உன் மனசுல
பாட்டு தான் இருக்குது
என் மனசத கேட்டு தான்
தவிக்குது
அதில் என்ன
வெச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும்
ராசையா
மனசு முழுதும்
இசை தான் உனக்கு
அதிலே எனக்கோர்
இடம் நீ ஒதுக்கு
பாட்டாலே
புள்ளி வெச்சு பார்வையில
தள்ளி வெச்சு பூத்திருந்த
என்னை சேர்ந்த தேவனே
போடாத சங்கதி
தான் போட ஒரு மேடை
உண்டு நாளு வெச்சு சேர
வாங்க ராசனே
நெஞ்சோடு
கூடு கட்டி நீங்க வந்து
வாழனும் நில்லாம பாட்டு
சொல்லி காலம் எல்லாம்
ஆளனும்
சொக்க தங்கம்
உங்களை தான் சொக்கி
சொக்கி பார்த்து தத்தளிச்சேன்
நித்தம் நித்தம் நான் பூத்து
உன் மனசுல
பாட்டு தான் இருக்குது
என் மனசத கேட்டு தான்
தவிக்குது
நீ பாடும் ராகம்
வந்து நிம்மதிய தந்ததய்யா
நேற்று வரை நெஞ்சில் ஆச
தோணல
பூவான பாட்டு
இந்த பொண்ண தொட்டு
போனதையா போன வழி
பார்த்த கண்ணு மூடல
உன்னோட
வாழ்ந்திருந்தா
ஊருக்கெல்லாம்
ராணி தான் என்னோட
ஆசை எல்லாம்
ஏத்துக்கணும் நீங்க தான்
உங்கள தான்
எண்ணி எண்ணி என்
உசுரு வாழும் சொல்லுமைய்யா
நல்ல சொல்லு சொன்னா போதும்
என் மனசுல
பாட்டு தான் இருக்குது
உன் மனசத கேட்டு தான்
தவிக்குது
நான் உன்னை
மட்டும் பாடும் குயிலு
தான் நீ என்னை எண்ணி
வாழும் மயிலு தான்
மனசு முழுதும்
இசைதான் எனக்கு
இசையொடுனக்கு
இடமும் இருக்கு
என் மனசுல
பாட்டு தான் இருக்குது
உன் மனசத கேட்டு தான்
தவிக்குது
0 Comments