பாகற்காய் இனிப்பு பச்சடி
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - ½ கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கருவேப்பிலை - 1 கொத்து
புளி - சிறு எலுமிச்சை அளவு
நாட்டு சக்கரை அல்லது
வெல்லம் -50 கிராம்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள் -1/2டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன் (விருப்பப்பட்டால் மட்டும் சேர்க்கவும்)
செய்முறை:
புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
பாகற்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பெரிய வெங்காயத்தையும் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பச்சை மிளகாய் கீறி வைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியை அடுப்பில் வைத்து மூன்று டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகைப் போட்டு வெடிக்க விடுங்கள்.
கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் போட்டு, அத்துடன் கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், 2 பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து கடலைப்பருப்பு பொன்னிறமாகும் வரை கிளறுங்கள்.
அதில் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த வெங்காயம், பாகற்காய், அரை டீஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து ஃபுல் ஃபிளேமில் அடுப்பை வைத்து, மூன்று நான்கு நிமிடம் நன்றாக வதக்குங்கள்.
பிறகு அதை மூடி வைத்து மூடி, பாகற்காய் சாஃப்ட்டாக வேகும் வரை அவ்வப்போது மூடியை எடுத்து கிளறி விடுங்கள்.
பாகற்காய் நன்கு வதங்கவும், கரைத்து வைத்திருக்கும் புளியை சேர்த்து, உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.
பிறகு பொடித்து வைத்த வெள்ளத்தை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
காய் ஓரளவுக்குக் கெட்டியாகவும் அடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள்.
சுவையான சத்துக்கள் நிறைந்த பாகற்காய் இனிப்பு பச்சடி தயார்.
குறிப்பு:
அடுப்பில் இருந்து இறக்கும் போது காய் கொஞ்சம் கிரேவி பதத்தில் இருக்க வேண்டும் கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாத அளவுக்கு விட்டு இறக்க வேண்டாம்.
0 Comments