கேழ்வரகு அடை
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப்
அரிசிமாவு - ¼ கப்
பெரிய வெங்காயம் - 1
கொத்தமல்லி இலை - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 இன்ச்
கருவேப்பிலை - 1 கொத்து
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
முருங்கை கீரை - 1 கைப்பிடி
தேங்காய் துருவல்
எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
கேழ்வரகு மாவுடன் அரிசி மாவையும் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும்.
அரிசி மாவு சேர்க்கும் இடத்தில் இட்லிக்காக அரைத்து வைத்திருக்கும் மாவு அல்லது அன்று ஆக்கிய சாதம் ஒரு கை அளவு கேழ்வரகு மாவுடன் சேர்க்கலாம்.
முருங்கைக் கீரையில் இலைகளை மட்டும் ஆய்ந்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் சேர்த்து வெடிக்கவும், கடலைப் பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங்கள்.
பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கலர் மாறும் வரை வதக்கி, துருவிய இஞ்சி சேர்த்து இரண்டு கிளறு கிளறி விட்டு, வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்குங்கள்.
வெங்காயம் கண்ணாடிப்பதம் வந்ததும், அதில் ஆய்ந்து வைத்திருந்த முருங்கை கீரை சேர்த்து, கீரைக்குத் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்குங்கள்.
கீரை நன்கு சுருளவும், கொஞ்சமாக தண்ணீர் தெளித்து வேக விடவும்.
கீரையில் நீர் வற்றவும், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி, இறுதியில் மல்லித்தழை தூவி இறக்கவும்,
அதை எடுத்து, கலந்து வைத்திருக்கும் கேழ்வரகு மாவில் போட்டு நன்கு கலக்கி விடுங்கள்.
தோசை கல்லில் தோசை போல் வார்த்து சுற்றிலும் எண்ணெய் ஊற்றி இருபுறமும் கொஞ்சமாக கருக விட்டு எடுக்கவும்.
சுவையான கேழ்வரகு அடை ரெடி.
குறிப்பு:
முருங்கைக்கீரை சேர்ப்பது உங்கள் விருப்பம்
🙏🙏🙏🥗🙏🙏🙏
0 Comments