உனது விழியில் எனது விலோசனம்…
அத்தியாயம்🌟23
மருத்துவ மனையில் வைத்து நேத்ரா…
என் உயிரவிட நீங்க எனக்கு ரொம்ப பெருசு விபா…
என்று விபாட்சுவிடம் பேசியதை சுபாவும் கேட்டுவிட்டாள்.
அதே நேரத்தில் நேத்ராவின் மனதில் விபாட்சு இருப்பதை அறிந்ததும், அதற்குமேல் அங்கு இருக்க முடியாமல் வெளியே வந்த பாபி கிருஷ்ணா,
சுபத்ராவும், நேத்ரா பேசியதைக் கேட்டு விட்டாள் என்பதை அறிந்து, ஒரு நிமிடம், தன் உணர்வுகளை அடக்கி, தலைகுனிந்து தயங்கி நின்றவன், வேகமாக அவ்விடத்தை விட்டு வெளியேறினான்.
கலங்கிய கண்களும், வாடிய முகமுமாய் பாபி கிருஷ்ணா வெளியே வருவதைக் கண்ட கைலாஷ்,
'நேத்ராவிற்குத்தான் ஏதோ ஆகிவிட்டதோ?' என்று பயந்து அவள் அறைக்குச் செல்ல,
அறையின் வாசலிலேயே பித்து பிடித்ததைப் போல் நின்றுகொண்டிருந்த சுபத்ராவைப் பார்த்து,
"நேத்ராவுக்கு என்னாச்சு?" என்று கேட்டான்.
"அவ நல்லாதான் இருக்கா… நீ பாபி ய போய்ப் பாரு" என்று உணர்ச்சி துடைத குரலில் கூறினாள்.
"அவனுக்கு என்ன?" என்று கேட்டபடி, பாபி கிருஷ்ணா ஓடிய திசையில் ஓடிச்சென்று தேட,
அவன் ஒதுக்குப் புறமான பகுதியில் இருந்த கல்மேடையில் அமர்ந்து முகத்தை கைகளால் மூடி, உடல் குலுங்க அழுது கொண்டிருந்தான்.
அவனருகில் சென்ற கைலாஷ், "என்னாச்சு பாபி!" என்று தன் நண்பன் அழுவது பொறுக்கமுடியாமல் தோளோடு அணைக்க,
கைலாஷின் தோளில் சாய்ந்து அழுத பாபி கிருஷ்ணா,
சில நிமிடங்களிலேயே சுற்றுப்புறம் உணர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டு,
"சுபா எங்கே?" என்று கேட்க,
"அவ நேத்ரா ரூம் வாசல்ல நின்னுக்கிட்டிருந்தா."
"ச்சே என்ன மனுசன் நான்? ஓகே! நீ போய் அவள இங்க கூட்டிட்டு வந்துடு" என்றதும்,
"உங்களுக்கு என்ன பைத்தியமா டா புடிச்சிருக்கு? அங்க நேத்ரா நல்லா இருக்கானு சொல்றீங்க… சுபா என்னடான்னா பாபிய போய் பாருங்கிறா. நீ என்னடான்னா சுபாவ போய் பாருங்கிற. என்னதான் நடக்குது?" என்றதும்,
"எப்படிச் சொல்றது… கைலாஷ்! நாம் நினைச்ச மாதிரி நேத்ரா என்னை விரும்பலையாண்டா" என்று பாபி கிருஷ்ணா கூறியதும்,
"திக்" என்று தூக்கிப் போட்டு கைலாஷ் நிமிர, சில நிமிடங்கள் கழித்தே,
பாபி கிருஷ்ணாவும் நேத்ராவை விரும்பியது கைலாஷ்க்குத் தெரியவந்தது.
'அடக்கடவுளே! அவ என்னை விரும்புவது தெரியாம பாபி அவளை விருப்பியிருக்கான் போலயே… இப்போ என்ன பண்ணுவேன்?' என்று கலங்கிய கைலாஷ்,
"சரி! சரி!" என்று பாபி கிருஷ்ணாவின் முதுகைத் தடவிக் கொடுத்தவாறு, "எனக்கு… என்ன சொல்றதுன்னு தெரியல… ஆனா, உனக்கெப்படி இந்த விசயம் தெரியும்?"
"அப்படீன்னா, உனக்கு முன்னாடியே அவ யாரை விருப்புறான்னு தெரியுமா கைலாஷ்?"
தலையைக் குனிந்து, "தெரியும் பாபி! ஆனா நீ அவளை விரும்புவது எனக்குத் தெரியாது… சாரி… வந்து…"
"நீ எதுக்குடா சாரி சொல்ற? சரி! நீ போயி சுபாவ இங்க கூட்டீட்டு வா!"
