சுந்தரகாண்டம்
எளிய வடிவில்
இராமாயண காவியத்தின் ஐந்தாவது காண்டம் சுந்தரகாண்டம்...
மகிமை வாய்ந்த சுந்தரகாண்டத்தை முழுவதும் பாராயணம் செய்ய எளிய தமிழில் விரிவான வகையில் இன்னொரு பதிவில் கொடுத்திருக்கிறேன். அதன் லிங்க் விரைவில்…
இந்தப் பதிவு சுந்தரகாண்டத்தை மிகக் குறைந்த நேரத்தில் படிக்கக்கூடிய ஒரு வழியாகும்.
சுந்தரகண்டம் கேட்பதையெல்லாம் அள்ளித்தரும் கற்பக விருட்சமாக, கொட்டிக்கொடுக்கும் காமதேனுவாக பல கோடி புண்ணியத்தையும் தேடித்தருவதாக அமைந்துள்ளது.
இந்த சுந்தர காண்டத்தை பாராயணம் செய்பவர்களுக்கு நினைத்தது நடக்கும். நோய் நொடிகள் தீரும். திருமண தடை விலகும். தம்பதிகள் ஒற்றுமை ஏற்படும். சுகப்பிரசவம் நிகழும். மழலைச் செல்வம் மடியில் தவழும். மனதுக்குப் பிடித்த நிறைவான வேலை கிடைக்கும். கிடைத்துள்ள வேலையில் உயர்வு கிடைக்கும். பெயரும் புகழும் பெருகும். எதிர்ப்பே காணாது போய்விடும் ஆயுள், ஆரோக்கியம், சந்தானம், சம்பத்து, தனம், தானியம் முதலிய சகல செல்வமும் பயன்களும் உங்களைத் தேடி வந்தடையும். நவகிரக தோஷம், ஏழரை சனி, அஷ்டமசனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல விடிவு காலம் பிறக்கும்.
குறிக்கோளை விரைவாக அடையலாம். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். கடவுளை விரைவாக நெருங்கும் சூழலையை நமக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே சுந்தரகாண்டம்.
பாராயணம் செய்வதன் பலன்களை இப் பதிவின் ஆரம்பத்திலேயே கூறியது முழு நம்பிக்கையில் நீங்கள் பாராயணம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில்தான். இப்பொழுது சுந்தரகாண்டத்தை பற்றி பார்ப்போம்.
கம்பராமாயணத்தில் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் 6 காண்டங்கள் இருக்க, இதில் சுந்தரகாண்டத்திற்க்கு மட்டும் எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?
சுந்தரகாண்டம் காவியத்துக்குள் ஒரு காவியம். அதனால்தான் இராமாயணம் முழுவதும் பாராயணம் பண்ண சக்தியும் அவகாசமும் இல்லாதவர்கள், சுந்தர காண்டத்தை மட்டும் பாராயணம் செய்கிறார்கள்.
பாராயணம் என்பது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்டது. அப்படி ஒரு நம்பிக்கையை நமக்கு கொடுப்பது ‘நாம’ மகிமை ‘ராம நாம’ மகிமை.
சுந்தரகாண்டத்தின் ஆரம்பத்திலேயே ராமபிரானை விட ராம நாமம் சாதிப்பதை அனுமன் அனுபவித்து நமக்கு காட்டி விடுகிறார்.
சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் தோல்வியே இருக்காது. ஏனென்றால் அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயன் இதுவரை தோல்வியை சந்தித்தது இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ராமாயணத்தின் கதை முழுவதுமே பெரும்பாலும் சுந்தரகாண்டத்தில் அடங்கி விடுவதால் பிரச்சினைக்காக நாம் தேடும் விடையும் இதில் கிடைத்துவிடுகிறது.
இந்த சுந்தரகாண்டத்தை ‘ராமநவமி’ தினத்திலிருந்து பாராயணத்தை தொடங்குவது மிகவும் சிறப்புடையதாக அமைகிறது.
பாராயணம் செய்யும் முறை
காலை வேளையில் எழுந்து, குளித்து, சுத்தமான பின்பு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து அமைதியான சூழ்நிலையில், சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கலாம்.
ராமநவமி அன்று ராமருக்கு துளசி மாலை சாத்தி, அனுமனுக்கு வெண்ணெயை நைவேத்தியமாக படைத்து, முடிந்தால் வடைமாலை சாத்தி சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்வது மிக அற்புதமான பலன்களைத் தரும்.
தினம்தோறும் சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்யும்போது நெய்வேத்தியம் செய்து வைக்க முடியாதவர்கள் ஒரு செம்பில் தண்ணீர் வைத்து, அதில் இரண்டு கற்கண்டுகளைப் போட்டு நெய்வேதியமாக வைத்துக் கொள்ளலாம்.
