ஹோட்டல் சுவையில் கிச்சடி
கிச்சடி செய்வது மிகவும் எளிது மற்றும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
ரவை 100 கிராம்
கடலை எண்ணெய் - 100 மிலி
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி - 2 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
பீன்ஸ் - 5 லிருந்து 8
உருளைக்கிழங்கு - 1
பச்சைப்பட்டாணி - கொஞ்சம்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிது
கருவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
சீனி - ½ டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயில் ரவையை மிதமான தீயில் வறுக்கவும், நல்ல மணம் வரும்வரை வறுத்த பிறகு தனியாக எடுத்து வைக்கவும்.
இஞ்சியை கொஞ்சம் பெரிய அளவில் துருவி கொள்ளவும்.
இரண்டு பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறி கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து ஐம்பது மிலி கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு உளுந்தம் பருப்பு போட்டு குறைந்த தீயில் பொரிய விடுங்கள்.
உளுத்தம் பருப்பு பொன்னிறமானதும் அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் முந்திரிப்பருப்பை சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்
முந்திரிப் பருப்பு நிறம் மாறவும் இரண்டு துண்டாக நறுக்கி வைத்துள்ள இரண்டு பச்சை மிளகாய் இரண்டு கொத்து கருவேப்பிலையை சேர்த்து கிளறுங்கள்.
அதனுடன் இரண்டு ஸ்பூன் துருவிய இஞ்சியை சேர்த்து கிளறுங்கள்.
இஞ்சி கலர் மாறவும் அதில் பொடியாக நறுக்கி வைத்த ஒரு வெங்காயத்தை சேர்த்து நெருப்பின் அளவை கூட்டி எ மற்றும்கிளறி, நிறம் மாறுவதற்கு முன்னால் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இரண்டு தக்காளியை சேர்த்து வதக்குங்கள்.
தக்காளி கொஞ்சம் வதங்கும் பொழுதே அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் சீனி, கிச்சடிக்குத் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறுங்கள்.
தக்காளி நன்கு வதங்கவும், நறுக்கி வைத்திருக்கும் காய்களை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கி அது வெந்து வரும் அளவுக்கு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
காய்கள் வெந்ததும் அடுப்பின் அளவை குறைத்து, ஒரு கிளறு கிளறி விட்டு, லேசாக வருத்த நூறு மில்லி ரவையை சேர்த்து வறுபடும் வரை கிளறுங்கள்.
தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைத்து கிச்சடியில் சேர்த்து கிளறுங்கள்.
தண்ணீருடன் கிச்சடி நன்கு கலந்து வரும் அதில் 25 மில்லி எண்ணையை ஊற்றி, அதில் அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலை சேர்த்து கலந்துவிட்டு அடுப்பின் அளவை நன்றாக குறைத்துவிட்டு வாணலியை மூடி விடுங்கள்.
இரண்டு நிமிடம் கழித்து மூடியை திறந்து நன்கு கிளறிவிட்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடுங்கள் பின் இறுதியாக மீதமுள்ள 25 மில்லி எண்ணெய்யை ஊற்றி அடுப்பை அணைத்து விடுங்கள்
சுவையான ஹோட்டல் ஸ்டைல் கிச்சடி தயார்.
குறிப்பு:
இந்த கிச்சடி ஹோட்டல் ஸ்டைல் என்பதால் 100 மிலி எண்ணெய் சேர்த்து இருக்கிறோம். வீட்டில் செய்யும் பொழுது அதிக எண்ணெய் சேர்க்க வேண்டாம் என்று நினைத்தால், பாதி அளவு, 1/3 அளவு சேர்க்கலாம்.
கிச்சடியை காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம் சேர்க்காமலும் செய்யலாம்.
0 Comments