சிக்கன் 65
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 300 கிராம் (எலும்பில்லாத)
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி தனியா தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி முட்டை - 1
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி சோள மாவு - 2 மேசைக்கரண்டி
ஃபுட் களர் - 1 சிட்டிகை (விரும்பினால்)
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
பூண்டு நறுக்கியது - 5 சிறியது
இஞ்சி - பூண்டின் அளவிற்கேற்ப
பச்சை மிளகாய் - 5 கீறியது
கறிவேப்பில்லை - 1 இணுக்கு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் சிறிதாக நறுக்கிய எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் எடுத்துக் கொள்ளவும்.
2. இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து பிசையவும்.
3. அடுத்து இதில் ஒரு அடித்த முட்டை போட்டு கலந்து கொள்ளவும்.
4. இறுதியாக இதில் அரிசி மாவு, கடலை மாவு மற்றும் விரும்பினால் ஒரு சிட்டிகை அளவு ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
5. சிக்கனை 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
6. ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, ஊறிய சிக்கன் துண்டுகளை மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
7. அடுத்து ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, இதில் பூண்டு, இஞ்சி, கீறிய மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கி, இதனுடன் பொரித்த சிக்கன் துண்டுகளை போட்டு கிளறவும்.
0 Comments