செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:-
கத்தரிக்காய் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2 அல்லது
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - வெங்காயத்தில் பாதி
பூண்டு - 5
பொரிகடலை - ஒரு ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 5,6
தேங்காய் சில் - 2
புளி - 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/4spn
மிளகாய் தூள் - 2spn தேவைக்கு
மல்லித்தூள் 2 spn
(மிளகாய் தூள் மல்லித்தூள் சம அளவு இருக்க வேண்டும்)
(கரம் மசாலா முழு பொருட்கள்)
பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ பிரியாணி இலை, கல்பாசி
கசகசா - அரை ஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன்
நல்எண்ணெய் உப்பு - தேவைக்கு
செய்முறை:-
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கத்தரிக்காய் போட்டு நன்கு வதக்குங்கள்..
கத்தரிக்காய் நன்கு வதங்கவும், எண்ணெயில் இருந்து கத்தரிக்காயை எடுத்து விட்டு,
அதில் சோம்பு முந்திரிப்பருப்பு, பொரிகடலை கசகசா, பூண்டு, தேங்காய் பூ போட்டு பொன்நிறமாகும் வரை வறுத்து தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.
(மசாலா கலவை கொஞ்சமாக சேர்க்க வேண்டும்… 2அல்லது 3 spn போதுமானது. அதிகம் சேர்த்தால் குருமா போலாகிவிடும் )
அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் பிரியாணி இலை, பட்டை கிராம்பு வகைகள் சேர்த்து, வெந்தயம் சோம்பு போட்டு சிவக்கவும்,
வெங்காயம் கருவேப்பிலை போட்டு வதக்கி, வெங்காயம் நன்கு சிவந்து வரவும்,
மஞ்சள்தூள் சேர்த்து கிளறியபின்
தக்காளி சேர்த்து வதக்குங்கள். தக்காளி நன்கு வதங்கவும் மிளகாய் தூள் மல்லித்தூள் சம அளவு சேர்த்துக் கிளறுங்கள்.
பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவும், புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் உப்பு சேர்த்து, பின் அரைத்த மசாலா கலவை சேர்த்து கிளறி, கொதிக்கவும் வதக்கி வைத்த கத்திரிக்காய் சேருங்கள்.
பின் மல்லித்தழை சேர்த்து இறக்குமுன் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெடி!
0 Comments