"எதுக்கு?"
"அவ மனசொடிஞ்சு போயிட்டா…"
"அவ எதுக்கு மனசொடிஞ்சு போனா?"
"என்ன கைலாஷ்? உனக்கு அதுவும் தெரியாதா? சுபா, விபாவ விரும்புறாளே!"
"ஆமா! அதுக்கென்ன இப்ப?"
"ஏய்! என்னடா இப்படி கேட்குற? என்னதான் சுபத்ராவும், நேத்ராவும் க்ளோஸ் ஃபிரண்ட்ஸ்சா இருந்தாலும், தான் விரும்புற விபாவ, அவ தோழி நேத்ராவும் விரும்புறத எப்படித் தாங்கிக்க முடியும்?"
"நீ ஏன்டா உளர்ற? என்ன சொல்ற நீ?" என்று எழுந்து நின்று விட்டான் கைலாஷ்.
"விபாவ, காதலிக்கிறதா நேத்ரா, அவன்கிட்ட சொன்னத சுபாவும் கேட்டுட்டா டா!"
"பாபி! என்ன சொல்ற? நேத்ரா விபாவ விரும்புறாளா?" என்று கேட்ட கைலாஷ் இடிந்து போய் அப்படியே அமர,
'இவன் ஏன் இப்படி உட்கார்ந்துட்டான். நேத்ரா விபாவ விரும்புறது தெரியும்னு சொன்னானே?' என்று புரியாமல் பார்த்த பாபி கிருஷ்ணா,
"சரி நீ ஏதோ குழப்பத்துல இருக்க போல… நீ இங்கேயே இரு! நான் போயி சுபாவ கூட்டிட்டு வர்றேன்" என்று கூறியதை கவனிக்கும் மனநிலையில் இல்லாத கைலாஷ், தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
அதற்கு மேல் அங்கு இருந்தால், 'அவனும் நேத்ராவை விரும்பியது நண்பர்களுக்குத் தெரிந்துவிடும்' என்று எண்ணி, மருத்துவமனையை விட்டு வெளியேறினான்.
பாபி கிருஷ்ணா வருவதைப் பார்த்த கார்த்திக், "என்ன பாபி நீ மட்டும் வர்ற? சுபா எங்கே?" என்று கேட்க,
"சுபா இங்கதானே நின்னுக்கிட்டிருந்தா"
"என்னாச்சு டா ஏன் எல்லோருமே ஒரு மாதிரி முழிக்கிறீங்க? எனிதிங்க் ராங்க்? நேத்ராவ பார்த்துவிட்டு வெளியே வந்த விபாவும் எங்க போனான்னு தெரியல."
'ஒரே ஒரு காதல் தங்களுடைய பல வருட நட்பை உடைத்து விட்டதோ?' என்று எண்ணிய பாபி கிருஷ்ணாவும், ஒன்றும் பேசாமல் மருத்துவ மனையை விட்டு வெளியேறினான்.
பாபி கிருஷ்ணாவின் முகம் போன போக்கையும், அவன் திரும்பி, மருத்துவமனையை விட்டு வெளியே செல்வதையும் பார்த்த கார்த்திக்கிற்கு,
'ஏதோ சரியில்லை!' என்பதை உணர்த்த,
கௌதமியை மருத்துவ மனையில் விட்டுவிட்டு தன் வீட்டை நோக்கி காரை பறக்க விட்டார்.
வீட்டு வாசலில் விபாட்சுவின் செருப்பு, மூலைக் கொன்றாய் விசிறியடித்துக் கிடக்க, அதை ஒழுங்காக வைத்துவிட்டு, அவன் அறைக்குச் சென்றவர் அதிர்ந்தார்.
ஆடையைக் கூட மாற்றாமல், ரெத்த கறை படிந்த அழுக்கு உடையுடன் மெத்தை மேல் விழுந்து அழுது கொண்டிருந்தான் விபாட்சு.
மகனின் நிலை கண்டு துடித்த கார்த்திக், வேகமாக மகன் அருகே அமர்ந்து, அவன் தலையை மெல்ல கோதிவிட்டு,
"என்னாச்சு விபா?" என்று ஒரு வார்த்தை தான் கேட்டிருப்பார்.
சட்டென்று எழுந்து அவர் மடியிலேயே படுத்து அழ ஆரம்பித்தான்.
