உனது விழியில் எனது விலோசனம்… அத்தியாயம்🌟17



உனது விழியில் எனது விலோசனம்…


அத்தியாயம்🌟17


கழிவறையின் ப்ளாஸ்டிக் கதவில் நெருப்பு கொழுந்து விட்டு எரிய,


ஆத்மா ஆக்ரோஷமாகப் பார்த்துக்கொண்டிருந்தது.


கூகை "காப்பாத்துங்க! காப்பாத்துங்க!" என்று சப்தம் போட,


அக்கம்பக்கத்து வீட்டினர் ஓடிவந்து நெருப்பை அணைக்க நெருங்கும்போது,


ஆத்மா "ம்ம்ஹுஹுஹும்ம்" என்றஉறுமியதும் பலத்த காற்று வீசி, தூசியையும் மண்ணையும் வாரி அள்ளி, காப்பாற்ற வந்தவர்கள்மீது எரிய,


"என்ன திடீர்னு இப்பிடிக் காத்தடிக்குது?" என்று கூறியபடி கூகையைக் காப்பாற்ற முயற்சித்தனர். 


நெருப்பை அணைக்க அவர்கள் ஊற்றிய தண்ணீரை, ஆத்மா "உஃப்" என்று ஊதிவிட்டதும், தண்ணீர் ஊற்றியவர்கள் மீதே விழுந்தது.


எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறினாலும் கழிவறையை யாராலும் நெருங்கமுடியவில்லை…


"இந்தக் கூகையை என்னிடமிருந்து யாராலும் காப்பாற்ற முடியாது" என்று ஆக்ரோஷமாகக் கத்திக்கொண்டு கோபமாக அவர்களை ஆத்மா உறுத்துப் பார்த்ததிலேயை காப்பாற்ற வந்தவர்கள் மீதே நெருப்பு பற்றிக்கொண்டது…


ஆத்மா கோபமாகத் திரும்பிய வேகத்தில் எதிர்க்காற்று பலமாக வீசி அக்கம்பக்கத்தினரை தள்ளிக்கொண்டு போக,


'கூகை இறந்துவிட்டால் தேவியின் கண் பறிபோனதற்கு யார் யாரெல்லாம் காரணமென்று எவ்வாறு அறிவாய்? மறுபடியும் தெவியின் கண்ணைக் கெடுத்துவிடமாட்டார்களா? உண்மை முழுக்க வெளியே தெரியும்வரை கூகையை விட்டுவை' என்று ஆத்மாவின் உள்ளுணர்வு எடுத்துரைக்க,


அப்படியே சும்மா விடவும் மணமின்றி, கூகையை நோக்கி ஆத்மா "உஉஃப்" என்று ஊத, கூகையின் உள்ளங்கைகள் நெருப்பில் வெந்தது. 


கூகை அலறிய அலறலில் அக்கம்பக்கத்தினர், எதிர்காற்றை மீறிச் சென்று கதவில் தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைத்தனர்.


பிறகு மர கட்டைகளால் கதவைத் தள்ளித் திறந்தவர்கள், கூகையைப் பார்த்து,


"ஒன்னும் ஆகலைல?" என்று விசாரிக்க,


அழுது கொண்டிருந்த கூகை தன் கைகளை முன்னோக்கிக் காட்டியது.

.

மணிக்கட்டுக்குக் கீழே உள்ளங்கை, புறங்கை, விரல்கள் போன்றவை மேல் தோல் இல்லாமல் நன்றாக வெந்து இருக்க,


வேகமாக ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


'தேவிக்குச் சரியாகும் வரை இந்தக் கூகையை மருத்துவமனையிலேயே வைக்கும்படி செய்யனும்' என்று முடிவெடுத்த ஆத்மா, அடுத்த நொடி அரவிந்த் கண் ஆஸ்பத்திரியில் தேவியின் படுக்கை அருகில் இருந்தது.


