கீரைச்சாறு (சூப்)
தேவையான பொருட்கள்:
அரைக்க தேவையானவை:
தாளிக்க:
செய்முறை:
சோறுக்கு வைக்கும் அரிசியை தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து, கழுவி, குழம்புக்குத் தேவையான அளவு நீரை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
கட்டிப் பெருங்காயமாக இருந்தால் கொதிக்கும் நீரில் போட்டு ஊற வையுங்கள்.
சூடான நீரில் அரிசி மாவை போட்டு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
கசகசாவையும் சிறிது நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள்.
அரைக்கீரையை கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பெரும்பாலும் சின்ன வெங்காயத்தை உபயோகப்படுத்தவும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலியை வைத்து, அரிசி கலந்த நீர் மற்றும் வெந்நீரில் கலந்து வைத்த அரிசி மாவு நீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
தண்ணீர் கொதித்ததும் அதில் நறுக்கி வைத்த கீரை, வெங்காயம், ஒரு சிவப்பு மிளகாயை கிள்ளி போடுங்கள். பெருங்காயத்தூள் அல்லது வெந்நீரில் ஊற வைத்த கட்டிப் பெருங்காயம் சேர்த்து வேக வையுங்கள்.
அரைக்க கொடுத்துள்ள தேங்காய், முந்திரிப் பருப்பு, கசகசா அல்லது பொரி கடலை, பச்சை மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து பிறகு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
கீரை வெந்து வரவும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து, குழம்புக்குத் தேவையான உப்பு சேர்த்து சிறு தீயில் 10 நிமிடம் வேக வையுங்கள்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு வெடித்ததும் சிவப்பு மிளகாய் சேர்த்து தாளித்து கீரைச் சாறில் சேருங்கள்.
குழம்பை இறக்கிய பிறகு, மிதமான சூட்டில் இருக்கும் பசும்பாலை சேர்த்து கலந்து விடவும்.
சுவையான கீரை சாறு தயார் இதை சாதத்துடன் ஊற்றி சாப்பிடலாம் தனியாக சூப் போலவும் குடிக்கலாம்.
0 Comments