முட்டை கீமா மசாலா
தேவையான பொருட்கள்:
அவித்த முட்டை -5
கடுகு - 1டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டே.ஸ்பூன்
தக்காளி - 3
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டேஸ்பூன்
கரம் மசாலா தூள். - ½ டேஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
மல்லித்தழை - சிறிது
செய்முறை:
அவித்த முட்டையை கேரட் துருவியில் நன்றாக துருவிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை கிளறி பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்,
அதன் பச்சை வாசம் போனதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
தக்காளி வதங்கவும் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து லேசாக கிளறி
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பச்சை வாசம் போனதும் துருவிய முட்டை சேர்த்து எண்ணெய் பிரிந்து வந்ததும்
மல்லித்தழை தூவி இறக்கவும்.
சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.
0 Comments