அடர்த்தியான கூந்தலுக்கான எண்ணெய்

 அடர்த்தியான கருகருவென முடி வளர

எண்ணெய்

 


தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் - 1/2லி

பசும்பால் 1/2 லி

அரைக்கீரை ஜூஸ் 100 மிலி

கருவேப்பிலை சாறு 200 மிலி

பெரிய நெல்லிக்காய் சாறு 200மிலி

மருதாணிச்சாறு - 200 மிலி

கரிசலாங்கண்ணி சாறு- 200 மிலி

கரப்பான் இலைச்சாறு- 200 மிலி

பொன்னாங்கண்ணிக் கீரை சாறு - 200 மிலி


செய்முறை:


     இரும்பு வடை சட்டியில் பால் ஊற்றி பொங்கி ஏதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி திறல் திரளாக வரும் வரை காய்ச்சவும் பிறகு எல்லாச் சாரையும் ஒன்றன்பின் ஒன்றாக ஊற்றி மிதமான தீயில் காய்ச்சவும். சிறிது நேரம் கழித்து ஒரு திரியை அந்த எண்ணைக்குள் விட்டு தீ பொறுதி பார்க்கவும்


திரி சடசடவென்று அறிந்தால் ஈரப்பதம் இருப்பதாக அர்த்தம் இன்னும் கொஞ்ச நேரம் என்னை மிதமான தீயில் அடுப்பில் இருக்க வேண்டும்.


எண்ணெயில் நனைத்த திரியில் நெருப்பு இதமாக எரிந்தால் எண்ணெய் தயாரான நிலையில் இருக்கிறது என்று அர்த்தம்.


எண்ணெய் உபயோகிக்கும் முறை:


100 மில்லி லிட்டர் மூலிகை எண்ணெய்க்கு, 600 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய் கலந்து 

உபயோகப்படுத்தவும்.


நன்றி🙏



Post a Comment

0 Comments