தேவி படுக்கையில் அமர்ந்திருக்க, அவளது அம்மா, படுக்கையை ஒட்டியிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு, அவர்கள் வசிக்கும் தெருவில் நடக்கும் விசயங்களை நகைச்சுவையுடன் சொல்லிக் கொண்டிருக்க,


 தேவி சிரித்துக் கொண்டிருந்தாள்.


'எவ்வளவு மனோதிடம் இவளுக்கு? இப்பக்கூட, கண்ணு நிச்சயமா தெரிஞ்சுடும்னு டாக்டர்ஸ் சொல்லல. இருந்தும் அதைப் பற்றி யோசிக்காம, இந்த நிமிஷம் சந்தோசமா இருக்கிறதுக்கு ஒரு தனி தைரியம் வேணும்.' என்று நினைத்த ஆத்மா,


அவர்களோடு அமர்ந்து தேவியின் அம்மா பேசுவதைக் கேட்டுச் சிரித்துக்கொண்டிருந்தது.


சிறிது நேரத்திற்கெல்லாம் மருத்துவமனையின் உள்ளே யாரோ தேவியைப் பற்றிப் பேசுவது கேட்டதும் அந்த இடத்திலிருந்து மறைந்து தேவியை விசாரிக்கும் இடத்திற்கு வந்து நின்றது ஆத்மா.


அங்கே ஒரு முப்பது வயது ஒத்த ஒரு ஆடவன் செவிலிப்பெண் ஒருவரிடம் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். 


வெறும் வெட்டி அரட்டைதான் ஓடிக்கொண்டிருந்தது. சிறிது நேரம் அங்கு நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆத்மாவிற்கு,


"இவர்கள் வேறு எதையோ பேசியிருக்கிறார்கள் என்று நினைத்து மீண்டும் தேவியின் அறைக்குச் செல்ல முனைய, 


அந்த ஆடவன், "இப்பயாவது என் மேல நம்பிக்கை இருந்தா எனக்கு இந்த உதவி செய்யலாமே!" என்று கெஞ்சும் தொணியில் கேட்க,


"தேவியோட ட்ரீட்மென்ட் பத்துனதுதானே?" என்று அச்செவிலிப்பெண் கேட்க,


"ஆமாம்" என்று தலையசைத்தவனைக் கூர்ந்து பார்த்தது ஆத்மா.


யார் இவன்? இவன் ஏன் கூகைக்கு உதவுகிறான்? என்று அவர்கள் பேசுயது முழுவதும் கவனித்த ஆத்மா அதிர்ச்சியடைந்தது.


❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️


சுபத்ரா, ஷாப்பிங் மால்லில்  விபாட்சுவும், அவனுடைய நண்பர்களும் நிற்பதைப் பார்த்து விட்டாள்.


மனதிற்குள் சாரல் அடிக்க, மீண்டும் நிமிர்ந்து விபாட்சுவைப் பார்த்தாள்.


அவன் சுபத்ராவிற்கு முதுகு காட்டி நின்றுகொண்டிருந்தான்.


விபாட்சுவைப் பார்க்கும்போது தானாக இதயம் கனிந்ததால் முகம் மலர்ந்து கனிஇதழ்கள் லேசாக விரிவதை சுபத்ராவால் தடுக்க முடிவதில்லை.


சந்தோசத்துடன் நேத்ராவைக் கூப்பிடுவதற்காக விபாட்சுவைப் பார்த்தபடியே அருகில் நின்றிருந்த நேத்ராவைக் கைகளால் தேட, அவள் கைகளுக்கு நேத்ரா சிக்கவில்லை.


அருகில் நின்று கொண்டிருந்த நேத்ராவைப் பார்க்காமல், விபாட்சுவைப் பார்த்தபடியே ஹஸ்கி வாய்ஸில், "ஹேய்… அவங்க வந்துட்டாங்க!"  என்று கிசுகிசுப்பாகக் கூறியவளுக்கு,


'இவரைப் பார்த்தாலே ஹஸ்கி வாய்ஸ் வந்துவிடுகிறதே' என்று வியக்கயில்,


கண்ணாடி வழியாக சுபத்ராவைப் பார்த்துக் கொண்டிருந்த விபாட்சு, பதறித் திரும்பினான். 


