சுவையான தக்காளி சாதம்

 சுவையான தக்காளி சாதம்




தேவையான பொருட்கள்:


பெரிய வெங்காயம் - 2 


தக்காளி - 4 அல்லது 5

தக்காளியின் அளவைப் பொறுத்து.


பச்சை மிளகாய் - 2 அல்லது 3


இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்


புதினா  - 1/2 கைப்பிடி 

மல்லித்தழை - 1 கைப்பிடி

தயிர் - 3 ஸ்பூன்


பட்டை - 2 

கிராம்பு - 4 

அன்னாசி மொட்டு ஸ்டார் - 1

ஏலக்காய் - 2

கல்பாசி - ¼ இஞ்ச்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

முந்திரி பருப்பு - 6,10

பிரியாணி இலை - ½


மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்

மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் அல்லது கடலை எண்ணெய் - தேவைக்கு

நெய் - 3 ஸ்பூன் 

உப்பு - தேவைக்கு


அரிசி - 1/4படி



 செய்முறை:-


வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து, பட்டை கிராம்பு, ஸ்டார், ஏலக்காய், கடல் பாசி, சோம்பு, பிரியாணி இலை, முந்திரி பருப்பு சேர்த்து முந்திரிப் பருப்பு சிவக்க வதக்குங்கள்.


பெரிய வெங்காயத்தை நீளமாக கட் பண்ணி அதில் சேர்த்து, பச்சை மிளகாயை கீறி சேர்த்து, வெங்காயம் நன்றாக ப்ரௌன் நிறம் வரும் வரை வதக்கவும். தக்காளி சாதத்தின் சுவையே வெங்காயம் நன்கு வறுபடுவதில் தான் இருக்கிறது.


அதில் புதினா மல்லித்தழை போட்டு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.


ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறவும் (தக்காளி சாதத்தில் மிளகாய் தூள் சுவையை விட பச்சை மிளகாய் சுவை சிறந்ததாக இருக்கும் தங்கள் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் சேர்த்து வாசனைக்காக மிளகாய் தூள் சேர்க்கவும்)


தயிரை சேர்த்து கிளறவும்.


தக்காளியை ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும். (200 கிராம் அரிசிக்கு 2 தக்காளியாவது தேவைப்படும்.)


கல் உப்பு சேர்த்து தக்காளி நன்கு  பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.


என்னை கசிந்து மேலே வரவும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.


கலவை கொதித்ததும் உப்பு காரம் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.


இதற்கிடையில் மற்றொரு வாணலியில் களைந்து எடுத்த அரிசியோடு தேங்காய் எண்ணெய் சிறிது நெய் விட்டு லேசாக வாசம் வரும் வரை கிளறி எடுத்து வைத்துக் கொள்ளவும்.


இவ்வாறு எடுத்து வைத்த அரிசியை உக்கரையில் போட்டு கலவையுடன் நன்றாக கலந்து விட்டு ஒரு கொதி வரவும் மீண்டும் சுவை பார்த்து குக்கரை மூடி விசில் வைத்து விடவும் மூன்று விசில் 10 நிமிடம் சிம்மில் வைத்து குக்கரை இறக்கி, பச்சை மிளகாயை தனியாக எடுத்து வைத்துவிட்டு சாதத்தை நன்கு கிளறி பரிமாறுங்கள்.


🍜🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🍜




Post a Comment

0 Comments