கோவைக்காய் வறுவல்

கோவைக்காய் வறுவல்



கோவைக்காய் வறுவல் செய்வது மிகவும் எளிதான மற்றும் சுவையான ஒரு உணவாகும். இதைச் செய்வதற்கான செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது


தேவையான பொருட்கள்:

கோவைக்காய் - கால் கிலோ

பூண்டு - 10 பல்

கறிவேப்பிலை - தேவைக்கு

பெரிய வெங்காயம் - 2

உப்பு -தேவைக்கு

மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன் 

மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்

சாம்பார் தூள் - 1 ஸ்பூன்


மசாலாத்தூள்:

உளுந்தம் பருப்பு - 3 டீஸ்பூன்

தனியா - 2 ஸ்பூன்

நிலக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

சிவப்பு மிளகாய் - காலத்திற்கேற்ப

துருவிய தேங்காய் 3 - டேபிள் ஸ்பூன்



செய்முறை :

வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.


பூண்டு சற்று நிறம் மாறவும், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து கிளறுங்கள்‌.


பின் சிறிது உப்பு சேர்த்து கிளறவும்.


அதில் கோவை காயையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்கவும்.


அடுப்பை மீடியத்தில் வைத்து, ஐந்து நிமிடம் மூடி வைத்து விடவும்.


அந்த சமயத்தில் மசாலா தூளுக்கு தேவையான பொருட்களை, வெறும் வாணலியில் வறுத்து கரகரப்பாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.


கோவைக்காய் வதங்கவும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். 


கோவைக்காய் நன்றாக வதங்கியதும் சிறிதளவு தண்ணீரை தெளித்து, அடுப்பை சிம்மில் வைத்து, ஐந்து நிமிடம் வேக விடுங்கள்.


அவ்வப்போது மூடியைத் திறந்து கோவைக்காயை கிளறுங்கள்.


 கோவைக்காய் நன்றாக வெந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலா தூளை இரண்டு ஸ்பூன் சேர்த்து அடுப்பை ஹையில் வைத்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கி இறக்கவும்.


சுவையான கோவைக்காய் வறுவல் தயார்! இதை சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறலாம்.


🙏🙏🙏🍜🍲🥗🙏🙏🙏










Post a Comment

0 Comments