உருளைக்கிழங்கு கார வறுவல்
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - ½ கிலோ
பெருங்காயத்தூள் - ¼ ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
சிவப்பு மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ½ ஸ்பூன்
கொத்தமல்லி இலை - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - ¼ ஸ்பூன்
சோம்பு - ¼ ஸ்பூன்
பூண்டு - 9, 14
கறிவேப்பிலை - தேவைக்கு
கடலை எண்ணெய் - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
தனியா - 2 ஸ்பூன்
பூண்டு - 6
காய்ந்த மிளகாய் - 5
கறிவேப்பிலை -
சீரகம் -
சோம்பு - ¾ டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 ½ ஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
வெறும் வாணலியில் தனியா, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம், சோம்பு ஆகிய வறுத்து அரைகக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து குறைந்த தீயில் வறுத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும் சோம்பு சேர்த்து சிவக்கவும், நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்குங்கள்.
பூண்டு கொஞ்சம் நிறம் மாறவும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரை வதக்கி அதில் உருளைக்கிழங்கை சேர்த்து தாளித்த பொருட்களுடன் நன்கு கலந்து விடுங்கள்.
பிறகு தேவையான அளவு உப்பு, 11/2 ஸ்பூன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடுங்கள்.
உருளைக்கிழங்கு குறைந்து விடாமல் 90% வரை வெந்து இருந்தால் போதும்.
அதில் வறுத்து அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து கொஞ்சம் எண்ணெய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, மல்லித்தழை தூவி இறக்கவும்.
மிக சுவையான உருளைக்கிழங்கு கார வறுவல் தயார்.
🙏🙏🙏🍜🍜🍜🙏🙏🙏
0 Comments