ஒயிட் சாஸ் (White sauce)

  ஒயிட் சாஸ் (White sauce)


தேவையான பொருட்கள்:

பட்டர் : 2 ஸ்பூன்

மைதா மாவு - 2 ஸ்பூன்


பால் - 1 ½ கப்


மிளகுத்தூள் - 1 ஸ்பூன்


உப்பு - ½ ஸ்பூன்


 மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 1 ஸ்பூன்


 ஓரிகனோ 


(ஓமவள்ளி இலை) - 1 ஸ்பூன்


சீஸ் - ¼ கப்



செய்முறை:


வாணலியில் இரண்டு டீஸ்பூன் பட்டர் சேர்த்து அதில் மைதா மாவு போட்டு வாசனை போகும்வரை கிளறுங்கள்.  


அதில் பாலை ஊற்றி குறைந்த தீயில் கிளறுங்கள். அதில் உப்பு, மிளகு தூள், மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ், ஓரிகானோ போட்டு கிளறுங்கள்.


பால் கொஞ்சம் கெட்டியானதும் இறக்கி வையுங்கள்


இறக்கவேண்டிய பதம்: ஒரு ஸ்பூனால் சாஸ்ஐ கிளறி ஸ்பூனை மட்டும் எடுத்தால் வாணலியில் இருக்கும் சாஸ் போலவே ஸ்பூனிலும் வெள்ளைக் கலரிலேயே இருக்க வேண்டும்.


 ஓரிகானோ செய்முறை:


குறைந்த தீயில் ஓமவள்ளி இலையை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக்கொள்ளுங்கள்.


மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் செய்முறை:


துளசி இலை: 3


புதினா இலை -3


கொத்தமல்லி இலை : 3


கரிவேப்பிலை - 3


வெந்தயக்கீரை -2 அல்லது 


வெந்தயம் - 3 நம்பர்


கொடுத்துள்ள இலைகளை வெறும் வாணலியில் மிதமான தீயில் வறுத்து மிக்ஸியில் பொடிசெய்து கொள்ளவும்.

அல்லது

கொடுத்துள்ள இலைகளை நிழலில் நன்கு காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.















Post a Comment

0 Comments