ப்ரோக்கோலி மிளகு பிரட்டல்.
தேவையான பொருட்கள்:
ப்ரோக்கோலி - 200 கிராம்
கார்ன் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
குடைமிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
ஓரிகானோ - 1 ஸ்பூன்
மல்லித்தழை - கொஞ்சம்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது உப்பு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
தண்ணீர் நன்கு கொதித்ததும், சிறு சிறு துண்டுகளாக பிரித்து வைத்திருந்த ப்ரோக்கோலியை அதில் சேர்த்து, தண்ணீரில் சூடு ஆறியதும் ப்ரோக்கொலியை தண்ணீரிலிருந்து வெளியே தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்வீட் கார்ன் அல்லது சாதாரண கார்ன் எதுவாக இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு வாணலியில் ப்ரொக்கொலியையும், கார்னையும் சேர்த்து, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடுங்கள்.
கார்ன் நன்றாக வெந்ததும் அதை தனியாக எடுத்து வைத்துவிட்டு, அதே வானொலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கி வைத்த பெரிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் கண்ணாடி பதம் வரவும், பொடியாக நறுக்கிய தக்காளி பழத்தையும் சேர்த்து நன்கு வதக்குங்கள்.
தக்காளி வெந்து வருவதற்காக கொஞ்சம் உப்பு சேர்த்து கிளறுங்கள்.
தக்காளி தோல் உரியும் அளவுக்கு வதங்கி வரும் போது, வேகவைத்த கார்னையும் ப்ரோக்கோலியையும் சேர்த்து, நன்கு கலந்து விடுங்கள்.
ஓரிகானோ சேர்த்து நன்கு பிரட்டி விடுங்கள்.
ஓரளவு எல்லாம் நன்றாக வதக்கவும், காரத்திற்கு ஏற்ப மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி, அடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள்.
மசாலாக்கள் இல்லாமல் எளிதாக செய்யக்கூடிய, மிக சுவையான
ப்ரோக்கோலி மிளகு பிரட்டல் தயார்!
🙏🙏🙏🍲🥗🍜🙏🙏🙏
0 Comments