு.

மிளகுத்தூள் - 2 ஸ்பூன் 

சீரகத்தூள் - 1 ஸ்பூன்

மிளகாய் தூள் -1 ஸ்பூன் 

சிக்கன் மசாலா தூள் அல்லது 

சாட் மசாலா தூள் - 1 ஸ்பூன்

சீனி ஒரு ஸ்பூன்

சோயா சாஸ் - 1 ஸ்பூன் 

டொமேட்டோ சாஸ் - 2 ஸ்பூன்

சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்


செய்முறை: 


கால் படி கோதுமை மாவில் நான்கு டேபிள்ஸ்பூன் என்னை தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தை விட கடினமாக இருக்கும் படி நன்றாக பிசைத்துக் கொள்ளவும். இதை மூடி வைத்துவிட்டு குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை அப்படியே வைத்து விடவும்.


இடியாப்ப அச்சில் முறுக்கு சுடும் அச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.


ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் இரண்டு படி அளவு தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் உப்பு ஒரு ஸ்பூன் எண்ணெயும் ஊற்றி கொதிக்க விடுங்கள்.


ஒரு ட்ரெயில் கோதுமை மாவை நன்கு பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். 


முறுக்கு பிழியும் அச்சை எடுத்து அதில் கோதுமை மாவை வைத்து மாவு பரப்பி வைத்த ட்ரெயின் மேல் பிழிந்து விடுங்கள் ஒரு வரிசை பிழிந்ததும் அந்த நூடுல்ஸ் மீது கோதுமை மாவை தூவி விடுங்கள். அப்பொழுதுதான் ஒன்றோடு ஒன்று ஒட்டாது.


அதேபோல் ஒரு முறை அச்சில் வைத்த மாவு பிழிந்து முடியும் தருணம் கையில் மாவை எடுத்து விடாமல் கத்தரிக்கோல் வைத்து கட் பண்ணுங்கள் அப்பொழுதுதான் மாவு ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.


இதேபோல் அந்த ட்ரெயில் வரிசை வரிசையாக மாவு முழுவதையும் பிழிந்து விடுங்கள்.


அவ்வளவு நூடுல்ஸ்சிலும் லேசாக கோதுமை மாவை தூவி நூடுல்ஸ் தனித்தனியாக பிரித்துக் கொள்ளுங்கள்.


தண்ணீர் நன்றாக கொதிக்கும் பொழுது அதில் இந்த நூடுல்ஸ் போட்டு வேக விடுங்கள். பத்து நிமிடம் போதும் நூடுல்ஸ் வெந்துவிடும்.


நூடுல்ஸ் வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு சல்லடை கரண்டியால் நூடுல்ஸ்சை எடுத்துத் தனியாக வைக்கவும்.


வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் நீளவாக்கில் ஸ்லைசாக நறுக்கிய வெங்காயத்தில் பாதியைப் போட்டு நன்றாக பிரவுன் கலர் வரும் வரை வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.


நல்ல அகலமான‌ பெரிய வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு 2 டேபிள்ஸ்பூன், துருவிய இஞ்சி ஒரு டேபிள் ஸ்பூன், நீளவாக்கில் சிலைசாக நறுக்கிய வெங்காயத்தில் மீதி சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதம் வரும்வரை வதக்குங்கள்.


அதில், கேரட் துருவியில் துருவிய கேரட், துருவிய முட்டைகோஸ், குடைமிளகாய் 1 சேர்த்து, அடுப்பை ஹை ஃப்ளேமில் வைத்து காய்கள் பாதி வேகும் வரை நன்கு வதக்குங்கள். காய்கள் முழுவதும் வதங்கி விடக் கூடாது கொஞ்சம் கிரஞ்சியாக இருக்க வேண்டும்.


இரண்டு நிமிடம் வதக்கிய பிறகு அடுப்பை மீடியம் லோ வில் வைத்துவிட்டு, காய்களுக்குத் தேவையான அளவு உப்பு, இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் சீரகத்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பவுடர் அல்லது சாட் மசாலா பவுடர் போட்டு நன்கு கலந்து விடுங்கள்.


அதில் சோயா சாஸ் ஒரு ஸ்பூன், சோயா சாஸ் இல்லாவிட்டால் அரை மூடி எலுமிச்சம் பழம் சாறு, டொமேட்டோ சாஸ் இரண்டு ஸ்பூன், சில்லி சாஸ் ஒரு டீஸ்பூன் அல்லது காரத்திற்கு ஏற்ப கால் ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.


 காய்கள், மசாலாவுடன் நன்கு கலந்ததும், வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து இரண்டு கரண்டிகளைக் கொண்டு மென்மையாகக் கலந்து விடுங்கள். மசாலாவும் நூடுல்ஸ்சும் நன்றாக கலந்து வரும் வரை கிளறுங்கள்.


இறுதியாக நன்கு வதக்கிய ப்ரஓளன் நிற பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கலந்து விட்டு இறக்குங்கள்.


சுவையான ஆரோக்கியமான கோதுமை நூடுல்ஸ் ரெடி.



குறிப்பு:


நூடுல்ஸ் பிழியும் போது ஒரு ட்ரெயில் வைத்து மாவு தூவி பிழியலாம் அல்லது பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கும் பொழுது

 நேரடியாக அந்த தண்ணீரிலேயே நூடுல்ஸ் பிழியலாம்.


🙏🙏🙏🥗🥗🥗🙏🙏🙏




Post a Comment

0 Comments