ஏனென்றால் சுபத்ராவிற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த நேத்ரா, சற்று முன் கொஞ்சம் நகர்ந்து சென்று பால்கனி வழியாகக் கீழ் தளத்தில் நடப்பவற்றை வேடிக்கை பார்க்கச் செல்ல, சுபதாவிற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த பெண்மணியிடம் சுபத்ரா முகம் சிவக்க ஏதோ சொல்வதையும், அதைக் கேட்டு அந்தப் பெண்மணி சுற்றிலும் பார்வையை ஓட்டுவதையும் கண்டதும்,


அவசரமாக சுபத்ராவை விபாட்சு நெருங்கும் நேரத்தில்,


"யார் வந்துட்டாங்க சுபா?" என்று அருகிலிருந்த பெண்மணி கேட்க,


அதிர்ச்சி அடைந்த விபாட்சு, சுபத்ராவின் அருகில் சென்றவனுக்கு அப்பெண்மணியின் வார்த்தைகள் காதில் விழவும், சுபத்ராவிடமிருந்து விலகி, எதுவும் நடக்காததுபோல் அந்த இடத்தில் இருந்த கடையில் பொருட்களைப் பார்வையிடுவதுபோல் நின்றுகொண்டு,


"யார் இந்த லேடி? சுபாவ பேர் சொல்லிக்கூப்பிடுறாங்கன்னா சுபாவுக்குத் தெரிஞ்சவங்களாத்தானிருக்கனும்' என்று எண்ணிய விபாட்சு,


'இந்த நேத்ரா எங்க? அவட்ட பேசுறதா நினைச்சு யாரோ தெரிஞ்ச லேடிட்ட சுபா எதையாவது உளறாம இருக்கனுமே' என்று தேட,


கீழ் தளத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நேத்ராவை நெருங்கி,


"ஹேய் அங்க சுபா உன்ட பேசுறதா நெனச்சு யாரோ ஒரு லேடிட்ட" என்று கூறும் போதே, திரும்பிப் பார்த்த நேத்ரா,


"அச்சச்சோ மேனகா ம்மா இங்க எப்ப வந்தாங்க?" என்று கூறிபடி சுபத்ரா அருகில் செல்லவதற்கும்,


சுபத்ரா "நிமிர்ந்து பாரு. யாருன்னு தெரியும்." கூறுவதற்கும் சரியாக இருந்தது.


உடனே சுபத்ராவின் அருகில் நின்றிருந்த லேடி நிமிர்ந்து பார்க்க, நல்லவேளையாக அங்கே நண்பர்கள் மூவருமே இல்லை.


உடனே சுதாரித்த நேத்ரா, சுபத்ரா அருகில் நின்றிருந்த லேடியிடம்,


"வாங்க ம்மா! எப்டி இருக்கீங்க? நீங்களும் வரம்போறதா சுபா சொல்லவேயில்லையே?" என்று கூறியபடி சுபத்ராவை உலுக்கி,


அம்மாவும் வர்றாங்கன்னு சொல்லவே இல்ல சுபா" என்று கூறியபடி சுபத்ராவின் தாடையைத் திருப்பி, அந்த லேடியைக் காணவைக்க,


அந்த லேடியைப் பார்த்து அதிர்ச்சியான சுபத்ரா,


"ஓ… அம்மா… நீங்களா?... எப்படி? என்ட சொல்லவேயில்ல" என்று திக்கித்திணறி எதிரில் விபாட்சு இருக்கிறானா? என்று பயந்துபோய்ப் பார்த்து,


அங்கே நண்பர்கள் மூவருமே இல்லாததால் நிம்மதியடைந்து பெருமூச்சு விட,


"நீ இங்க வர்றேன்னு என்கிட்ட சொல்லிட்டா வந்த? நேத்ராவோட ஷாப்பிங் போறதா மட்டும் தானே சொன்ன?" என்ற மேனகாவாகிய சுபத்ரா வின் அம்மா,


