உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியத்தைத் தரும் முத்திரைகள்

உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியத்தைத் தரும் முத்திரைகள்


உடல் பருமனாக இருப்பதுதான் பல்வேறு நோய்களுக்கும் முதல் காரணம்.

ஒவ்வொரு யோகா முத்திரையும் தனித்துவமானது. அதை கீழே கொடுத்துள்ள குறிப்புகள் படி சரியாக செய்ய வேண்டும்.

யோக ஹஸ்த முத்திரைகள் நாள்பட்ட நோய்களைக் குணப்படுத்தவும், மன அழுத்தம் மற்றும் நரம்புத் தளர்ச்சியைப் போக்கவும் உதவுகின்றன. 

முத்திரைகள், உடற்பயிற்சி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கிய பலன்களை கொண்டுள்ளது . உடல் எடையை குறைப்பதற்காக நீங்கள் பயிற்சி வேண்டிய கை முத்திரைகளை இங்கே காண்போம்…

அவை...

  •  சூரிய முத்திரை
  • லிங்க முத்திரை
  • அபான முத்திரை
  • க்யான் முத்திரை 
  • ருத்ர முத்திரை 



சூரிய முத்ரா




சூரிய முத்திரை என்பது யோகத்திலும் ஆயுர்வேதத்திலும் உடல் மற்றும் மனநிலையை சமநிலைப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு யோக முத்திரையாகும். இது உடலில் உள்ள  கபதோசத்தைக் குறைத்து, பித்தத்தினை அதிகரிக்கிறது, மேலும் வெப்பத்தை அதிகரிக்க உதவுகிறது

பயிற்சி செய்ய உகந்த நேரம்:

இந்த முத்ரா பயிற்சி செய்ய சிறந்த நேரம் காலை நேரம்.

உச்சி வெயில் நேரம், வெயிலில் பயணம் செய்யும் சமயங்களில் இந்த முத்திரை செய்வதை தவிர்க்கவும். கோடையில் தினமும் ஒரு முறை செய்தால் போதும்.

சூரிய முத்திரையை குறைந்தது 5 விருந்து 10 நிமிடங்கள் செய்ய வேண்டும். நீண்ட நேரம் செய்தால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். குளிர்காலத்தில் இதனை 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

செய்யும் முன்பு:

சூரிய முத்திரையை செய்யும் முன், அருகில் ஒரு டம்ளரில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து வைத்துக் கொண்டு பின் முத்திரை செய்யுங்கள். முத்திரை செய்து முடித்த உடனே தண்ணீரைக் கட்டாயம் குடிக்க வேண்டும்.


தவிர்க்க வேண்டியவர்கள்

கல் அடைப்பு இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாதவிடாய் காலத்தில் இருப்பவர்கள் இந்த சூரிய முத்திரையை செய்யக் கூடாது.


பயிற்சி செய்யும் முறை:

உங்கள் முதுகெலும்பை நிமிர்ந்து நேராக வைத்து வசதியாக உட்காருங்கள்.

உங்கள் மோதிர விரலை மடக்கி உள்ளங்கையின் நடுவில் வைத்துக்கொள்ளுங்கள். 

கட்டை விரலால் மோதிர விரலின் நடுப்பகுதியை அழுத்திக் கொள்ளுங்கள்.

மீதி மூன்று விரல் நீட்டி இருக்க வேண்டும்.

இரண்டு கைகளிலும் இந்த முத்திரையை செய்யவேண்டும்.

உங்கள் உள்ளங்கைகள் மேல்நோக்கி உங்கள் தொடைகள் அல்லது முழங்கால்களில் வைத்துக் கொள்ளுங்கள்.


பயன்கள்:

இது அக்னி முத்ரா என்றும் அழைக்கப்படும். இதை செய்வதால் உடலில் வலிமை அதிகரிக்கும். 

உடல் முழுவதும் சக்தியும், உஷ்ணமும் பரவும். 

உடல் ஸ்திரத்தன்மை பெரும். 

உடல் எடை குறையும். 

மன அழுத்தம் குறையும். 

கொழுப்புக்கள் கரையும். 

பசியைத் தூண்டும். 

செரிமானத்துக்கு உதவும்.

ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு கொழுப்புச் சேருதல் ஆகியவற்றைச் சரிசெய்து, சீரான ரத்த ஒட்டத்துக்கு வழிவகுக்கும்.


அடுத்த முத்திரையான லிங்க முத்திரை பற்றிய குறிப்புகளை அடுத்த பதிவில் காணலாம்.

🙏நன்றி!🙏

Post a Comment

0 Comments