38
நீ வரும் பாதை மேல்
என் மூச்சை நிறுத்திக் காத்திருக்கிறேன்...
சருகானவளைத் தேடிவந்த நீ,
இன்று வரத் தாமதமேனோ?
🌹🌹🌹🌹🌹🌹
கதிர்ரும் விக்னேஷும், மேகன் வீட்டிற்கு
வந்ததும், மிருத்திகா இருக்கும் இடத்தை பற்றி கூறினான் மேகன்.
"ஈஸ்வரியா காரணம்? இருக்காது மேகன்!
அவ அமைதியான பொண்ணு. மிருத்திகா சொன்ன அகிலாண்டேஸ்வரி வசனம் கடவுளைக் கூட
சொல்லியிருக்கலாம். " என்று கதிர் கூற,
"அது மாதிரி எங்க அப்பாவுக்கு என்ன?
நல்லாதானே இருக்கார்... எங்கம்மாவுக்காவது உடம்பு சரியில்லை.... மீரா, நிஜமாகவே
தீபிகாவின் அப்பாவை விசாரித்திருக்கலாம்." என்று விக்னேஷ் கூற. .
"எதையும் சாதாரணமா விட வேண்டாம்
விக்னேஷ். மிருத்திகா அங்கிருந்து தப்பிச் செல்ல வழி தேடியே, தீபியை
கல்யாணத்துக்கு அழைச்சிருக்கா. தீபியிடம் மிருத்திகா சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும்
ஏதாவது அர்த்தம் இருக்கும். நீங்க சொல்ற மாதிரி சம்பிரதாயமாகப் பேசும் மனநிலையில
அவ இருக்கமாட்டா." என்று விக்னேஷிடம் கூறிய மேகன், ,
"உங்க அப்பாவுக்கு உடம்புக்கு என்ன
செய்கிறது தீபி?” என்று தீபிகாவிடம் கேட்டான்.
"எங்கப்பாவுக்கு என்ன? நல்லாதான்
இருக்காங்க. மேம் பேசியதைக் கேட்ட தோழியை சமாளிக்கத்தான், அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு
சொன்னேன்." என்றாள் தீபிகா.
'பார்த்தாயா?' என்பது போல் மேகன் விக்னேஷ்சைப்
பார்க்க,
"ஈஸ்வரி விஷயத்தைப் பிறகு பார்க்கலாம்.
முதல்ல மாமாவுக்கு என்ன?'அவர் நல்லா இருந்தாதான் மகள் நல்லா இருக்கமுடியும்.' னு
சொல்லியிருக்கா மிருத்திகா. அவளை அடைச்சு வைக்கல... ஆனா அவ தப்பிச்சு வரலயே ஏன்?
நடுராத்திரி முயற்சி பண்ணியிருக்கலாமே? அவளை மாமாவைக் காட்டிதான் பயமுறுத்தி வச்சிருக்காங்கன்னு
நினைக்கிறேன்." என்று மேகன் கூறியதும்,
"தீபிகா சென்ற வீட்டுக்கும்
அழகுக்குமே என்ன சம்மந்தம் இருக்கிறது என்று தெரியவில்லை மேகன்... அழகுக்கு அண்ணனே
இல்லை... இருந்தாலும் நான் போய் அந்த வீட்டைப் பார்த்துட்டு வர்றேன்." என்று
விக்னேஷ் கூறினான்.
"வேண்டாம் தம்பி! இதுவரை அழகுக்கு
அண்ணன் இருப்பதே தெரியாத போது, அவர் வீட்டுக்கு நீங்க போனா சந்தேகம் வரும்...
மேகன் சொன்னது போல, மிருத்திகாவை ஏதோ சொல்லி பயமுறுத்தாவிட்டால் அவ தப்பிச்சு
வந்திருக்க மாட்டாளா?" என்று மேகனின் ஆச்சி கேட்டார்கள்.
