கொண்டைக்கடலை பிரியாணி
தேவையான பொருட்கள்:
சுண்டல் கடலை - 150 கிராம்
பச்சரிசி - கால் கிலோ
மசாலாவிற்கு:
மிளகு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - ½ டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை சிறியது - 2
கிராம்பு - 3
ஏலக்காய் - 4
கடல்பாசி - சிறிது
அனாசிபூ - பாதி
எண்ணெய் - 4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
புதினா - ஒரு கைப்பிடி
மல்லித்தழை - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
தயிர் - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 11/2 ஸ்பூன் மல்லித்தூள் ஒரு ஸ்பூன்
தக்காளி - 5
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
கொண்டைக்கடலை முதல் நாளே ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள மசாலாவை கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வானொலி தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீடியம் நெருப்பில் வைத்து அதில் பெரிய வெங்காயம் போட்டு நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
அதில் அரைத்த மசாலாபொடியை சேர்த்து கிளறி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளரவும். அதில் புதினா மல்லிகை சேர்த்து கிளறவும். அத்துடன் இரண்டு கீறிய பச்சை மிளகாயை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
நன்றாக வாசம் வந்த பிறகு தயிர் சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள் மல்லித்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
தக்காளி பழங்களை ஒன்று இரண்டாக அரைத்து அதில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
தக்காளி முக்கால் பதம் வெந்ததும் அதில் ஊற வைத்த கொண்டைகடலை போட்டு நன்றாக கிளறவும். தக்காளி நன்கு குழையும் வரை வதக்கி விடவும்.
பின் தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து குக்கரை மூடி மூன்று நிமிடம் விசில் இல்லாமல் வேக வைக்கவும்.
பிறகு அதில் அரிசியை சேர்த்து நன்கு கிளறவும், தளதளவென்று நன்கு கொதிக்கவும் அடுப்பை குறைத்து வைத்து மீண்டும் ஒருமுறை நன்றாக கிளறி, உப்பு காரம் சரி பார்த்து, இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கிளறி குக்கரை மூடி விசில் வைக்கவும் ஒரு விசில் பத்து நிமிஷம் சிம்மில் வைத்து இறக்கவும்.
0 Comments