தன் அருமை மகன் கண்களில் லேசாக நீர் வருவதையே பொறுக்காத கார்த்திக், அவருடைய மடியில் விழுந்து கதறி அழுவதை தாங்க முடியாமல் அவரது கண்களும் கலங்க,
"நீ இந்த அளவுக்கு வருத்தப் படத் தேவையில்லை விபா… உனக்கு நான் இருக்கேன்… தீர்க்க முடியாத பிரச்சனைனு எதுவும் இல்ல… என்ன விசயம்?" என்று கேட்க,
"எல்லாமே தப்பாயிடுச்சுப்பா…"
"என்ன தப்பாயிடுச்சு?"
"நேத்ரா… நேத்ரா…"
"நேத்ரா?..."
"அவ… அவ… என்னை விரும்புறதா சொன்னா."
"எப்ப? இன்னைக்கா?"
"ம்ம்"
"அதுசரி… இதுக்கு ஏன் இப்படி அழற? எனக்குப் புரியல…"
"அப்பா… பாபி… நம்ம பாபி நேத்ராவ விரும்புறான்ப்பா… இன்னைக்கு அவன் முன்னாடியே நேத்ரா எங்கிட்ட… அந்த நேரத்துல நான் என்ன பண்ணீருக்கனும்ப்பா? அவளும் என் ஃபிரண்ட் ப்பா… அவளுக்கு ஆக்ஸிடென்ட் ஆகாம, உடம்பு நல்லா இருக்கும்போது இப்படி நடந்திருந்தாலுமே
என்னால அவள கடுமையா பேச முடியாது."
"ஏன் கடுமையா பேசனும்? நிதானமாக புரிய வைக்கலாமே"
'அதுக்கு வாய்ப்பிருக்கா?' என்று எண்ணிய விபாட்சு,
"பாபி முகத்துல நான் எப்படி ப்பா முழிப்பேன்."
"அவன் உன்னை புரிஞ்சுப்பான் விபா"
"அது விசயமில்லப்பா… இனி பழைய மாதிரி என்னால பாபிட்டயும், நேத்ராட்டயும் பழக முடியுமா? தெரியல."
"அதெல்லாம் ஒன்னும் ஆகாது… நீ ரிலாக்ஸ்டா இரு." என்று ஆறுதல் படுத்தி விட்டு,
தன் அறைக்கு வந்த கார்த்திக், விபாட்சுவிற்கும் பாபி கிருஷ்ணா விற்கும் பொது நண்பனான கைலாஷிடம் நிலமையை விசாரிக்க எண்ணி ஃபோன் செய்தார்.
அவன் எடுக்கவில்லை…
அடுத்து பாபி கிருஷ்ணாவுக்கு கால் செய்ய, அதை எடுத்த பாபி கிருஷ்ணா,
"சொல்லுங்க ப்பா"
"பாபி… நான் உங்கூட பேசனும்."
விபாட்சு நடந்த விவரங்களை அப்பாவிடம் சொல்லிவிட்டான் போல என்று சிறிது நேரம் அமைதியா இருந்த பாபி கிருஷ்ணா,
"விபா எப்படி இருக்கான் ப்பா?" என்று எழுப்பாமல் குரலில் கேட்க,
"ஓ… அவ்வளவு தூரம் தள்ளிப் போயிட்டியா பாபி?"
"அப்பா… இல்லப்பா… என்னால… எப்படி?..." என்று அழவும்,
"பாபி இதை விபாவும் எதிர்பார்க்கல"
"அது நல்லா தெரியும் ப்பா… அவன் நேத்ராவ ஃபிரண்ட் டா தான் நினைச்சான்."
"அப்புறம் என்ன?"
"கொஞ்சம்… கொஞ்ச நாள் எங்காவது போயிட்டு வரலாம் னு இருக்கேன்."
"அதாவது விபாவ இந்த நிலையில தனியா விட்டுட்டு விலகிப் போற"
"இல்ல ப்பா… ஆனா என்னால… நேத்ராவ…
தள்ளி…"
"விபா என்ன ஆவான்? அவனாலதான் நீ இப்படி ஆயிட்டேனு நினைக்க மாட்டானா? கைலாஷும் ஆஸ்பத்திரியில இல்ல தெரியுமா?."
"எங்கள நெனச்சு கைலாஷ் கவலைப் படுறான் போல ப்பா."
"சரி… சீக்கிரம் வரப் பாரு. நேத்ராவை, விபா விரும்பவில்லைனு தெரிஞ்சா, நேத்ரா மனசு கஷ்டப்படும். இல்லையா? அட்லீஸ்ட் அவளுக்கு ஆறுதல் சொல்றதுக்காகவாவது நீ இருக்க வேண்டாமா?"
"ம்ம்"
"நாம விரும்புற பொண்ணு கஷ்டத்தில் இருக்கும் போது உதவுறதுக்கு பேரும் காதல் தான் பாபி."
