.என்னை மறந்ததேன் தென்றலே
இன்று நீ என்னிலை சொல்லிவா
காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு
கனியாக மாறாதோ
கலையாத காதல் நிலையானதென்று
அறியாமல் சொல்லிவைத்தாயோ -
உன்னைஅறியாத பெண்ணின் மனவாசல் கண்டு
திறவாமல் எங்கே சென்றாயோ
நிழலான தோற்றம் நிஜமானதென்று
நீயாளும் நாளும் வருமோ - இந்த
நிலமாளும் மன்னன் நீயானபோதும்
நானாளும் சொந்தம் இல்லையோ
கண்டாலும் போதும் கண்கள்
என் ஆவல் தீரும் மன்னவா
சொன்னாலும் போதும் நெஞ்சம்
கனியாக மாறாதோ
என்னை மறந்ததேன் தென்றலே
இன்று நீ என்னிலை சொல்லிவா
காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு
கனியாக மாறாதோ
0 Comments