பருப்பு உருண்டை குழம்பு
தேவையான பொருட்கள்:
உருண்டைக்கு:
கடலை பருப்பு - 100கிராம்
துவரம்பருப்பு - 50 கிராம்
பாசிப்பருப்பு - 25 கிராம்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 - 5
சோம்பு - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 2,3
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
மல்லி தழை - சிறிது
குழம்பு செய்வதற்கு:
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - ½ டீஸ்பூன்
சோம்பு - ½ டீஸ்பூன்
வெந்தயம் - ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
பூண்டு - 6, 10
சின்ன வெங்காயம் - 6, 10
தக்காளி - 1,2
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கு
அரிசி கழுவிய தண்ணீர் - தேவைக்கு.
மல்லி தலை - சிறிது
அரைக்க:
தேங்காய் இரண்டு சில
சோம்பு - ½ டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
உருண்டைக்கு அரைக்க:
கொடுத்துள்ள பருப்புகளோடு காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து முதல் நாள் இரவு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்பு ஊற வைக்கவும்.
ஊறவைத்த பருப்புகளை தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொள்ளவும், தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.
மிக்ஸியில் பருப்புகளோடு இஞ்சி பூண்டு போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
அரைத்த பருப்பு கலவையோடு பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மல்லித்தழை, உப்பு, அரிசி மாவு சேர்த்து கெட்டியாக பிசைந்து உருண்டை பிடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுந்தம் பருப்பு, சீரகம், சோம்பு, வெந்தயம் போட்டு வெடிக்கவும் கருவேப்பிலை, தட்டிய பூண்டு சேர்த்து கிளறவும்.
பிறகு சின்ன வெங்காயத்தை நீளமாக நறுக்கி போட்டு, கண்ணாடி பதம் வரவும் தக்காளி சேர்த்து, தக்காளி வெந்து வருவதற்காக சிறிது உப்பு சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
தக்காளி குழைந்ததும் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி கலர் மாறவும் புளிக்கரைசலை ஊற்றி கிளறவும்.
புளியின் வாசனை போன பிறகு, அரிசி கலைந்த நீர், பருப்பு ஊறவைத்த நீர் மற்றும் குழம்புக்குத் தேவையான அளவுக்கு நீர் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு ஓரளவு நீர்த்த பதத்தில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உருண்டை போட்டு கொதிக்க விட்ட பிறகு, ரொம்ப கெட்டியாகி விடாமல் சரியான அளவில் இருக்கும்.
குழம்பு நன்கு கொதித்ததும், அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.
குழம்பு தளதளவென்று கொதிக்கும் பொழுது, உருட்டி வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாக மெல்ல சேர்க்கவும்.
உருண்டைகள் குழம்பின் அடிப்பாகத்தில் ஒட்டி விடாமல் இருக்க அவ்வப்போது கரண்டியை வைத்து லேசாக உருண்டை உடைந்து விடாமல் பார்த்து பக்குவமாக எடுத்து விடவும்.
உருண்டை வெந்ததும் எண்ணெய் பிரிந்து வரவும் அதில் மல்லித்தழை தூவி இறக்கவும்.
0 Comments