காலிஃபிளவர் மிளகு வறுவல்
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1 (300கிராம்)
எண்ணெய் - 3 ஸ்பூன்
பட்டை – 1 சின்ன துண்டு
கிராம்பு – 1
ஏலக்காய் – 1
கருவேப்பிலை – 1 கொத்து
பெரிய வெங்காயம் – 2 கைப்பிடி அளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க:
மிளகு – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
ஏலக்காய் – 2
லவங்கம் – 2
பட்டை – 1 சின்ன துண்டு
கருவேப்பிலை – 1 கொத்து
வர மிளகாய் – 2
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து மிளகு 1 ஸ்பூன், சோம்பு 1/2 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், ஏலக்காய் 2, லவங்கம் 2, பட்டை 1 சின்ன துண்டு, கருவேப்பிலை 1 கொத்து, வரமிளகாய் 2, இந்த பொருட்களை எல்லாம் எண்ணெய் ஊற்றாமல் ட்ரை ஆக வாசம் வரும் வரை வறுத்து, நன்றாக ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.
அடுத்து காலிபிளவரை எடுத்து சிறிய சிறிய பூக்களாக வெட்டி அதை சுடுதண்ணீரில் போட்டு, சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பட்டை 1 சின்ன துண்டு, கிராம்பு 1, ஏலக்காய் 1, கருவேப்பிலை 1 கொத்து, மிகப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2 கைப்பிடி அளவு போட்டு, இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன், போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் லேசாக நிறம் மாறி வந்ததும் சுத்தம் செய்து எடுத்து வைத்திருக்கும் காலிஃபிளவரை கடாயில் போட வேண்டும். இதில் மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு ஒரு நிமிடம் போல வதக்கி விட்டு லேசாக தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்க வேண்டும்.
காலிபிளவர் எக்காரணத்தைக் கொண்டும் முழுமையாக வெந்து விடக்கூடாது. காலிஃப்ளவர் குழைந்து விட்டால், இதன் சுவை நன்றாக இருக்காது. ஆகவே 60 லிருந்து 70% வரை காலிபிளவர் வெந்ததும்,
மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் பொடியை காலிஃப்ளவரில் போட்டு, மூன்றிலிருந்து நான்கு நிமிடம் போல காலிஃப்ளவரை நன்றாக பிரட்டி விட்டு அடுப்பை அணைத்தால் சூப்பரான சுடச்சுட காலிஃபிளவர் ஃப்ரை தயார்.
பின்குறிப்பு:
பச்சை பட்டாணி கிடைத்தால் இந்த காலிபிளவர் பெப்பர் ஃப்ரையோடு சேர்த்து சமைத்து பாருங்கள். இதனுடைய ருசி இன்னும் இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதே சமயம் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🍜🙏🙏🙏🙏🙏🙏🙏
0 Comments