"ம்ம்"
"இனி நேத்ரா ஆஸ்பத்திரியில் இருந்து வரும் வரை விபா ஆஸ்பத்திரிக்கு போவான்னு நினைச்சியா? ஆஸ்பத்திரியில் நேத்ராவுக்கு துணையா இருக்கவாவது வாடா. நீயும் இல்லாம, கைலாஷும் இல்லாம, சுபாவும் இல்லாம எப்படி டா? இந்த நேரத்தில் தான் டா நேத்ராவிற்குத் துணைக்கு இருக்கணும்?"
"சரிங்கப்பா நான் ஆஸ்பத்திரிக்கு போறேன்"
"வெரி குட்! நான் கைலாஷுக்கும், சுபாவுக்கும் போன் பண்ணிட்டு, உன்ட்ட பேசுறேன்."
"ம்ம்"
அடுத்து கைலாசுக்கு போன் செய்வதற்காக கார்த்திக் ட்ரை பண்ணும்போதே, கைலாஷ் கார்த்திக்கு போன் செய்தான்.
"சொல்லுங்கப்பா!"
"உனக்கு என்னடா ஆச்சு? யாருமே ஹாஸ்பிடல்ல இல்ல. பாபி, நீ, சுபா மூணு பேரும் இல்லாமல் நேத்ராவுக்கு ஒரு மாதிரி இருக்காதா?"
"விபா எப்படி இருக்கான்?"
"அவன்… அவன் பாபிய நினைச்சுத்தாண்டா கவலைப்படுறான். பாபிக்கு ஃபோன் பண்ணி ஒரு மாதிரி சமாளிச்சு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிட்டேன். அதான் உனக்கு ஃபோன் பண்ணலாம்னு."
"இதோ கிளம்புறேன் ப்பா. ஆனா சுபாவ எப்படி சமாளிக்கப் போறோம்னு தெரியல… அவ கொஞ்சம் அடம் ப்பா."
"அவ கிட்டயும் பேசுறேன்"
"நம்ம இதுல எப்படிப்பா பேச முடியும்? விபா தான் எப்படியாவது சமாளிக்கணும்."
"அப்படிங்கிற"
"ஆமாம்பா! விபாவும், சுபாவும் தானே ஒருத்தருக்கு ஒருத்தர் லவ் பண்ணுறாங்க. இந்த லெட்சணத்துல, நேத்ரா, விபாட்ட ப்ரொபோஸ் பண்ணும்போது, அத சுபா கேட்டுட்டா. அவள எப்படி சமாளிக்கிறதுனு எனக்கு சுத்தமாக விளங்கல. நல்லவேளை நீங்க பாபிய சமாதானம் பண்ணிட்டீங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா. மறுபடியும் நாங்க அஞ்சு பேரும் ஒண்ணா சேர்ந்து…" என்று கூறிய கைலாஷின் குரல் நடுங்குவதைக் கேட்ட கார்த்திக்,
"அத பத்தி எல்லாம் கவலைப்படாத. எல்லாம் நம்ம மனச பொறுத்த விஷயம். என்ன ஆனா என்ன? நம்ம ஃபிரண்டு தானே அப்படின்னு நினைச்சா, ரொம்ப ஈசியா சில விஷயங்களைத் தாண்டி வர முடியும்." என்ற கார்த்திக் குரலில் ஒரு சின்ன வருத்தம் இருந்தது.
ஏனென்றால் கைலாஷ் கூறியபிறகு தான் கார்த்திக்கு, விபாட்சுவும், சுபத்ராவும் ஒருவரை ஒருவர் விரும்புவது தெரிந்தது.
'இந்த சிச்சுவேஷன்ல, தான் சுபாவிடம் எப்படிப் பேசுவது? என்ன சொல்ல முடியும்? சரி வருமா?' என்று யோசித்தவர்,
'இந்த விஷயத்தில் சுபாவும், விபாவும் கலந்து பேசிதான் முடிவு எடுக்க வேண்டும்' என்று விபாட்சுவின் அறைக்குச் சென்று,
"என்ன செய்யலாம்னு அமைதியா யோசிச்சா வழி கிடைக்கும். அம்மா ஆஸ்பத்திரியில் இருக்கா. நான் ஆபீஸ்க்கு போறேன் என்று கூறிக் கிளம்பிவிட்டார்.
நேத்ரா தவிர, மற்ற நால்வருக்கும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதற்கு நினைக்கும்போதே மிகவும் கஷ்டமாக இருந்தது.
வார்த்தைகள்: 1085
விலோசனம் தொடர்ந்து வரும்…
❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️
2 Comments
Next ud epa poduvinka sis..... Waiting.....
ReplyDeleteNext ep sis...waiting so long
ReplyDelete