சைவ மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 6
தக்காளி -1
கருவேப்பிலை - 1 ஈர்க்கு
பச்சை மிளகாய் -2
எண்ணெய் - 5 டேஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
புளி - 2 எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வதக்கி அரைக்க:
வெந்தயம் - ¼ டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லி விதை - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - சிறியது 10,12 பெரியது 5,6
பூண்டு - 6,7
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
தேங்காய் - 1 முடி
தக்காளி - 1
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் வாழைப் பூ , கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும், வாழைப்பூ நிறம் மாறவும் எடுத்து தனியாக வைக்கவும்.
புளியைக் கரைத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் உப்பு போட்டு ருசி சரி பார்த்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம், சோம்பு, சீரகம், மல்லி போட்டு வெடித்ததும், காய்ந்த மிளகாய் போட்டு கிளறி,
சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து கிளறி, தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும். வெங்காயம் கண்ணாடி பதம் வரவும், தக்காளி சேர்த்து, எல்லாம் சேர்ந்து 80% வதங்கியதும் எடுத்து நைசாக அரைத்து எடுக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம் 4 பெருஞ்சீரகம் 5 போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி மல்லித்தூள் சேர்த்து கிளறவும்.
பின் ஓரளவு கெட்டியாக கரைத்த புளி சேர்த்து கிளறவும்.
புளிகரைசல் எண்ணையிலேயே கொஞ்சம் கெட்டியாகும் வரை வதங்க வேண்டும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம்.)
புளிக்கரைசல் கெட்டியானதும், அரைத்து வைத்துள்ள மசாலாவை ஊற்றி, குழம்புக்குத் தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்கவும் சுவை பார்த்து, வாழைப்பூ சேர்க்கவும்.
குழம்பு நன்கு கொதிக்கவும், மீடியம் தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வரவும் குழம்பை இறக்கவும்.
0 Comments