கத்திரிக்காய் தக்காளி சட்னி

 கத்திரிக்காய் தக்காளி சட்னி 




தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - 1 கைப்பிடி

கத்தரிக்காய் - 4

தக்காளி பழம் - 4

வெங்காயம் - 1

அல்லது

சின்ன வெங்காயம் - 5, 7

புளி - 2 முத்து அளவு

பச்சை மிளகாய் -1

உப்பு - தேவையான அளவு

பெருங்காயத்தூள் - ½ ஸ்பூன் 

கொத்தமல்லி தழை - கொஞ்சம்


தாளிக்க:

கடுகு உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன் 

சின்ன வெங்காயம் - 5 

கருவேப்பிலை - 1 கொத்து

காய்ந்த மிளகாய் - 1



செய்முறை:


ஒரு கைப்பிடி துவரம்பருப்பில் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.


நாலு கத்திரிக்காய், நாலு தக்காளி பழம், ஒரு வெங்காயம், ஆகிய காய்களை நறுக்கிக் கொள்ளவும்.


அத்துடன் புளி இரண்டு முத்து அளவு, பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும்.


பருப்பு நன்கு வந்ததும் நறுக்கி வைத்த காய்கறிகளை அதில் சேர்க்கவும். கூடவே காரத்திற்கு தகுந்த மாதிரி ஐந்து அல்லது ஆறு கார மிளகாய் சேர்க்கவும். 


எல்லாம் குழைந்து வர வேண்டும்.


காய்கறிகள் நன்கு வெந்ததும் கொஞ்சம் பெருங்காயம், உப்பு சேர்த்துக் கொள்ளவும்.


இரண்டு நிமிடம் கழித்து இறக்கி ஆறவிட்டு மசித்து கொள்ளவும். அல்லது மிக்ஸியில் பல்ஸ் மோடில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.


அத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடுங்கள்.


வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு போட்டு பொரிந்ததும், நறுக்கிய சின்ன வெங்காயம் கொஞ்சம், கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து கத்திரிக்காய் சட்னியில் போடவும்.


சுவையான கத்தரிக்காய் தக்காளி சட்னி தயார்.


குறிப்பு:

துவரம்பருப்பு சேர்க்காமலும் இந்த சட்னி செய்யலாம்.

இது இட்லி தோசை வெண்பொங்கல் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.



🙏🙏🙏🍜🍜🍜🙏🙏🙏

Post a Comment

0 Comments