"யாரோ வந்திருக்காங்கன்னு கிசுகிசுன்னு சொன்னியே யாரது?" என்று கேட்க,


சுபத்ரா, 'ஆஹா… நேத்ரான்னு நினைச்சு அம்மாட்டயா பேசிட்டேன்… மாட்னடிஒ மவளே…' என்று  என்ன சொல்வதென்று திருதிருவென விழித்தாள்.


அவள் நிலைமையைப் புரிந்து கொண்ட நேத்ரா, "எங்க காலேஜ் ப்ரொஃபெசர்ஸ் வந்திருக்காங்க ம்மா, அவங்களத்தான் சொன்னா." என்று சமாளித்தாள்.


'உடனே மேனகா பேசாமல் இருந்து விடுவார்கள்' என்று நினைத்து நேத்ரா அப்படிச் சொல்ல, 


ஆனால் அவரோ, மிகவும் உற்சாகமாகி, "உங்க ப்ரொஃபெசர்ஸ் வந்திருக்காங்களா? எங்கே? எங்கே?" என்று அந்த மால்ஐச் சுற்றிலும் பார்வையால் தேடியபடி கேட்க,


ஆடிப் போய்விட்டார்கள் நேத்ராவும் சுபத்ராவும்.


'அடக்கடவுளே! இது என்ன புது வம்பு?' என்று இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் பீதியுடன் பார்க்க,


தோழிகளின் நிலை புரியாமல், "எங்கப்பா? எனக்கு இன்ட்ரோ பண்ணக் கூடாதா?" என்று ஆவலாகக் கேட்டார் மேனகா.


சுபத்ரா அதிர்சியிலும் பயத்திலும் உறைந்து நின்று விட்டாள். 


நேத்ரா கொஞ்சம் உஷாராகி, இரண்டு கடைக்கு அடுத்து நின்றுகொண்டு தங்களையே தவிப்புடன் படுத்துக் கொண்டிருந்த மூன்று நண்பர்களையும் நோக்கிச் சென்றாள். 


அதைப் பார்த்த சுபத்ராவிற்கு சப்த நாடியும் ஒடுங்கியது.


'அடிப்பாவி! என்ன செய்யப்போற?' என்று அரண்டுபோய் நின்றிருந்தாள்.


நேத்ரா தங்களை நோக்கி வருவதைப் பார்த்த நண்பர்களுக்கு, ஏதோ பிரச்சனை என்று புரிய, 


தங்களின் பார்வையைக் கடையில் இருக்கும் பொருட்கள்மீது படரவிட்டனர்.


நேராக நண்பர்களிடம் சென்ற நேத்ரா திரும்பிப் பார்க்க, மேனகா நேத்ராவையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.


'ரொம்ப சந்தோசம்… பார்த்துக்கிட்டே இருக்காங்களே!'… என்று நினைத்தபடி மேனகாவைப் பார்த்து "ஈஈ" என்று இழித்துவிட்டு,


நண்பர்களிடம், "அவங்கதான் சுபத்ராவோட அம்மா… ப்ரொஃபெசர் வந்திருக்காங்கன்னு சொல்லி மாட்டிக்கிட்டோம்..‌. ரொம்ப நேரம் இங்க நிக்கமுடியாது… வந்து சமாளிங்க" என்று கூறிவிட்டு,


'மேனகாவிடம் சுபத்ரா வேற எதையும் உளறிவிடக்கூடாதே' என்று வேகமாக சுபத்ராவை நோக்கி ஓடினாள்.


இங்கே நண்பர்களுக்கோ தலையைப் பிச்சுக்கலாம் போன்று இருந்தது.


"ஏய் என்னடா சொல்லிட்டுப் போறா?" என்று பாபி கிருஷ்ணா கேட்க,


"அது தெரியாமத்தானே முழிச்சிட்டு நிக்கிறேன்."


