நில்லாயோ நில்லாயோ
மஞ்சள் மேகம்
ஒரு மஞ்சள் மேகம்
சிறு பெண்ணாகி முன்னே போகும்
பதறும் உடலும் என் கதறும் உயிரும்
அவள் போ் கேட்டு பின்னே போகும்
செல்ல பூவே
நான் உன்னை கண்டேன்
சில்லு சில்லாய்
உயிா் சிதற கண்டேன்
நில்லாயோ நில்லாயோ
உன் போ் என்ன
உன்னாலே மறந்தேனே
என் போ் என்ன
கனவா கனவா
நான் காண்பது கனவா
என் கண் முன்னே கடவுள் துகளா
காற்றின் உடலா கம்பன் கவிதை மடலா
இவள் தென்நாட்டின் நான்காம் கடலா
நில்லாயோ நில்லாயோ
உன் போ் என்ன
உன்னாலே மறந்தேனே
என் போ் என்ன
செம்பொன் சிலையோ
இவள் ஐம்பொன் அழகோ
பிரம்மன் மகளோ இவள்
பெண்பால் வெயிலோ
நான் உன்னை போன்ற
பெண்ணை கண்டதில்லை
என் உயிாில் பாதி
யாரும் கொன்றதில்லை
முன் அழகால்
முட்டி மோட்சம் கொடு
இல்லை பின் முடியால்
என்னை தூக்கிலிடு
நில்லாயோ நில்லாயோ
உன் போ் என்ன
உன்னாலே மறந்தேனே
என் போ் என்ன
0 Comments