"சரி! இப்ப என்ன பண்ணுவோம்? சும்மாயிருக்கும்
அப்பாவை எப்படிப் பார்த்துக் கொள்வது?" என்று கதிர் கேட்டான்.
"எனக்கு ஒரு சந்தேகம்! நீங்க தீபா
அக்காவிற்கு ஃபோன் பண்ணி, மாமாவை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரச் சொல்லுங்க... பிறகு
அடுத்து என்ன செய்யலாம்னு யோசிப்போம்." என்றான் மேகன்.
"உங்களுக்கு என்ன சந்தேகம்
மேகன்?" என்று கதிர் கேட்க,
"மாமா வீட்டுக்கு வரட்டும்
சொல்றேன்." என்றான் மேகன்.
விக்னேஷ் தீபாவிற்கு ஃபோன் செய்து,
அவனுடைய அப்பாவிடம் ஃபோனை கொடுக்கச் சொன்னான். அவர் ஃபோனை வாங்கவும்,
"அப்பா ஒரு முக்கியமான விஷயம்
பேசனும் நம்ம வீட்டுக்கு வாங்க." என்று விக்னேஷ் கூறியதும்,
"என்னடா? மீரா வந்துட்டாளா?"
என்று ஆர்வமாகக் கேட்டார்.
"அது பத்தி தான் பேசனும், இப்ப
கதிர் அங்க ஆஸ்பத்திரிக்கு வந்ததும் நீங்க தீபாவோட நம்ம வீட்டுக்கு வாங்க."
"சரிடா"
"கதிர் நீ கிளம்பு..." என்று
கதிரிடம் கூறி விட்டு நாம நம்ம வீட்டுக்கு போவோமா மேகன்?" என்று மேகனிடம்
கேட்டான்.
"முதல்ல மாமா கிளம்பட்டும்."
என்று கூறினான் மேகன்.
சிறிது நேரத்தில் கதிர், அவனுடைய அம்மாவை
அட்மிட் பண்ணியிருந்த மருத்துவமனைக்குச் சென்றான். அவனைப் பார்த்ததும்,
"நான் வரும்வரை நீயும் நித்யாவும்
அம்மாயிருக்கும் அறையிலேயே இருங்க." என்று கதிரிடம் கூறி விட்டு தீபாவுடன்
அப்பா, மருத்துவமனை வாசலை நோக்கி நடந்தார்... கூடவே, பஸ் ஏற்றிவிட கதிர்ரும்
வந்தான். அவர்கள் வெளியே செல்வதைப் பார்த்த நர்ஸ்,
"எங்கே போறீங்க? அந்த அம்மாவுக்குத்
துணையா இருங்க..." என்றாள்.
"எங்கம்மாவிற்கு நானும், என்
மனைவியும் துணைக்கு இருக்கோம் சிஸ்டர்... அப்பா வீடுவரை போகவேண்டியிருக்கு."
என்று நர்ஸிடம் கூறிவிட்டு நடந்தான் கதிர்.
வாசல் படியைத் தாண்டியிருப்பார்கள்...
பின்னாடியே ஓடிவந்த நர்ஸ், "உங்க மனைவிக்குத் திடீர்னு பல்ஸ் இறங்கிடுச்சு
உங்களை டாக்டர் கூப்பிடுறார்." என்றாள்.
"ரெண்டுநாளா நல்லாதானே
இருந்தாங்க?" என்று கதிர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனுடைய அப்பா வேகமாக
டாக்டர் இருக்கும் அறைக்குச் சென்றார்.. அதேசமயம் அம்மாவின் அறையிலிருந்து வெளியே
வந்த நித்யா,
"என்னங்க திடீர்னு அத்தைக்கு மூச்சு
வாங்குச்சு... நர்ஸ் டாக்டர கூட்டிட்டு வரப் போயிருக்காங்க." என்று சொல்ல,
கதிர் வேகமாக அவன் அம்மாவைப் பார்க்க ஓடினான். அங்கே அவனுடைய அம்மாவுக்கு மூச்சு
வேகமாக இழுத்துக் கொண்டிருந்தது.