"உன்ட்டதானடா சொன்னா"


"ஏன்? நீயும் பக்கத்துலதான நின்னுட்டிருந்த" என்று விபாட்சு கடுப்படிக்க,


"அவ பேசுறதெங்கடா கேட்டேன். அவ பக்கத்துல வந்ததும் எனக்கு ஐம்புலனும் ஆட்டங்கண்டுடுச்சே!' என்று நினைத்தபடி பாபி கிருஷ்ணாவும், கைலாஷ்சும் விழிக்க,


அவர்கள் இருவரையும் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டு,


"அங்க நிக்கிறவங்க சுபாவோட அம்மாவாம்" என்று சொல்லி முடிக்கும் முன் தலைசுற்றித் தடுமாறிய பாபி கிருஷ்ணாவை தாங்கிப் பிடித்த விபாட்சு,


"அதுக்குள்ளயா? இனிதான் இருக்கு நமக்கு' என்று மேலும் பயமுறுத்தியதும்,


"ஙே" என விழித்தனர் பாபி கிருஷ்ணாவும், கைலாஷ்சும்.


"சுபாவோட அம்மாட்ட ப்ரொஃபெசர்னு ஏதோ உளறிக்கொட்டியிருக்காங்க… முழுசாவும் சொல்லாம ஓடிட்டா" என்று கையால் நெற்றிப்பொட்டை சுரண்டுவதுபோல் கண்களைப் பாதி மறைத்து  ஜாடையாக அவர்களைப் பார்த்தபடி கூறினான்.


"ஏன்டா இந்த அம்மாக்கள்லாம் நமக்குக் காலேஜ் இருக்கிற அன்னைக்குத் தானே ஊர்சுத்தப் போவங்க?" என்று பாபி கிருஷ்ணாவும்,


"அம்மாவா? அம்மாவயாடா கூட்டிட்டு வந்திருக்குக இந்தப் பக்கிக?" என்று பதற,


"இல்லல்ல… அவங்களுக்கே தெரியலனுதான் நினைக்கிறேன். வாங்க… போயி… " என்று நண்பர்களையும் அழைத்துக் கொண்டு தோழிகளை நோக்கிச் செல்ல,


"ப்ரொஃபெசர் வந்திருக்காங்கன்னா? யார சொல்லீருக்கீங்க? நாங்களா?" என்று வாட்ஸ்அப் ல் நேத்ராவிடம் விபாட்சு கேட்க,


"அது உங்க விருப்பம்" என்று பதில் வந்தது.


"அடிங்க்… என்னடா இவ?" என்று தன் நண்பர்களிடம் வாட்ஸ்அப் ல் நேத்ராவுடனான உரையாடலைக் காட்ட,


"சரி… வாடா… எவ்வளவோ பார்த்து ட்டோம்… இத பண்ணிட மாட்டோமா?" என்று பாபி கிருஷ்ணா ஸ்டைலாகக் காலரை தூக்கிவிட்டபடி கேட்க,


அவனைத் திரும்பிப் பார்த்த விபாட்சு "எங்கிட்டயே என் டயலாக் கா?" என்று பற்களுக்கிடையே வார்த்தைகளைக் கடித்துத் துப்பிவிட்டு அவர்களை நெருங்கினர்.


"குட் மார்னிங்!" என்று பள்ளி மாணவிபோல் மேனகா வணக்கம் வைக்க,


"ஆன்ட்டி நாங்களும் ஸ்டூடன்ட்ஸ்தான். ப்ரொஃபெசர்ஸ் இல்ல." என்று பாபி கிருஷ்ணா உணர்ச்சி வசப்பட்டு அவசரமாக உளற,


"டேய்!!" என்று அவனைப் பார்க்கும் போதே,


"ஸ்டூடண்ட்ஸ்சா? ப்ரொஃபெசர் வந்திருக்காங்கன்னு சொன்ன?" என்று சுபத்திரைவிடம் கேட்டேவிட்டார் மேனகா.


