சுவையான கொண்டைக்கடலை குழம்பு

 கொண்டைக்கடலை குழம்பு



தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - 200 கிராம்

பெரிய வெங்காயம் - 2 அல்லது

சின்ன வெங்காயம் - 5

தக்காளி - 2

பச்சை மிளகாய் -2

மிளகாய் தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிதளவு


மசாலா பொடி செய்ய:

கடலை எண்ணெய் - அரை தேக்கரண்டி

கடலைப்பருப்பு - ஒரு மேஜை கரண்டி

உளுந்தம் பருப்பு - ஒரு மேஜை கரண்டி தனியா - இரண்டு மேசை கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் - 3 லிருந்து 7 வரை உங்கள் காரத்திற்கு ஏற்ப

புளி - சிறு துண்டு

தேங்காய் துருவல் -2 மேசை கரண்டி

சின்ன வெங்காயம் - பத்து

பூண்டு -ஆறு

இஞ்சி -சின்ன துண்டு


தாளிக்க:

எண்ணெய் - 2ஸ்பூன்

பட்டை - சிறிய துண்டு

கிராம்பு - 4

அன்னாசி மொக்கு - 2 இதழ்

சோம்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 ஈர்க்கு


செய்முறை:


முதலில் கொண்டைக்கடலை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.


குக்கரில் ஊறிய கொண்டைக்கடலை போட்டு, ¼ டீஸ்பூன் மஞ்சள்தூள், ¼ டீஸ்பூன் பெருங்காயத்தூள், 1 டீஸ்பூன் உப்பு போட்டு வேகவிடவும்.


வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணை ஊற்றி, மசாலா பொடி செய்யத் தேவையான சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு லேசாக நிறம் மாற்றவும் மல்லி விதை சேர்த்து கிளறி, அதில் நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து கிளறி, சின்ன வெங்காயம், மிளகாய் புளி, தேங்காய் பல் போட்டு வதக்கி, ஆற விட்டு, நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.


பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்து கொள்ளவும்.


குக்கரில் 4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கொண்டைக்கடலையை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.


பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து வதக்கிய மசாலா பொடி பொருட்களை போட்டு நைசாக அரைக்கவும். பின்னர் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையில் இருந்து ஒரு கையளவு சுமார் 15, 20 கொண்டைக்கடலையையும் சேர்த்து போட்டு, நன்கு அரைத்து கொள்ளவும்.


பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.


எண்ணெய் சுட்ட பின் அதில் பட்டை, கிராம்பு, அன்னாசி மொக்கு, சோம்பு போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு, வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.


வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் மஞ்சள் தூள், அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.


பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு, தக்காளி வெந்து வருவதற்கு சிறிது உப்பு சேர்த்து கிளறவும். தக்காளி நன்கு மசியும் வரை அதை வேக விடவும்.


தக்காளி நன்கு மசிந்தவுடன் அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பேஸ்ட் போட்டு, இரண்டு கிளறு கிளறிவிட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.


பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.


5 நிமிடத்திற்குப் பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு கொண்டைக்கடலை குழம்பை

எடுத்து சாதத்தில் ஊற்றி அதை சுட சுட பரிமாறவும்.






Post a Comment

0 Comments