"அம்மா! அம்மா!" என்று கதிர்
அழைக்க, அதற்குள் டாக்டர் உள்ளே வந்தார்.
"நீங்க எல்லாரும் கொஞ்சம் வெளியே
இருங்க டாக்டர் செக்அப் பண்ணட்டும்." என்றாள் நர்ஸ்.
கதிர், தீபா, நித்யா, அப்பா நால்வரும்
வெளியே வந்தனர். மிருத்திகாவின் அப்பா ஒரு இருக்கையில் அமர்ந்து கொள்ள, தீபா,
விக்னேஷுக்கு ஃபோன் பண்ணி விபரம் கூறினாள்.
தீபா, விக்னேஷிற்குத்தான் ஃபோன்
பண்ணுகிறாள் என்று தெரிந்து கதிர், தீபாவை நோக்கி நடந்தான்.
விஷயம் கேள்விப்பட்டதும் விக்னேஷ் மேகன்
வீட்டினரிடம் கூறிவிட்டு புறப்பட ஆயத்தமாக,
"கொஞ்சம் பொறுங்க விக்னேஷ்! நான்
நினைச்சதுதான் நடந்திருக்கு... நான் சொன்னா தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்! உங்க
அம்மா இப்ப நடிக்கிறாங்க..."
"மேகன்! எங்க அம்மாவுக்கு வாய்
கொஞ்சம் நீளம்தான். அதுக்காக அவங்களுக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் இப்படி
பேசுறது சரியில்லை." என்றான் விக்னேஷ் வருத்தமாக.
"விக்னேஷ் பதட்டபடாதீங்க... கொஞ்சம்
அமைதியா இருங்க... மாமா வெளியே வரும் போது நர்ஸ், 'அத்தைக்கு பல்ஸ் இறங்கிடுச்சு
டாக்டர் கூப்பிடுறார் ' னு சொல்லியிருக்கா... ஆனா தீபா அக்கா, அத்தை இருக்கும்
அறைக்குப் போன பிறகே டாக்டர் செக்அப் பண்ண வந்திருக்கார்... பிறகு எப்படி
அத்தைக்கு பல்ஸ் இறங்கியது டாக்டருக்குத் தெரிஞ்சது?" என்று வேக வேகமாக,
விக்னேஷிற்குப் புரிய வேண்டுமே என்ற ஆதங்கத்தில் மேகன் கூறினான்.
விக்னேஷுக்கும் சந்தேகம் வர,
"என்ன சொல்ல வர்றீங்க?"
என்றான் விக்னேஷ்.
"கதிருக்கு ஃபோன் பண்ணுங்க."
அதற்குள் கதிரே விக்னேஷுக்கு ஃபோன் பண்ண,
அதை வாங்கினான் மேகன். விக்னேஷிடம் கேட்ட அதே சந்தேகத்தை கதிரிடமும் கேட்க,
"எனக்கும் ஏதோ தப்பா இருக்கேன்னு
தோணுச்சு... ஆனா... சரி! இப்ப என்ன பண்ண மேகன்?" என்று கேட்டான் கதிர்.
"மருத்துவமனையை விட்டு வெளியே வந்து
பேசுங்க கதிர்.... முடிந்தவரை என் பெயர் சொல்லாம பேசுங்க" என்று கூறிய ஐந்து
நிமிடத்தில்,
"வெளியே வந்துட்டேன்
சொல்லுங்க.." என்று கேட்டான் கதிர்.
"மாமாவை ஹௌஸ் அரஸ்ட் மாதிரி,
ஆஸ்பத்திரியிலேயே வச்சிருக்காங்க கதிர்... மிருத்திகா தப்பிக்க முயற்சி செஞ்சா,
மாமாவுக்கு ஆபத்துன்னு பயமுறுத்தி வச்சிருக்காங்க..."
"அடக்கடவுளே! இப்ப என்ன
பண்றது?"
