இஞ்சி தேங்காய் சட்னி

 இஞ்சி தேங்காய் சட்னி




 தேவையான பொருட்கள்: 

துருவிய தேங்காய் - 1 கப் 

இஞ்சி - 2 துண்டு (தோல் நீக்கி கழுவியது) 

பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) 

புளி - சிறிது 

உப்பு - தேவையான அளவு 


தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன் 

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 

கறிவேப்பிலை - சிறிது 

தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன் 


செய்முறை: 

முதலில் மிக்ஸியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதனை சட்னியில் ஊற்றி கலந்தால், 

இஞ்சி தேங்காய் சட்னி ரெடி!!!

🙏🙏🙏🥗🙏🙏🙏

Post a Comment

0 Comments