துவரம்பருப்பு துவையல்
தேவையான பொருட்கள்;
துவரம் பருப்பு - 200 கிராம்
காய்ந்த மிளகாய் - 10,15
பூண்டு - 10, 15
புளி - 2 முத்து அளவு
பெருங்காயம் - ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
கடுகு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
வெறும் வாணலியில் துவரம்பருப்பு சேர்த்து குறைந்த தீயில் (சிம்ல்) பொறுமையாக வறுங்கள். அப்பொழுதுதான் துவரம்பருப்பு முழுவதும் வறுபடும். மீடியம் அல்லது ஹை ஃப்ளேம் ல் வைத்து வறுத்தால், நிறம் மாறுமே தவிர பருப்பு, உள்ளும், புறமும் நன்கு வறுபட்டு இருக்காது. சுவையும் குறைவாக இருக்கும்.
அதனுடன் பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து குறைந்த தீயில் வறுங்கள்.
அனைத்தும் சேர்ந்து முக்கால் பதம் வறுபட்டதும், அதில் புளி, உப்பு சேர்த்து வறுங்கள்.
பருப்பு சிவந்து வரவும், அதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு கிளறு கிளறி அடுப்பிலிருந்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடுங்கள். பெருங்காயத்தூள் சேர்த்த பிறகு ரொம்ப நேரம் வறுக்க வேண்டாம்.
எல்லாம் ஆறியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
சுவையான துவரம் பருப்பு துவையல் ரெடி.
குறிப்பு:
இந்தத் துவையலை பாசிப்பருப்பு, பாசிப்பயறு, கடலைப்பருப்பு போன்ற பருப்புகள் வைத்தும் அரைக்கலாம்.
🙏🙏🙏🙏🥗🥗🥗🙏🙏🙏🙏
0 Comments