"அத்தைக்கு ஒன்னும் இல்ல...
பயப்படாதீங்க... மாமா ஆஸ்பத்திரியை விட்டு வெளியே போறாருன்னதும் அத்தை
நடிக்கிறாங்க... அதனால மாமாவை ஆஸ்பத்திரிய விட்டு எப்படி வெளியே கூட்டிட்டு வர்றதுன்னு
யோசிப்போம்... எதுக்கும் இன்னும் ஒரு தடவ மாமாவை வெளியே கூட்டிட்டு வாங்க... யாராவது
தடுத்தாங்கன்னா... ஒன்னும் பேசாம உள்ள போயிடுங்க. ஆனா மாமாவைத் தனியா விடாதீங்க
நானும் விக்னேஷ் கூட வர்றேன்." என்று கூறி விட்டு ஃபோனை விக்னேஷிடம் கொடுத்து
விட்டு, பிறைசூடனிடம்
"அப்பா நீங்க தீபியை அவ வீட்டுக்கு
கூட்டிட்டுப் போயிடுங்க. .. சிபி என்னுடன் வரட்டும்." என்ற மேகன் போலீஸ்
நண்பருக்கு ஃபோன் செய்து, இதுவரை நடந்ததைக் கூறி, மாமாவை பிடிச்சுதான்
வச்சிருகுக்காங்கன்னு தெளிவாயிட்டா. எங்களுக்கு உங்க உதவி தேவைப்படும்"என்று
கூறினான். அவர் ஏதோ கூற சரி!சரி! என்று கூறிவிட்டு ஃபோனை வைத்து விட்டான்.
மேகனும், விக்னேஷும் மருத்துவ மனைக்குள்
சென்று கதிரைப் பார்க்க,
"நீங்க சொன்னதுதான் நடக்குது போல மேகன்.
மறுபடியும் அப்பாவை வெளிய கூட்டிட்டுப் போனோம். பின்னாடியே வார்டுபாய் வந்து
டாக்டர் கூப்பிட்டதா சொன்னான். ஆனா டாக்டர் முக்கியமான விஷயம் எதுவும் பேசல...
சும்மா! அப்பாவின் தைரியத்தைக் குலைப்பதுபோல் ஏதேதோ பேசிட்டு அனுப்பி வச்சார்."
என்றான் ரகசியத் தொனியில்.
மேகன் உள்ளே வந்த ஐந்து நிமிடத்தில்
நர்ஸ் வந்து, பேசன்ட் கூட ஒருவர் இருந்தால் போதும்... மத்தவங்க கிளம்புங்க"
என்றாள்.
"சரி விக்னேஷ் இன்னைக்கு நானும்,
சிபியும் ஆஸ்பத்திரில இருக்கோம் நீங்க எல்லாரும் கிளம்புங்க." என்று மேகன்
சொன்னதும் அந்த நர்ஸ் மாயமானாள்.
"மறுபடியும் அத்தைக்கு பல்ஸ்
குறையும் பார்." என்று மேகன் சிரித்தபடி பாலசௌந்தரி இருந்த அறைக்குச் செல்ல,
எதிர்பார்த்ததை விட பெரிய டிராமா நடந்து கொண்டிருந்தது..
"எனக்கு என்னவோ ரொம்ப பயமா
இருக்குங்க என்னை விட்டு போயிடாதீங்க. ." என்று மிருத்திகாவின் அப்பாவிடம்
பாலசௌந்தரி அழுது கொண்டிருந்தார்.
மேகன், சிபி, கதிர், விக்னேஷ் நால்வரும்
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"சரி! நாங்க கிளம்புறோம்..."
என்று கூறி மேகன் சிபியுடன் கிளம்ப...
'என்ன இவர் ஒன்னும் சொல்லாம கிளம்புறார்'
என்று நினைத்து கதிர் கூடவே வர,
ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தபிறகு,
கதிரை திரும்பிப் பார்த்த மேகன்,
"அத்தை ட்ட ஃபோன் இருக்கா?"