"அக்கா நீங்க சுபத்ராவோட அக்கா வா?" என்று ஐஸ் வைத்துப் பேச்சை மாற்றுவதாக எண்ணிப் பேசிய  கைலாஷ்சை பார்வையாலயே எரித்தான் விபாட்சு.


"சமாளிக்கிறதா நினைச்சு ஏன்டா இப்படி மொக்க பண்றீங்க? கொஞ்சம் மூடுங்க… நான் பார்த்துக்கிறேன்." என்று கூறிய விபாட்சு,


"அது ஆன்ட்டி… எங்களோடதான் எங்க ப்ரொஃபெசர்ஸ்சும் வந்திருந்தாங்க… அதுனாலதான் நேத்ரா எங்கள்ட்ட வந்து கேட்டாங்க." என்று ஒரு மாதிரி பூசி மெழுகியவனிடம்,


"நீங்களும் சுபா, நேத்ரா க்ளாஸாப்பா?" என்று மேனகா கேட்கவும்,


"ஆமாம்" என்று பேச்சை முடிக்க எண்ணி விபாட்சு வாயைத்திறக்கும்முன்,


"இல்ல ஆன்ட்டி நாங்க பி.ஜி ஸ்டூடண்ட் ஸ்" என்று மீண்டும் முந்தினான் பாபி கிருஷ்ணா.


"டே…ய்" என்று பொங்கி வந்த கோபத்தை அடக்கி,


"அப்போ உங்களுக்கு எப்படி நேத்ராவ தெரியும்? பிஜிக்கும் யூஜிக்கும் ஒரே புரஃபசரா?" என்ற மேனகாவை, 'கொடஞ்சு கொடஞ்சு கேள்வி கேட்டாதான் பெண்ணைப் பெத்த அம்மாவா?' என்று போலியாகச் சிரித்து,


"இப்ப வந்து பேசினாங்கள்ல…  அப்பதான் அவங்க பேர் சொன்னாங்க ஆன்ட்டி." என்று விபாட்சு நிறுத்த, 


"அப்புறம், புரஃபசர் பத்தி கேட்டாங்க விபா!" என்று எடுத்துக்கொடுத்தான் கைலாஷ்.


"அஅஅஅ… ஏன்டாஆஆ… இங்கிருந்து நகர்றவரை வாயத்திறந்த செத்த" என்று கைலாஷ்சை பற்களுக்கிடையே வார்த்தைகளைக் கடித்துத் துப்பிவிட்டு, மேனகாவைப் பார்க்க,


அவரோ விபாட்சுவின் பதிலுக்காகக் காத்திருந்தார்.


'நினைச்சேன்' என்று நெற்றியில் பூத்த வியர்வையைத் துடைத்தபடி, 


வேறு வழி இல்லாமல், "எங்களுக்கு மெயின் சப்ஜக்ட் ஒன்னுதானே? சோ ப்ரொஃபெசரும் ஒரே… ஹி...ஹி" என்று சமாளித்துவிட்டு,


"சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் வெளிய போனாங்க" என்று தோழிகளிடம் அவசரமாகச் சொல்லிவிட்டு,


"வாங்கடா… வாங்கடா என்று வேகமாக விலகிச்சென்ற விபாட்சுவை,


எல்லோரும் சேர்ந்து மாட்டிவிட்டும் எவ்ளோ அழகா சமாளிச்சிட்டான் சூப்பர் விபா!"  என்று விபாட்சு போன வழியையே நேத்ரா பார்த்துக்கொண்டிருக்க,


ஆனால் நண்பர்கள் சென்ற பிறகுதான் மேனகா முகத்தில் சந்தேக ரேகை தெளிவாக ஓடியது…


ஏன்?


அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!

விலோசனம் தொடர்ந்து வரும்…

❣️👁️❣️👁️❣️👁️❣️👁️❣️



Post a Comment

0 Comments