பேச்சி அம்மன்

 

பேச்சி அம்மன்




சம்புவராயர் எனும் அரச மரபினர் பிற்காலச் சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்டு தொண்டை நாட்டின் பகுதிகளுக்கு சிற்றரசர்களாக வாழ்ந்து வந்தனர். அவ்வாறு ஆட்சி செய்தவர்களில் கி.பி.1356 முதல் கி.பி.1375 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த மூன்றாம் ராஜநாராயண சம்புவராயர் கடைசி சிற்றரசராக அறியப்படுகிறார். அவரது மகன் நான்காம் வல்லாளன் .

அவன் காட்டிற்குள் வேட்டையாடிய பொழுது அவனது முரட்டு குணத்தால் முனிவரின் சாபத்தைப் பெற்றது நினைவிற்கு வந்தது. முனிவரின் சாபப்படி, அவனுக்குப் பிறக்கும் குழந்தையே அவனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் என அஞ்சினான். அதனால் அஞ்சனக்காரர் ஒருவர் மூலம் அவனுக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையால் ஏற்படவிருக்கும் ஜோதிட கணிப்புகளை தெரிந்து கொண்டான். அதன்படி, அவனது குழந்தை பூமியை தொட்டு விட்டால் அவன் இறந்து விடுவான் என்பதால் பிறந்தவுடன் குழந்தையையும் அதைத் தொட்டவர்களையும் உடனே கொன்று விட வேண்டுமென அஞ்சனக்காரர் வல்லாளனை அறிவுறுத்தினார். 

அந்தக் காலங்களில் கட்டில்களோ சொகுசான மெத்தைகளோ கிடைப்பது எளிதல்ல. பிரசவத் தீட்டு படாமல் இருக்க கர்ப்பவதிகளை பிரசவ வலி வந்ததும் வீட்டின் மூலையில் தனியாக இருக்கச் சொல்வார்கள். தரையில் விரித்து வைத்த பாயின் மீது பிரசவிக்கும் கட்டுப்பாடு இருந்த காலமது. பிரசவம் பார்க்க அனுபவம் மிகுந்த ஆச்சிகளை கர்ப்பிணிகளுக்கு துணையாக இருக்க வைப்பார்கள். தரையில் விதித்திருக்கும் பாயில் பிரசவம் பார்த்தால், குழந்தை எப்படி பூமியைத் தொடாமல் பிறக்கும்?)

இந்நிலையில் மன்னனது மனைவி கருவுற்றாள். குழந்தை பிறந்தவுடன் பூமியைத் தொட்டு விட்டால் அவனுக்கு மரணம் ஏற்படும் என்றாலும் அந்த சாபம் தோல்வி அடைந்து விட்டால் அதற்குப் பிறகு தனக்கு அழிவே கிடையாது என்பதால்,  மனைவியின் பிரசவத்தின் போது, குழந்தையின் உடல் பூமியை தொடாதவாறு பிரசவம் பார்ப்பதற்கு ஏற்ற பெண்மணியைத் தேடி வந்தான்.

 அவனது மனைவிக்கு பிரசவ நேரம் நெருங்கியது. அரசனான அவன் தனது மனைவிக்கு பிரசவம் பார்க்க தகுதியான ஒரு பெண்மணியை அழைத்து வரச் சென்றான்.

அப்போது அவன் எதிரில் ஒரு வயதான பெண்மணி வந்து கொண்டிருந்தாள். அவன் அவளிடம் யார் என்று விசாரித்தான். அவள் தனது பெயர் பெரியாச்சி என்றும், தான் ஒரு மருத்துவச்சி என்றும் சொன்னாள்.

அரசன் மகிழ்ச்சி அடைந்தான். நான் இந்த நாட்டின் அரசன்! எனது மனைவிக்குப் பிரசவம் பார்க்க வேண்டும். பிறக்கும் குழந்தை பூமியை தொடாமல் பார்த்துக் கொண்டால் ஒன்னும் பொருளும் பரிசாக தருவதாகச் சொன்னான்.

 வயதான பெண்மணியும் அதற்கு சம்மதித்து அரண்மனைக்குச் சென்றாள்.

வல்லாளன் வீட்டின் அருகில் இருந்த சிறிய கற்பாறையில் அமர்ந்து இரண்டு கால்களும் தரையைத் தொடும்படி ஆசனம் கொண்டாள். வல்லாளன் மனைவியான கார்குழலியை   தனது மடியில் மல்லார்ந்த நிலையில் கிடைமட்டமாக படுக்க வைத்து அவளது வயிற்றைக் கிழித்து கருப்பையின் மேற்புறத்தை திறந்து (Caesarean section) குழந்தையை வெளியே எடுத்தாள். அந்த ஆண் குழந்தை பூமியைத் தொடாதபடி அவளது கையால் மேலுயர்த்திப் பிடித்து தாங்கினாள். கார்குழலிக்கும் குழந்தைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு வெற்றிகரமாக பிரசவத்தை செய்து முடித்தாள்.

அரசனின் விருப்பப்படியே பிரசவம் பார்த்த பெண்மணி. அரசன் தனக்குத் தருவதாகச் சொன்ன பொன்னையும் பொருளையும் கேட்டாள்.

