சுவையான, ஆரோக்கியமான, நெல்லிக்காய் சட்னி
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு உளுந்தம் பருப்பு - தலா 1 ஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கொத்து
பூண்டு - பெரியது 2, சிறியது 5
பெருங்காயத்தூள் - 2 பின்ச்
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 3
பெரிய நெல்லிக்காய் - 4
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பற்கள் - 10
மல்லித்தழை - சிறிது
தாளிப்பு:
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
மிளகாய் வற்றல் - 2
செய்முறை:
வாணலியில் வடை சட்டியை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன் உளுந்தம் பருப்பு போடுங்கள்.
கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை ஒரு கொத்து, ரெண்டு பின்ச் பெருங்காயத்தூள், 2 பூண்டு, சிறு துண்டு இஞ்சி போட்டு நன்கு கிளறுங்கள்.
அடுத்து பச்சை மிளகாயை சேர்த்து பச்சை மிளகாய் நன்கு வதக்கவும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த 4 நெல்லிக்காயை போட்டு கிளறுங்கள்.
கூடவே சட்னிக்குத் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வதக்குங்கள்.
நெல்லிக்காய் பாதி வதங்கியதும் 10 லிருந்து உங்கள் தேவைக்கேற்ப தேங்காய் துண்டுகள் சேர்த்து, ரொம்ப நேரம் வதக்க வேண்டாம். ஒரு நிமிடம் வதக்கி விட்டு அடுக்கை அணைத்து மல்லித்தழை தூவி கிளறி விடுங்கள்.
அதை நன்கு ஆறவிட்டு அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அதே வாணலில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு போட்டு புரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து காய்ந்த மிளகாய் இரண்டை கிள்ளி போட்டு மிளகாய் லேசாக நிறம் மாறும் வரை கிளறி, அரைத்து வைத்த சட்னியில் சேர்த்து விடுங்கள்.
சுவையான ஆரோக்கியமான சட்னி தயார்!
🙏🙏🙏🙏🙏🙏🥗🙏🙏🙏🙏🙏🙏
0 Comments