சீரக சாதம்
பாஸ்மதி அரிசி, அல்லது ஏதோ ஒரு அரிசி - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 2
அன்னாசிப்பூ - 1
ப்ரிஞ்சி இலை - 1
இலவங்கப்பட்டை - 2
நெய் - தேவையான அளவு
முந்திரி பருப்பு - 10
பச்சை மிளகாய் - 1
காய்ந்த மிளகாய் -1
உப்பு - தேவையான அளவு
நெய் - 1 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 1 1/2 ஸ்பூன்
செய்முறை:-
முதலில்அரிசியை நீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். பின் அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை ஸ்பூன் கடலை எண்ணை, ஒன்றரை ஸ்பூன் நெய்யை ஊற்றி, கிராம்பு, அன்னாசிப்பூ, இலவங்கப்பட்டை, ப்ரிஞ்சி இலை சேர்த்து சிறிது நேரம் தாளிக்கவும்.
அதில் கீறிய பச்சைமிளகாய், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும்.
சிவப்பு மிளகாய், முந்திரி பருப்பு சேர்த்து சிவக்க வதங்கவும்
அதில் அரிசியைப் போட்டு சிறிது நேரம் வறுக்கவும்.
ஒரு கடாயில் 1 1/2 ஸ்பூன் சீரகம் போட்டு வறுத்ததும் கரகரப்பாக பொடித்து,
வதக்கிக் கொண்டிருக்கும் அரிசி கலவையில் கொட்டி வதக்கவும்.
பின் அதில் 2 கப் தண்ணீர் விட்டு, உப்பை சேர்த்து மூடி, 2 விசில் விட்டு இறக்கவும்.
இப்போது சுவையான சீரகம் சாதம் ரெடி..
இதனை உங்களுக்குப் பிடித்த கிரேவியுடன் பிசைந்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
🍜🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🍜
சீரக சாதம் மஸ்ரூம் மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, மற்றும் தாளித்த பருப்புடன் சுவையாக இருக்கும்.
0 Comments