அரசன் அதைத் தராமல் அவளை தன்னுடைய அடிமை என்றும், இனி அரண்மனையை விட்டு வெளியேற முடியாது என்றும் சொல்லி மூதாட்டியை இகழ்ந்து பேசினான்.

இதைக் கேட்டு கோபம் கொண்ட அப்பன் மணி மிக பயங்கர தோற்றம் கொண்டவளாக உருமாறினாள்.

அரசனைக் கீழே தள்ளி அவனை தன் காலால் மிதித்து கொண்டு, அவன் மனைவியை தூக்கி தன் மடியில் கிடத்தி, அவளுடைய வயிற்றை தன் கரங்களால் கிழித்தாள்.

அந்த அரசனையும் காலால் மிதித்தே கொன்றாள்.

கொடுங்கோல் ஆட்சி புரிந்த அரசனும் அவன் மனைவியும் இறந்தார்கள் என்று அறிந்த அந் நாட்டு மக்கள் ஒன்று கூடினர். 

அரசனையும் அவன் மனைவியும் அழித்து அந்தக் கொடுமையில் இருந்து தங்களைக் காப்பாற்றியது பெரியாச்சி என்ற பெயரில் வந்த காளியம்மன் என்று நம்பினர்.

அந்த அன்னையை வணங்கினர். தங்களைக் காப்பாற்றிய அன்னைக்கு பெரியாச்சி அம்மன் என்ற பெயரிலேயே கோயில் அமைத்து வழிபட்டு வந்தனர்.

 இந்த பெரியாச்சியம்மனே நாளடைவில் பேச்சியம்மன் என்றாகி, பல இடங்களில் கோயில் கொண்டுவிட்டார் என்பதாக கூறப்படுகிறது.

இதுதவிர மற்றொரு கதையும் கூறுகின்றனர்.

அது...

ஒரு குடும்பத்தில் சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து இளைய சகோதரன் மட்டும் பிரிந்து சென்றான். பிரிந்து சென்ற அவன் நீண்ட நாட்களுக்குப் பிறகு தொலைவிலிருந்த ஒரு ஊரைச் சென்றடைந்தான்.

அந்த ஊரிலிருந்த பேச்சி என்ற பெண்ணுடன் அவனுக்கு நட்பு ஏற்பட்டது. அந்த நட்பின் தொடர்ச்சியாக பேச்சியை மணந்து கொண்டான். அந்த திருமணத்திற்கு அந்த ஊரிலிருந்த பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அந்த தம்பதியரால் அந்த ஊரில் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறி அருகில் இருந்த காட்டுப் பகுதியில் குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் தங்கள் குடும்பத்திலிருந்து பிரிந்து சென்ற சகோதரனைத் தேடி அவனுடைய மற்ற சகோதரர்கள் அந்த ஊருக்கு வந்தடைந்தனர். கம்பியைப் பற்றி விசாரித்தபோது, அவன் அங்குள்ள பெண்ணை மணந்து கொண்டதாகவும், 
ஊரார் எதிர்ப்பு தெரிவித்ததால், காட்டுப் பகுதியில் வசித்து வருவதாகவும் தகவல் கிடைத்தது.

இதனால் கவலையடைந்தவர்கள் காட்டில் வசிக்கும் சகோதரனைத் தேடிச் சென்றனர்.

காட்டில் தங்களது சகோதரனையும், கர்ப்பிணியான அவனது மனைவி பேச்சியையும் சந்தித்தனர். பின்னர் சகோதரனை மட்டும் தங்களுடன் வரும்படி அழைத்தனர்.

கர்ப்பிணி மனைவியை விட்டு வரமுடியாது என்று அவன் மறுக்க, கோபம் கொண்ட அவனது மூத்த சகோதரர்கள் கர்ப்பிணி என்றும் பாராமல் பேச்சினை கொன்றுவிட்டனர்.
அவர்களைத் தடுத்த இளைய சகோதரனும் கொல்லப்பட்டான்.

இதைக்கண்ட ஊரார், கற்பிக்க பெண் கொல்லப் பட்டதால் தங்கள் ஊருக்கு ஏதேனும் தீங்கு விளைந்து விடுமோ என்று பயந்தனர்.

அவர்கள் பயந்தது போலவே, சிலபல பிரச்சனைகள் உண்டாக, ஊர்ப் பெரியவர்கள் ஒன்று கூடி பேசி, பேச்சிக்கு  கோயில் காட்டி வணங்கினர். 

இதுவே பேச்சியம்மன் வழிபாடு ஆனது.

இந்த மாதிரி கொடூரம் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது...

பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் சக்தியை உணராமல் இருந்திருக்கலாம். ..

 ஆனால் நம்மைப் போலவே வாழ்ந்து இன்னல் பட்டு பெரும் சக்தியாக மாறிய பெண் தெய்வங்களை நாம் வேண்டினால், 

தன்னைப் போலவே பாதிக்கப்படுகிறாள், என்று இந்த சக்தி உங்களுக்குத் துணை நின்று, கயவர்களை அடக்கலாம் அல்லது அழிக்கலாம்.... 

மீண்டும் ஒரு பெண் தெய்வத்துடன் சந்திக்கிறேன் அடுத்த அத்தியாயத்தில்....














Post a Comment

0 Comments