என்று கேட்டான்.
"இல்ல!"
"நீ உள்ள போனதும் உன் ஃபோனை அத்தைக்கு
பக்கத்துல வச்சுட்டு, நித்யாகிட்ட பேசுறது போல பேசு.
"மிருத்திகாவ யாரு கூட்டிட்டு
போயிருக்காங்கன்னு தெரியல.. நிச்சயமா அழகு இல்லை போல" அப்டீனு சொல்லி
நிறுத்து. நிச்சயம் "எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க" ன்னு நித்யாவோ,
தீபாக்கா வோ கேப்பாங்க,
"அழகு, மிருத்திகாவைக் கல்யாணம்
பண்ணும் ஆசையிலதானே கூட்டிட்டுப் போயிருப்பான்? மிருத்திகாவை அவன் கல்யாணத்துக்குக்
கட்டாயப் படுத்தும் போது மிருத்திகா, அவளுக்கும், மேகனுக்கும் எல்லாம் முடிஞ்சுருச்சுன்னு
சொல்லியிருப்பா... அப்படி சொன்ன பிறகு அழகு, மிருத்திகாவை கல்யாணம் பண்ணுவானா?
வெளியே அனுப்பியிருப்பான்... ஆனா இன்னும் மிருத்திகா இருக்குமிடம் தெரியலையே...
அப்போ வேற எங்கேயோ தான் இருக்கான்னு சொல்லி முடிச்சுட்டு, எல்லோரையும் கூட்டிட்டு
ஃபோனை எடுக்காமல், கேன்டீனுக்குப் போயிடு." என்றான் மேகன்.
"இதுனால என்ன நடக்கும்?"
"நீ எல்லோரையும் கூட்டிட்டு வெளியே
போற மாதிரி போயி விக்னேஷ்கூட எல்லாரையும் அனுப்பிட்டு அத்தையோட அறை வாசல்ல உட்கார்ந்து
உள்ளே நடப்பதைக் கவனி, அத்தை, அழகுக்கு ஃபோன் செய்து, மிருத்திகாவுக்கும்
மேகனுக்குமிடையே எதுவுமே நடக்கலை... மிருத்திகா சொல்றத நம்பாதீங்கன்னு
சொல்வாங்க... அப்படி மட்டும் அத்தை சொல்லிட்டாங்க... முடிஞ்சது.... அழகு, அத்தை
சொல்றத நம்பாம, நேர்லயோ ஃபோன்லயோ மிருத்திகாவ கூப்பிட்டுக் கேட்பான்..
உன் தங்கை புத்திசாலி, "தப்பு
நடந்துடுச்சு!" ன்னு சொல்வா. .. அவனுங்களே அனுப்பி வச்சாலும் ஆச்சரியப்பட ஒன்னுமில்ல."
என்று கூறி முடித்தான் மேகன்.
"நீ சொல்ற மாதிரி நடந்தா
சந்தோஷம்... ஆனா நாம எப்படிக் கண்டு பிடிக்கிறது?."
"முதல்ல நீ கொளுத்திப் போடு...
கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு... நாளைக்கு மதியம்வரை நாம
எதிர்பார்த்தது நடக்கலைனா. .. மாமாவை நாம கடத்துறதத் தவிர வேற வழியில்ல." என்று
கூறினான்.
"அப்பாவைக் கடத்துறதா?"
"ஆஸ்பத்திரியை விட்டு வெளியே
கூட்டிட்டு போயிடுவோம்னு சொன்னேன்."
"சரி!" என்று கூறி விட்டு
கதிர் ஆஸ்பத்திரிக்கு உள்ளேயும், மேகன் அவன் வீட்டிற்கும் சென்றனர்.
மேகனின் இந்த திட்டம் பலிக்குமா?
அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்!
❤❤❤❤❤❤
1 Comments
Sema clever minded characters superu
ReplyDelete