பஞ்சாபி சன்னா மசாலா


பஞ்சாபி சன்னா மசாலா




தேவையான பொருட்கள்:

கறுப்பு கொண்டைக்கடலை -1 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

தக்காளி விழுது  -1

இஞ்சி, பூண்டு விழுது  - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய்  - 1

தனியாத்தூள்  - 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

கரம்மசாலா -1/2 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க

சீரகம் -3/4 டீஸ்பூன்

பட்டை - சிறுதுண்டு

கிராம்பு -3

ஏலக்காய் -2

உப்பு+எண்ணெய் - தேவைக்கு


செய்முறை:


கடலையை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் தேவைக்கு நீர் சேர்த்து பாதி உப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.


வெந்ததும் முழு கரம் மசாலாக்களை எடுத்து விடவும்.1/4 கப் வேகவைத்த கடலையை மட்டும் அரைக்கவும்.


பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்,


இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி விழுது, மீதி உப்பு சேர்த்து வதக்கவும். ஏற்கனவே கொண்டைக்கடலை வேகவைக்கும் போது பாதி உப்பு சேர்த்திருக்கிறோம்.


பிறகு தூள் வகைகள் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.


பின் வேகவைத்த கொண்டைக்கடலையை வேகவைத்த நீரோடு சேர்த்து கொதிக்கவிடவும்.


பச்சை வாசனை போனதும் அரைத்த கடலை விழுதை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

சுவையான பஞ்சாபி சன்னா மசாலா ரெடி



Post a Comment

0 Comments