வீட்டிலிருக்கும் ஏதாவது ஒரு பழம் அல்லது சர்க்கரை சேர்த்த பால் இவற்றை நைவேத்தியமாக வைத்து பாராயணம் செய்யலாம்.
கர்ப்பிணி பெண்கள் சுந்தரகாண்டத்தை தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் அவர்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை தெய்வ கலாட்சம் நிறைந்த குழந்தையாக பிறக்கும் என்பது நம்பிக்கை.
நீங்கள் சுந்தர காண்டத்தை பாராயணம் செய்யும் போது உங்கள் அருகில் ஒரு சிறிய ஆசனமோ அல்லது அமரும் வகையில் ஒரு பலகையையோ போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
ஏனென்றால் நீங்கள் பாராயணம் செய்வதைக் கேட்பதற்கு உங்கள் வீட்டிற்கு ஹனுமன் கட்டாயம் வருகை தருவார் என்பது ஐதீகம். ஏனென்றால் ராமநாமம் உச்சரிக்கும் இடத்திலெல்லாம் அனுமன் வராமல் இருக்க மாட்டார்.
சுந்தரகாண்டத்தில் ஹனுமனின் லீலைகளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ராமாயணத்தில் பெரிய திருப்பம் வருவதற்கு காரணமாக இருந்தவர் ஹனுமன் தான்.
செய்யக் கூடாதவை:
பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.
சுந்தரகாண்டத்தை உச்சரித்து விட்டு அசைவ சாப்பாட்டை சாப்பிடக்கூடாது.
‘ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம’
என்று அனுமனே ராமபிரானுக்கு பாடிய மந்திர நாம ஜபத்தை இந்த பாராயணத்தை ஆரம்பிக்கும் முன்னும், முடித்த பிறகும் பத்து தடவை வாய்விட்டு அல்லது மனதிற்குள் மனதார கண்ணை மூடிக்கொண்டு தியானித்து சொல்லுங்கள்….
அறிந்தோ அறியாமலோ மின்சார விசையில் கை வைத்தால் எப்படி மின்விளக்கு ஒளிர தொடங்கி வெளிச்சம் பரவுகிறதோ அப்படியே பொருளறிந்து படித்தாலும் அறியாமல் படித்தாலும் அந்த ஒளி அதிர்வலைகள் உரிய பலனை நமக்கு தரத்தான் செய்யும் விசையை அமுக்கினால் அது மின் கம்பி மூலம் எப்படி விளக்கை எரிய வைக்கிறது என்ற விஞ்ஞானம் தெரியாமல் இருக்கலாம் நமக்கு ஆனால் விசையை அமுக்கினால் விளக்கு எரியும் என்ற அடிப்படை நம்பிக்கை இருப்பது தான் முக்கியம் அதேபோல் இந்த பாராயணத்தை சொன்னால் கேட்டது கிடைக்கும் என்ற அடிப்படை நம்பிக்கையோடு ஆரம்பியுங்கள் எண்ணங்கள் மிக வலிமையானவை நல்லதையே எண்ணி நம்பிக்கையோடு படியுங்கள் நல்லது நிச்சயம் நடக்கும்.
"ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம"
சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து பலன் பெற முடியாதவர்கள், இந்தப் பாடலை உச்சரிப்பதன் மூலம் சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்த பலனைப் பெறமுடியும். உங்களுக்காக சுந்தரகாண்ட பாடல் இதோ!
சுந்தரகாண்டம் ஐந்தே நிமிடத்தில்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும்.
சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்.
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது.
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும்
அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன்
விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.
இடக்காகப் பேசிய இலங்கையின் காவல் தேவதையை
இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும்
இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான்.
கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்
சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.
ராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க.
கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்,
அன்னையின் கண்ணீர் கண்டு, அரக்கர் மேல் கோபம்
கொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் பெயர் சொல்ல,
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ
வாலுக்கென்றான்.
வைத்த நெருப்பினால் வெந்ததே
இலங்கை நகரம்.
அரக்கனின் அகந்தையை அழித்திட்ட
அனுமானும் அன்னை ஜானகியிடம்
அனுமதி பெற்றுக் கொண்டு
ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான்.
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர்
"கண்டேன் சீதையை என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக்
கொடுத்தான்.
மனம் கனிந்து மாருதியை
மார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க சித்தமானார்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ
அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.
அழித்திட்டான் இராவணனை
ஒழித்திட்டான் அதர்மத்தை
அயோத்தி சென்று ஸ்ரீராமர்
அகிலம் புகழ ஆட்சி செய்தான்.
அவனை சரண் அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.
எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே
சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!
உன்னைப் பணிகின்றோம், பன்முறை உன்னை
பணிகின்றோம்.
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெயஜெயராம்
0 Comments